Tuesday, March 18, 2025

தராவீஹ் 18 - வாய்ப்புக்கள் ஒரு முறை தான் கதவைத் தட்டும்

 

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்). (அல்குர்ஆன் : 35:37)

மனித சமூகம் நல் உணர்ச்சி பெறுவதற்கு போதுமான கால அவகாசத்தை இந்த உலகத்தில் தந்திருப்பதாக அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். இந்த உலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்டிருக்க ஆயுள் காலம் என்பது அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, இதனை வைத்து மறுமை வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு. எனவே இந்த உலக வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்டிருக்கிற ஒரு அறிய வாய்ப்பு. இந்த வாய்ப்புக்கு பின்னால் மறு வாய்ப்பு மனிதனுக்கு இல்லை. மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற இந்த ஒரு வாய்ப்பை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே மறுமையில் வெற்றி பெற முடியும். இந்த வாய்ப்பை தவற விடுபவனுக்கு மறுமையின் வெற்றி கேள்விக்குறியாகி விடும். ஆகவே மனிதன் அவனுக்கு கிடைக்கின்ற அரிய வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. தவற விட்டால் பின்னால் வருந்த வேண்டிய அவல நிலை ஏற்படும்.

قال أحد السلف: "إذا فُتح لأحدكم باب خير فليسرع، فإنه لا يدري متى يُغلق عنه".

நன்மையின் வாசல் ஒருவருக்கு திறக்கப்பட்டால் அதை விரைவாக செய்து விடட்டும். ஏனெனில் எப்போது  அந்த வாசல் மூடப்படும் என்று தெரியாது. அதாவது பின்னால் அதை செய்ய முடியாமல் போய் விடலாம்.

قال رسول الله -صلى الله عليه وسلم-: "إذا قامت الساعة وفي يد أحدكم فسيلة، فإن استطاع ألا تقوم حتى يغرسها فليغرسها".

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரின் கையில் மரக்கன்று இருக்கும் போது அவர் மீது மறுமை நிறுவப்பட்டாலும், அவர் அதை நடட்டும்".

 

اغتنم خمسا قبل خمس: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك".

ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்:  உன்னுடைய முதுமைக்கு முன் உன்னுடைய இளமையை, உன்னுடைய நோய்க்கு முன் உன்னுடைய ஆரோக்கியத்தை, உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தை, வேலை செய்வதற்கு முன் உன்னுடைய ஓய்வு நேரத்தை, உன்னுடைய மரணத்திற்கு முன் உன்னுடைய வாழ்க்கையை."

 

தவ்பா செய்வதற்கு அல்லாஹ் வாய்ப்பை தருகிறான்.

بالتوبة يمنح الله الكريم عباده فرصة يراجعون فيها أنفسهم يتدبرون حالهم يرجعون إلى الله عن قريب قبل أن ينزلهم منازل الهون والبلاء.

 

وفي الحديث: "إن صاحب الشمال ليرفع القلم ست ساعات عن العبد المسلم المخطئ أو المسيء، فإن ندم واستغفر الله منها ألقاها وإلا كتبت واحدة". شعب الايمان

ஒரு முஸ்லிமான அடியான் பாவம் செய்கிற பொழுது அதை பதிவு செய்யக்கூடிய வானவர் ஆறு முறை அதை எழுதுவதற்காக முற்பட்டு அதை எழுதாமல் பேனாவை உயர்த்தி விடுகிறார். அவர் செய்த பாவத்தை வருந்தி அல்லாஹ்விடத்தில் மன்னிப்பை தேடி விட்டால் அதை எழுதாமல் விட்டு விடுகிறார். அவர் மன்னிப்பு தேட வில்லை என்றால் அவர் மீது ஒரு பாவத்தை எழுதுகிறார். (ஷுஃபுல் ஈமான்)

 

அந்த ஆறு முறை என்பது தவ்பா செய்வதற்கு அல்லாஹ் அடியானுக்கு தருகின்ற வாய்ப்பு. அதை பயன்படுத்தி விட்டால் அவர் பாவமற்றவராக ஆகிறார். அதை பயன்படுத்த தவறினால் அவர் குற்றவாளியாக மாறிவிடுகிறார்.

 

வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டவர் தான் வெற்றி பெற முடியும். அவர்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

கலீமுல்லாஹ் மூசா நபி அவர்கள் படைத்த இறைவனிடத்தில் நேரடியாக பேசும் வாய்ப்பினை பெற்ற போது அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு தன் தேவைகள் அனைத்தையும் இறைவனிடத்தில் கேட்டார்கள். அவனும் கேட்டதை கொடுத்து விட்டான்.

