இன்று பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தினமாக இருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்க்களம் பத்ர். இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கும் உலகம் முழுக்க பரவி விரவுவதற்கும் காரணமான ஒரு போர்க்களம். பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் அந்த போர்க்களத்தின் வழியாக ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கினான். அவற்றில் சிலதை நாம் இன்றைக்கு சிந்திக்கலாம்.
1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தான் முக்கியம்.
صدق الصحابة
في موالاتهم للمؤمنين، ومعاداتهم للكافرين، وقد ظهر ذلك في غزوة بدر، عندما قتل
عمر بن الخطاب خاله العاص بن هشام بن المغيرة، ولم يلتفت إلى قرابته منه، وهَمّ
أبو بكر بقتل ابنه عبد الرحمن، وقتل حمزة وعلي وعبيدة بن الحارث أبناء عمهم عتبة
وشيبة والوليد بن عتبة، وذلك في المبارزة،
ولما استشار
النبي صلى الله عليه وسلم عمر رضي الله عنه في الأسرى قال : أرى أن تمكِّنَّا
فنضربَ أعناقهم ، فتمكنَ علياً من عَقِيل فيضرب عنقه ، وتمكِّنِّي من فلان -نسيباً
لعمر - فأضرب عنقه ، فإن هؤلاء أئمة الكفر وصناديدها، حتى يعلم الله أنه ليست في
قلوبنا هوادة للمشركين [مسلم وأحمد]
.
அந்த போர்க்களத்தில் எதிரணியில் களத்தில் நின்றது பெரும்பாலான
நபித்தோழர்களின் உறவுகள். அவர்களின் மகன்கள்,தந்தைமார்கள், சச்சாமார்கள்,மாமன்மார்கள்,அவர்களின்
பிள்ளைகள்,சகோதரர்கள். இப்படி அவர்களின் நெருங்கிய உறவுகளை எதிர்க்க வேண்டிய நிலை
இருந்தது. ஆனால் நபித்தோழர்கள் அந்த நேரத்தில் அவர்களை உறவுகளாக பார்க்க வில்லை.
அல்லாஹ் ரஸூலின் எதிரிகளாக பார்த்தார்கள். பாசமோ நட்போ அங்கே அவர்களை தடுக்க வில்லை.உமர்
ரலி அவர்கள் அவர்களின் மாமா ஆஸ் பின் ஹிஷாமைக் கொன்றார்கள்.ஹம்ஜா ரலி அலி ரலி
உபைதா ரலி ஆகியோர் அவர்களின் சச்சா மகன்களைக் கொன்றார்கள்.
அதேபோன்று போர்க்களம் முடிந்து கைதிகள் விஷயத்தில் உமர் ரலி அவர்கள்
ஆலோசனை சொன்னார்கள் ; கைதிகளை கொலை செய்ய
வேண்டும். மேலும் அவர்கள் அவர்களின் உறவினர்களின் கைகளால் கொல்லப்பட வேண்டும்.
அத்தகைய நபித்தோழர்களைக் குறித்துத் தான் இந்த வசனம் பேசுகிறது.
لَا تَجِدُ
قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ
حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ
اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْ اُولٰٓٮِٕكَ كَتَبَ فِىْ قُلُوْبِهِمُ
الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ
وَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ
فِيْهَا رَضِىَ اللّٰهُ عَنْهُمْ
وَرَضُوْا عَنْهُ اُولٰٓٮِٕكَ حِزْبُ
اللّٰهِ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ
هُمُ الْمُفْلِحُوْنَ
(நபியே!) எந்த
மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை
கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்
மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள்
சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை
நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ்
நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி
வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும்
இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள்.
இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித்
திருப்தியடைவார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின்
கூட்டத்தினர்தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்
: 58:22)
2 – வெற்றியைப் பெற்றுத்தந்த துஆ
اِذْ
تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ
مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ
(உங்களை)
பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப்
பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி
செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன்
: 8:9)
3 –
வெற்றிக்கு காரணமான அவர்களின் ஈமான்
اِنَّا
لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ
يَقُوْمُ الْاَشْهَادُ ۙ
நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக
வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை)
நாளிலும் உதவி செய்வோம். (அல்குர்ஆன் : 40:51)
4 –
அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கிளையினரை இணைத்து வைத்த போர்க்களம்.
காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அவ்ஸ்
மற்றும் கஸ்ரஜ் கிளையினரிடையே இருந்த பகைமை உணர்வை நீக்கி அவர்களை அல்லாஹ்வின்
தூதர் அவர்கள் ஒற்றுமைப்படுத்தினார்கள். வரலாற்றி முதன்முதலாக அவர்கள் ஓர் அணியில்
இருந்து எதிரிகளை சந்தித்தது இந்த போர்க்களத்தில் தான்.
وَاَلَّفَ
بَيْنَ قُلُوْبِهِمْ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ
اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْ اِنَّهٗ
عَزِيْزٌ حَكِيْمٌ
அந்த
நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த
அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும்
அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்று சேர்த்தான். நிச்சயமாக
அவன் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன். (அல்குர்ஆன் : 8:63)
5 –
பெருமானாரின் ஆலோசனை.
فَاعْفُ
عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ فَاِذَا عَزَمْتَ
فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
அவர்(களின்
குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக!
மேலும், (யுத்தம், சமாதானம்
ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை
செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால்,
நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன்
: 3:159)
அபாயகரமான
சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள்.
அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது
படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள்.
படையின் தளபதிகள்
மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி
முடித்தார்கள். பின்பு உமர் (ரழி)எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு
மிக்தாத் இப்னு அம்ர் (ரழி)எழுந்து பேசினார்கள்.
قال المقداد
بن عمرو
"يَا رَسُولَ
اللَّهِ، امْضِ لِمَا أَرَاكَ اللَّهُ فَنَحْنُ مَعَكَ، وَاللَّهِ لاَ نَقُولُ
لَكَ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى: اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ
فَقَاتِلاَ إِنَّا هَا هُنَا قَاعِدُونَ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ
فَقَاتِلاَ إِنَّا مَعَكُمَا مُقَاتِلُونَ، فَوَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَوْ
سِرْتَ بِنَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَجَالَدْنَا مَعَكَ مِنْ دُونِهِ حَتَّى
تَبْلُغَهُ السيرة النبوية 1/ 615
‘‘அல்லாஹ்வின்
தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டியவழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன்
இருக்கிறோம். அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,
‘‘மூஸாவே!
அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம்.
நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று
(அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து
(கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)
என்று இஸ்ரவேலர்
நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக,
நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள்
இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன்
மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ”பர்குல் ஃகிமாது”*(*மக்காவிற்கு
அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத் துணிவுடன்
வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறி முடித்தார்கள். அவர்களின்
வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப்
பிரார்த்தனை புரிந்தார்கள். (அஸ்ஸீரத்துன் நபவிய்யா)
இந்த மூன்று
தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக
இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின்
கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில், இவர்கள்
தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும்
அன்சாரிகளையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து
கொண்ட உடன்படிக்கையில் அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய
வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது. ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின்
கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப்
பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ‘‘மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை
விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்)அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின்
தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார்.
அதற்கு நபி (ஸல்) ‘‘ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி)
அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:
قال سعد
"فَقَدْ آمَنَّا بِكَ وَصَدَّقْنَاكَ، وَشَهِدْنَا أَنَّ مَا جِئْتَ بِهِ
هُوَ الْحَقُّ، وَأَعْطَيْنَاكَ عَلَى ذَلِكَ عُهُودَنَا وَمَوَاثِيقَنَا عَلَى
السَّمْعِ وَالطَّاعَةِ، فَامْضِ يَا رَسُولَ اللَّهِ لِمَا أَرَدْتَ، فَوالَّذِي
بَعَثَكَ بِالْحَقِّ، لَوِ اسْتَعْرَضْتَ بِنَا هَذَا الْبَحْرَ فَخُضْتَهُ
