Saturday, March 8, 2025

தராவீஹ் 8 - தயாராக இரு

 

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌  لَا تَعْلَمُوْنَهُمُ‌  اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 8:60)


முஸ்லிம்கள் எப்போதும் எதிரிகளை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் எதிரிகளை சந்தித்து எதிர்கொள்வதற்கு எது எது தேவையோ அவை அனைத்தையும் முன்கூட்டியே தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

பொதுவாகவே ஒரு பிரச்சனை அல்லது ஆபத்து வந்த பிறகு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாற்றம் அடைவதை விட பிரச்சனைகளும் ஆபத்துகளும் வருவதற்கு முன்பே அதற்கான தயாரிப்புகளோடு இருப்பவர்தான் புத்திசாலியாக இருக்க முடியும். அந்த வகையில் இஸ்லாமியர்கள் எப்போதும் முன் எச்சரிக்கையோடு எதிரிகளை களம் காண்பதற்கான முன் தயாரிப்புகளோடு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.


பெருமானாருடைய வாழ்க்கையில் இதற்கு முன் உதாரணங்கள் உண்டு.


குரைசிகளும் மேலும் ஆறு கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் பத்தாயிரம் படையினரும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட ஒட்டகங்களும் ஏராளமான ஆயுதங்களும் குதிரை படையினரும் ஆரவாரத்துடன் கூட்டுப்படையாக மதினாவை தாக்க புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது தோழர்களுடன் போர் தந்திரங்களை பற்றி ஆலோசனை செய்தனர். மதினாவை சுற்றிலும் ஓர் அகழியை தோண்டி எதிரிகளின் முன்னேற்றத்தை தடை செய்வது என்ற பாரசீக போர் தந்திரத்தை ஸல்மான் பாரிஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் வைத்தார்கள். பெருமானார் அதை வரவேற்று ஒரு வாரம் கடினமாக உழைத்து ஒன்பதாயிரம் அடி நீளமும் குதிரைப் படையினரால் எளிதில் தாண்டமுடியாத அளவுக்கு அகலமும் ஆழமும் கொண்ட ஓரு அகழியை தோண்டினார்கள். பட்டினியால் நிமிர்ந்து நிற்க முடியாமல் தமது வயிற்றில் கற்களை கட்டிவைத்துக் கொண்டு பெருமானாரும் தோழர்களும் அந்த அகழியை தோண்டினார்கள். இந்த சாலை இருக்குமிடம் அந்த அகழியை சேர்ந்தது தான்.

அகழிக்கு மறுபுறம் வந்த கூட்டுப் படையினர் அந்த அகழியைப் பார்த்து வியந்து நின்றனர். அகழிக்கு மறுபுறம் ஸல்வு மலை உச்சியிலும் உள்ள முஸ்லிகளிடம் மட்டும் போர் சில நாட்கள் நடந்தது. முஸ்லீம்களிடம் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்ததையும் மீறி யூதர்கள் எதிரிகளிடம் சேர்ந்து கொண்டனர். மஸ்ஜித் பத்ஹ் என்ற இந்த இடத்தில்தான் பெருமானாரின் முகாம் இருந்தது.

இந்த நிலைமை ஒரு சில நாட்கள் நீடித்தது. ஒரு இரவில் பெரும் இரைச்சலுடன் காற்று வீசியது. பலத்த மழை பொழிந்தது. இடியும் மின்னலும் தொடர்ந்தது. அந்த சூறாவளி காற்றில் முகாம்கள் பறந்து சென்றன. முஸ்லீம்கள் அகழியை தாண்டி தாக்க வருவதாக தவறாக எண்ணிய கூட்டுப் படையினர் பொழுதும் விடியும் முன்னரே கந்தக்கை விட்டுச் சென்றனர். அல்லாஹ்வின் இந்த தந்திரம் முஸ்லீம்களை காப்பாற்றியது. தங்களை காப்பாற்றிய அல்லாஹ்விற்க்கு முஸ்லீம்கள் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.

எதிரிகள் வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே அதற்கான தயாரிப்புகளை செய்து கொண்ட காரணத்தினால் தான் அது அவர்களுக்கு வெற்றியாக அமைந்தது என்பதை இந்த வரலாறு நமக்கு சொல்கிறது. 


நம்முடைய பலம் தான் எதிரிகளின் பலவீனம். நாம் பலமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். 

தவாஃபில் ரமல், இள்திபா  என  இரு விஷயங்கள் உண்டு. தவாஃபின் ஏழு சுற்றுகளில் முதல் மூன்று சுற்றில் கால் பாதங்களை நெருக்கமாக வைத்து கொஞ்சம் சுறுசுறுப்பாக வேகமாக நடப்பதற்குப் பெயர் ரமல்.இஹ்ராம் அணியும் போது இடது புஜத்தை மறைத்து வலது புஜம் தெரியிற மாதிரி மேனியில் துண்டு போடுவதற்கு இள்திபா என்று பெயர். இந்த இரண்டு முறைக்கும் ஒரு காரணம் உண்டு.