 

نبي الله موسى -عليه السلام- لَمَّا اطمأنَّ قلبُه بكلام ربِّ الأرباب وأنَّ الذي يُخاطبه هو مُسَبِّبُ الأسبابِ اغتنم -عليه السلام- الفرصةَ، فقال: (رَبِّ اشْرَحْ لِي صَدْرِي * وَيَسِّرْ لِي أَمْرِي * وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي * يَفْقَهُوا قَوْلِي * وَاجْعَلْ لِي وَزِيرًا مِنْ أَهْلِي* هَارُونَ أَخِي * اشْدُدْ بِهِ أَزْرِي * وَأَشْرِكْهُ فِي أَمْرِي)[طه: 25-32]، فاستجاب له رَبُّه: (قَالَ قَدْ أُوتِيتَ سُؤْلَكَ يَا مُوسَى)[طه: 36].

 

 

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏

அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு; (அல்குர்ஆன் : 20:25)

وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏

(நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை. (அல்குர்ஆன் : 20:26)

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ

என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு; (அல்குர்ஆன் : 20:27)

يَفْقَهُوْا قَوْلِیْ ‏

என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 20:28)

وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏

என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக (மந்திரியாக) ஆக்கிவை; (அல்குர்ஆன் : 20:29)

هٰرُوْنَ اَخِى ۙ

அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும். (அல்குர்ஆன் : 20:30)

اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏

அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை. (அல்குர்ஆன் : 20:31)

وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ ۙ‏

என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை. (அல்குர்ஆன் : 20:32)

كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ

நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக, (அல்குர்ஆன் : 20:33)

وَّنَذْكُرَكَ كَثِيْرًا

மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக. (அல்குர்ஆன் : 20:34)

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا‏

(எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்). (அல்குர்ஆன் : 20:35)

قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى‏

அதற்கு (இறைவன்) கூறினான், ‘‘மூஸாவே! நீர் கேட்ட அனைத்தும் நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டன. (அல்குர்ஆன் : 20:36)

 

மர்யம் அலை அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து விசேஷமான கனி வர்க்கங்கள் வழங்கப்பட்ட அந்த காட்சியை ஜக்கரியா அலை அவர்கள் பார்த்தார்கள். நிச்சயம் இது அல்லாஹ்வின் அனுக்கிரகம் இறங்கும் நேரம் என்பதை உணர்ந்து கொண்டார்கள். இந்த நேரத்தில் இறைவனிடத்தில் எது கேட்டாலும் கிடைக்கும் என்று நம்பி இறைவனிடத்தில் குழந்தையை கேட்டார்கள். அந்த தள்ளாத வயதிலும் அல்லாஹ் அவர்களுக்கு அந்த துஆவை ஏற்றுக் கொண்டு குழந்தையை வழங்கினான்.

 

ولَمَّا دخَل زكريا -عليه السلام- على مريم وهي منقطعة للعبادة لا كسبَ لها ولا تجارةَ فوجَد عندَها رزقا، (قَالَ يَا مَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ)[آلِ عِمْرَانَ: 37]، فلمَّا رأى آثارَ فضل الله ورحمته اغتنم -عليه السلام- الفرصةَ فدعا اللهَ -تعالى- بأن يرزقَه الولدَ الصالحَ، فالذي رزَق مريمَ بغير سبب قادر على أن يهَب للشيخ الكبير الولدَ، (هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ * فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِنَ الصَّالِحِينَ)[آلِ عِمْرَانَ: 38-39].

 

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

ஆகவே, அவருடைய இறைவன் அதை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதை வளரச் செய்து அதை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு ‘‘மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)'' என்று கேட்பார். அதற்கவள் ‘‘இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகிறது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கிறான்'' என்று கூறுவாள். (அல்குர்ஆன் : 3:37)

 

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌  اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ

(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவன்'' என்று கூறினார். (அல்குர்ஆன் : 3:38)

 

فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏

ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் : 3:39)

 

 

வாய்ப்பை பயன்படுத்தியதால் பாக்கியம் பெற்ற நபித்தோழர் உக்காஷா ரலி

عن عبدالله بن عباس رضي الله عنهما أن النبي -صلى الله عليه وسلم- قال : (عرضت علي الأمم، فرأيت النبي ومعه الرهيط، والنبي ومعه الرجل والرجلان، والنبي وليس معه أحد، إذ رفع لي سواد عظيم فظننت أنهم أمتي، فقيل لي هذا موسى وقومه، ولكن انظر إلى الأفق، فنظرت فإذا سواد عظيم، فقيل لي انظر إلى الأفق الآخر، فإذا سواد عظيم، فقيل: لي هذه أمتك ومعهم سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب، ثم نهض فدخل منزله )، فخاض الناس في أولئك الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب، فقال بعضهم: فلعلهم الذين صحبوا رسول الله -صلى الله عليه وسلم-، وقال بعضهم: فلعلهم الذين ولدوا في الإسلام فلم يشركوا بالله، وذكروا أشياء، فخرج عليهم رسول الله -صلى الله عليه وسلم- فقال: (ما الذي تخوضون فيه؟) فأخبروه فقال: (هم الذي لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون) ، فقام عكاشة بن محصن رضي الله عنه فقال: ادع الله لي أن يجعلني منهم، فقال: (أنت منهم) ، ثم قام رجل آخر فقال: ادع الله أن يجعلني منهم، فقال: (سبقك بها عكاشة) متفق عليه

 

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, ‘இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், ‘பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், ‘இங்கும் இங்கும் பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று சொல்லப்பட்டது.