لَخُضْنَاهُ مَعَكَ، مَا تَخَلَّفَ مِنَّا رَجُلٌ وَاحِدٌ، وَمَا نَكْرَهُ أَنْ
تَلْقَى بِنَّا عَدُوَّنَا غَدًا، إِنَّنَا لَصُبُرٌ فِي الْحَرْبِ، صُدُقٌ فِي
اللِّقَاءِ، وَلَعَلَّ اللَّهَ يُرِيكَ مِنَّا مَا تَقَرُّ بِهِ عَيْنُكَ، فَسِرْ
عَلَى بَرَكَةِ اللَّهِ"[6].السيرة النبوية 1/ 615
‘‘நாங்கள்
உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு
வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவி
மடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று
உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள்
விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன்
மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும்
மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன்
எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள்
உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம்
உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய
அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.'' (அஸ்ஸீரத்துன் நபவிய்யா)
மற்றுமொரு
அறிவிப்பில் வந்துள்ளது:
ثم قال (وتكلم
في صراحة): "لَعَلَّكَ تَخْشَى أَنْ تَكُونَ الأَنْصَارَ تَرَى حَقًّا
عَلَيْهَا أَنْ لاَ تَنْصُرَكَ إِلاَّ فِي دِيَارِهِمْ، وَإِنِّي أَقُولُ عَنِ
الأَنْصَارِ وَأُجِيبُ عَنْهُمْ، فَاظْعَنْ حَيْثُ شِئْتَ، وَصِلْ حَبْلَ مَنْ
شِئْتَ، وَاقْطَعْ حَبْلَ مَنْ شِئْتَ، وَخُذْ مِنْ أَمْوَالِنَا مَا شِئْتَ،
وَأَعْطِنَا مَا شِئْتَ، وَمَا أَخَذْتَ مِنَّا كَانَ أَحَبَّ إِلَيْنَا مِمَّا
تَرَكْتَ، وَمَا أَمَرْتَ فِينَا مِنْ أَمْرٍ فَأَمْرُنُا تَبَعٌ لِأَمْرِكَ،
فَوَاللَّهِ لَئِنْ سِرْتَ حَتَّى تَبْلُغَ الْبَرْكَ مِنْ غُمْدَانَ لَنَسِيرَنَّ
مَعَكَ، وَاللَّهِ لَئِنِ اسْتَعْرَضْتَ بِنَا هَذَا الْبَحْرَ فَخُضْتَهُ
لَخُضْنَاهُ مَعَكَ"[7].زاد المعاد
‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில்
இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள்
என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன்
அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச்
செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள்
விரும்பியவன் உறவை வெட்டி விடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து
எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள்
எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட
மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது
விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும்
அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்' பகுதியில்
உள்ள ‘பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும்
நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள்
அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று
ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். (ஜாதுல் மஆத்)
سمع الرسول r هذا الكلام،
فتحرك في منتهى النشاط، وقال للناس في حماسة: "سِيرُوا وَأَبْشِرُوا، فَإِنَّ
اللَّهَ تَعَالَى قَدْ وَعَدَنِي إِحْدَى الطَّائِفَتَيْنِ، وَوَاللَّهِ
لَكَأَنِّي أَنْظُرُ إِلَى مَصَارِعِ الْقَوْمِ
ابن هشام:
السيرة 1/ 615
ஸஅதின்
பேச்சையும் அவன் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த
ஆனந்தமடைந்தார்கள். பின்பு ‘‘நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்
இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக!
அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போதுபார்ப்பதைப் போன்று
இருக்கின்றது'' என்று கூறினார்கள். (ஸீரத்து இப்னு
ஹிஷாம்)
6 – பணிவு மற்றும் சிரமத்தில்
பங்கெடுத்தல்
كنَّا يومَ بَدرٍ كلُّ ثلاثةٍ على بَعيرٍ، كان أبو
لُبابةَ وعليُّ بنُ أبي طالبٍ زَمِيلَيْ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ،
قال: وكانتْ عُقْبةُ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ، قال: فقالا نحن نَمشي
عنك، فقال: ما أنتما بأقْوَى منِّي، ولا أنا بأغْنَى عن الأَجرِ منكما
நாங்கள் பத்ரு
நாளன்று மூன்று நபர்கள் ஒரு ஒட்டகத்தில் பயணித்தோம். அபூலுபாபா (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுடன் செல்பவர்களாக இருந்தனர்.
அப்போது அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம்.
(நீங்கள் ஒட்டகத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் நீங்கள் இருவரும் என்னைவிட வலிமை வாய்ந்தவர்களும் அல்ல. நான் உங்களைவிட
நன்மை பெறுவதில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள். (அஹ்மத் ; 3706)
7 –
ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல்
حذيفة بن
اليمان، قال: "ما منعني أن أشهد بدرًا إلا أني خرجت أنا وأبي حسيل، قال:
فأخذنا كفار قريش، قالوا: إنكم تريدون محمدًا، فقلنا: ما نريده، ما نريد إلا
المدينة، فأخذوا منا عهد الله وميثاقه لننصرفن إلى المدينة، ولا نقاتل معه، فأتينا
رسول الله صلى الله عليه وسلم، فأخبرناه الخبر، فقال: ((انصرفا، نفي لهم بعهدهم،
ونستعين الله عليهم))"؛ رواه مسلم في صحيحه.
ஹுதைஃபா பின்
அல்யமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நான் பத்ருப்
போரில் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நானும் என்
தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது
குறைஷிக் காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து
எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்”
என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே
திரும்பி விட வேண்டும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு
எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம்
அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக
அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்)
8 – கைதிகளிடம் பரிவு
وعن أبي عزيز
بن عمير قال: (كنت في الأسرى يوم بدر فقال رسول الله صلى الله عليه وسلم: استوصوا
بالأسارى خيرا)
நீங்கள்
கைதிகளிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள்.(தப்ரானீ)
பத்ருப் போரில்
கைதியாகப் பிடிபட்ட (முஸ்அப் பின் உமைர் - ரலி அவர்களின் சகோதரர்) அபூ அஸீஸ்
அவர்கள் கூறியதாவது.
( فَكُنْتُ فِي
رَهْطٍ مِنَ الْأَنْصَارِ حِينَ أَقْبَلُوا بِي مِنْ بَدْرٍ، فَكَانُوا إِذَا
قَدَّمُوا غَدَاءَهُمْ وَعَشَاءَهُمْ خَصُّونِي بِالْخُبْزِ وَأَكَلُوا التَّمْرَ،
لِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بِنَا،
مَا تَقَعُ فِي يَدِ رَجُلٍ مِنْهُمْ كِسْرَةُ خُبْزٍ إِلَّا نَفَحَنِي بِهَا،
فَأَسْتَحِي فَأَرُدُّهَا فَيَرُدُّهَا عَلَيَّ مَا يَمَسُّهَا )
அன்சாரிகள்
பத்ரிலிருந்தும் (மதீனாவிற்கு) திரும்பிய நேரத்தில் நான் அன்சாரிகளின் ஒரு
குழுவினரிடம் இருந்தேன். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு எங்களிடம்
நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்ததால், அவர்கள் மதிய உணவையும் இரவு உணவையும் சமர்ப்பிக்கும்போது (சாதாரண)
பேரிச்சம் பழத்தை அவர்கள் உட்கொண்டுவிட்டு, எனக்கு
(உயர்தரமான) ரொட்டிகளை வழங்குபவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவருடைய கையில் ஒரு
ரொட்டித் துண்டு கிடைத்தாலும் அதை (உடனடியாக) எனக்குத் தந்துவிடுவார். நான்
வெட்கப்பட்டு அதனை திருப்பிக் கொடுப்பேன். (எனினும் மீண்டும் வற்புறுத்தி)
என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். அதைத் தொட மாட்டார்.
(அல்பிதாயா வந்நிஹாயா)
وَيُطْعِمُوْنَ
الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا
மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும்
உணவளிப்பார்கள். (அல்குர்ஆன் :
76:8)
9 – பிரதி உபகாரம்
فقد ورد في
دلائل النبوة للبيهقي أنّ النبي صلى الله عليه وسلم قال :«من لقي أبا البختري بن
هشام فلا يقتله» ، ثم أورد البيهقي قول ابن إسحاق :" وإنما نهى رسول الله صلى
الله عليه وسلم عن قتل أبي البختري لأنه كان أكفَّ القوم عن رسول الله صلى الله
عليه وسلم وهو بمكة ، وكان لا يؤذيه ، ولا يبلغه عنه شيء يكرهه. وكان ممن قام في
نقض صحيفة المقاطعة
பத்ர் போர்க்களத்தின் போது நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் ; களத்தில் நீங்கள் அபுல் பக்தரீயைக் கண்டால்
அவரைக் கொல்ல வேண்டாம். (தலாயிலுன் நுபுவ்வா)
காரணம், அவர் விரும்பி
போர்க்களத்திற்கு வர வில்லை. மக்காவில் இருந்த காலத்தில் நபி ஸல் அவர்களுக்கோ
நபித்தோழர்களுக்கோ எந்த தொந்தரவையும் அவர் கொடுத்ததில்லை. அவர்களை எதிர்த்ததில்லை.