 

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் ‘நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில், பிறந்தோம். ஆயினம், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீது அவனுடைய தூதர் மீதுமநம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்)அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்கமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.(புகாரி)

 

 

வாய்ப்புக்களை எப்போதும் பயன்படுத்த தவறாத அபூபக்கர் ரலி அவர்கள்.

 

قال رسول الله -صلى الله عليه وسلم-: "من أصبح منكم اليوم صائماً؟" قال أبو بكر -رضي الله عنه-: أنا. قال: "فمن تبع منكم اليوم جنازة؟" قال أبو بكر -رضي الله عنه-: أنا. قال: "فمن أطعم منكم اليوم مسكيناً؟" قال أبو بكر -رضي الله عنه-: أنا. قال: "فمن عاد منكم اليوم مريضاً؟" قال أبو بكر -رضي الله عنه-: أنا، فقال رسول الله -صلى الله عليه وسلم-: "ما اجتمعْنَ في امرئ إلا دخل الجنة"

 

உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று சொன்னார்கள். ‘இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்தது யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். ‘ஏழைக்கு இன்று உணவளித்தவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று கூறினார்கள். ‘இன்று உங்களில் நோயாளியை விசாரிக்கச் சென்றவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) ‘நான்’ என்றார்கள். ‘இவை அனைத்தும் ஒருவரிடம் ஒரு சேர அமைந்தால் அவர் சொர்க்கம் செல்லாமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 4400)

 

வாய்ப்பை பயன்படுத்தி பெரும் பாக்கியத்தைப் பெற்ற ரபீஆ ரலி

 

أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: «سَلْ» فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ»

 

ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்கும், உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!’’ என்று என்னிடம் கூறினார்கள்.உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்’’ என்றேன். அதற்கு “வேறு ஏதேனும் (கோருவீராக!)’’ என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்’’ என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!’’ என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 843)

 

 

وقال حماد بن أبي حنيفة: "إن مولاة كانت لداود -يعني: الطائي- تخدمه، قالت: لو طبختُ لك دسماً تأكله، فقال: وددت، فطبختْ له دسماً ثم أتته به، فقال لها: ما فعل أيتام بني فلان؟ قالت: على حالهم، قال: اذهبي بهذا إليهم، فقالت: أنت لم تأكل أدماً منذ كذا وكذا، فقال: إن هذا إذا أكلوه صار إلى العرش، وإذا أكلته صار إلى الحش، فقالت له: يا سيدي! أما تشتهي الخبز؟ قال: يا داية! بين مضغ الخبز وشرب الفتيت قراءة خمسين آية".

தாவூதுத் தாஈ ரஹ் அவர்களின் பணிப் பெண் ஒரு நாள் உங்கள் நான் ரொட்டியையும் கறிக்குழம்பையும் சமைத்துத் தரட்டுமா என்று கேட்டாள். எனக்கு விருப்பம் தான். சமைத்துக் கொடு என்றார்கள். சமைத்து தயாரான பிறகு பக்கத்து வீட்டில் அநாதைகளின் நிலை என்ன என்று விசாரித்தார்கள். எப்போதும் போலவே அவர்கள் இருக்கிறார்கள். அதாவது சிரமப்படுகிறார்கள் என்று சொன்ன போது அப்படியானால் இதை அவர்களிடம் கொடுத்து விடு என்றார்கள். நீங்கள் ரொம்ப நாளாகவே இந்த உணவை சாப்பிட வில்லையே!இப்போது விருப்பப்பட்டு கேட்டீர்களே! என்ற போது இதை சாப்பிடும் நேரத்தில் நான் ஐம்பது குர்ஆன் வசனங்களை ஓதி முடித்து விடுவேன். இதை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அந்த வசனங்களை ஓத முடியாது என்றார்கள்.


கடந்த கால பதிவுகள் 

2022 நன்றி மறப்பது நன்றன்று

2023 அமானிதம்

2024 பரம எதிரி

வாஹிதிகள் பேரவை நன்மையில் போட்டி

6 comments:

  1. அற்புதம் மௌலானா ஜஸாக்கல்லாஹ்

    ReplyDelete
  2. Masha allah அல்லாஹ் உங்களுக்கு அரள்புரிவானாக

    ReplyDelete
  3. ماشاء الله جزاك الله خيرا كثيرا

    ReplyDelete
  4. علم النافع٠

    ReplyDelete
  5. بارك الله في علمك،

    ReplyDelete