எனவே அவரை கொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فِي أُسَارَى
بَدْرٍ: «لَوْ كَانَ المُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي
هَؤُلاَءِ النَّتْنَى، لَتَرَكْتُهُمْ لَهُ»
நபி (ஸல்) அவர்கள் பத்ருப்போரில் பிடிபட்ட கைதிகள்
தொடர்பாகக் கூறினார்கள்:
முத்யிம் இப்னு அதீ உயிரோடியிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத்
தொகை வாங்காமலேயே) விட்டு விடும் படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான்
அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டு விட்டிருப்பேன்.(புகாரி)
முத்யிம் இப்னு அதீ நபி ஸல் அவர்களுக்கு
பல்வேறு உதவிகளை செய்தவர்.தாயிஃபிலிருந்து திரும்பி வந்த நேரத்தில் நபியவர்களுக்கு
அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பளித்தவர். எனவே அந்த நன்றியை மறவாமல் அவ்வாறு கூறினார்கள்.
நபி ﷺ அவர்கள்
காலத்தில் கூட அவர்களுக்கும் ஸஹாபாக்களும் உதவிக்கரம் நீட்டக்கூடிய அவர்களை
அரவணைக்கக்கூடிய நல்லுள்ளம் கொண்ட சிலர் இருந்தார்கள். அபூஜஹ்ல், அபூலஹப் போன்றவர்கள் பயங்கரமான நெருக்கடிகளைக் கொடுத்துக்
கொண்டிருந்த கால கட்டத்தில் நபி ﷺ அவர்களுக்கு பலவகையான உதவிகளைச் செய்தவர் முத்இம் இப்னு அதீ என்பவர். இவர் பலவகையான உதவிகளை
செய்திருந்தாலும் இக்கட்டான ஒரு கட்டத்தில் நபியைப் பாதுகாத்தார்.
فلما انتهى إلى مكة، أرسل رجلا من خزاعة إلى
مُطْعَم بن عدي: أدخل في جوارك؟، فقال: نعم، فدعا بنيه وقومه، وقال: البسوا
السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرتُ محمداً، فدخل رسول الله ـ صلى الله
عليه وسلم ـ، ومعه زيد بن حارثة حتى انتهى إلى المسجد الحرام، فقام المطعم على
راحلته، فنادى: يا معشر قريش، إني قد أجرت محمداً، فلا يهجه أحد منكم، فانتهى رسول
الله ـ صلى الله عليه وسلم ـ إلى الركن، فاستلمه، وصلى ركعتين، وانصرف إلى بيته
ومطعم وولده محدقون به بالسلاح حتى دخل بيته
நபி ﷺ அவர்கள் நபித்துவம் கிடைத்த பத்தாம் ஆண்டு இஸ்லாத்தின்
பக்கம் மக்களை அழைப்பதற்காக தாயிஃப் நகரத்திற்கு புறப்பட்டு சென்றார்கள்.
நபியவர்கள் திரும்பி வந்தால் அவர்களை மக்காவிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று
அவர்களை தடுப்பதற்கு மக்காவாசிகள் காத்திருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற
நோக்கத்தில் தாயிஃபிற்கு சென்ற பெருமானார் ﷺ அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அம்மக்கள் நபி ﷺ அவர்களை ஊரை
விட்டு துரத்தினார்கள். தாயிஃப் மக்களும் தன்னை ஆதரிக்க வில்லை. திரும்பி
மக்காவிற்குள்ளும் நுழைய முடியாத சூழ்நிலையில் தான் நபி ﷺ அவர்கள் ஸைத்
பின் ஹாரிஸா ரழி அவர்களுடன் தாயிபிலிருந்து திரும்பி வந்தார்கள். அந்த இக்கட்டான சமயத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது
முத்இம் பின் அதீ தான்.
முத்இம் பின் அதீ தன் ஆறு மகன்களோடு வாளேந்திக்
கொண்டு நபி ﷺ அவர்களை பாதுகாப்பாக கஃபதுல்லாஹ்விற்கு அழைத்து வந்து முஹம்மதிற்கு ﷺ நான்
பாதுகாப்பு அளித்து விட்டேன் என்று உரத்த குரலில் சொன்னார்.அதனால் யாரும் நபி ﷺ அவர்களுக்கு
அருகில் வர வில்லை. எனவே முக்கியமான நேரத்தில் நபியவர்களுக்கு முத்இம் பின் அதீ
பாதுகாப்பு அளித்தார். (ஸீரத்து இப்னு ஹிஷாம் ; 2/28)
கடந்த கால பதிவுகள்
2022 தனித்துவம் பெற்ற பத்ர் ஸஹாபாக்கள்
வாஹிதிகள் பேரவை பத்ர் வரலாறு
18 பயான் வரவில்லை
ReplyDelete