நபி அவர்கள் ஹிஜ்ரத் போய் விட்டு முதன் முதலாக மக்காவிற்கு உம்ரா செய்த போது இவ்வாறு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.காரணம்.அவர்கள் மதீனாவுக்கு போன நேரத்தில் அங்கே ஸஹாபாக்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். நோயினால் பாதிக்கப்பட்ட நபித்தோழர்கள் மெலிந்து போய் இருப்பார்கள், பலமில்லாமல் இருப்பார்கள், ரொம்ப பலவீனமாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்து ரசிக்கலாம்,கைகொட்டி சிரிக்கலாம் என்று மக்கத்து காஃபிர்கள் தவாஃப் செய்யும் இடத்தில் காத்திருந்தார்கள்.அப்போது தான் நபி அவர்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். உண்மையில் நாம் பலம் குறைவாக இருந்தாலும் நாம் பலவீனமாக இருந்தாலும் நம் பலவீனம் எதிரிகளுக்கு தெரிந்து விடக்கூடாது. நம் பலவீனத்தை அவர்கள் தெரிந்து கொண்டால் அவர்களது கை இன்னும் ஓங்கி விடும். எனவே நாங்கள் பலமிக்கவர்கள் தான் என்பதை காட்டும் விதமாக இவ்வாறு செய்யுங்கள் என்று சொன்னார்கள்.அப்படியே ஸஹாபாக்களும் செய்தார்கள்.



وأهم أنواع الإعداد ثلاثة:

أ- الإعداد المعنويّ: يشكّل الإخلاص لله تعالى والتوجّه إليه رأس قائمة الإعداد والجهوزيّة؛ لاستمداد نصر الله تعالى في الحرب.

ب- الإعداد التدريبيّ: ورد أنّ رسول الله صلى الله عليه وآله وسلم كان يشرف بنفسه على تدريب المجاهدين على القتال، وكان ينادي بين صفوفهم: "وأعدّوا لهم ما استطعتم من قوّة، ألا إنّ القوّة الرمي، ألا إنّ القوّة الرمي،."(3).

ج- الإعداد التجهيزيّ: بأن يوفّر المقاتلون أسلحة الحرب المطلوبة، فعنه صلى الله عليه وآله وسلم: "إنّ الله تعالى يُدخل بالسهم ثلاثة نفر الجنّة: صانعه يحتسب في صنعته الخير، والرامي به، ومنبّله"(4).



மூன்று வகையான தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது



1. உடலை தயார் படுத்துவது

2. ஆயுதங்களை தயார் படுத்தி வைத்துக் கொள்வது

3. மானசீகமான தயாரிப்பு நிலை. அதாவது இறையச்சத்தால் துஆக்களால் எதிரிகளை எதிர்கொள்வது.




وإن كان الإعدادان التدريبيّ والتجهيزيّ مطلوبين، إلّا أنّهما ليسا علّةَ النصر الحقيقيّة؛ ويبقى للإعداد المعنويّ حظّه الأكبر، حيث يذكر القرآن الكريم قصّة طالوت وجنوده ليضيف معادلةً جديدة، بعد ابتلائهم بشربة النهر، حيث تروي النصوص أنّ 313 مقاتلاً فقط اجتازوا الامتحان الإلهيّ من أصل 600، وهؤلاء القلّة هم الذين قال الله تعالى عنهم: ﴿وَلَمَّا بَرَزُواْ لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُواْ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ﴾ (البقرة: 250).



وفي بدر، كان الكفّار 950 مقاتلاً وبينهم 200 فارس، و700 دارع، بينما كان المسلمون 313 مقاتلاً، معهم ثلاثة على فرس، وثمانية سيوف فقط. ومع ذلك، فإنّ الله تعالى حينما رأى أنّ شروط النصر قد تحقّقت، أنزل نصره وقال: ﴿وَلَقَدْ نَصَرَكُمُ اللّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ﴾ (آل عمران: 123).



இந்த மூன்றில் மூன்றாவது தான் மிக முக்கியமானது அவசியமானது கண்டிப்பாக இருக்க வேண்டியது நபி அவர்கள் இந்த மூன்றாவது விஷயத்திற்கு தான் அதிக முக்கியத்துவத்தை காட்டினார்கள் உடல் பலத்தை விட ஆயுத பலத்தை விட ஆன்மீக பலம் தான் மேலானது என்பதை தன் தோழர்களுக்கு கற்றுத் தந்தார்கள் நபித்தோழர்களும் அந்த ஆன்மீக பலத்தை கொண்டு தான் எதிரிகளை சந்தித்தார்கள் வெற்றிகளையும் பெற்றார்கள் பத்ர் போர்க்களம் அதற்கு சிறந்த சான்று. ஆயுதத்திலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைவாக இருந்தும் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை தந்தான். அதற்கு காரணம் அவர்களின் இறை நம்பிக்கையும் துஆவும் தான்.



وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ   فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.

(அல்குர்ஆன் : 3:123)




اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ‌ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّـكُمْ‌ وَ اِنْ تَعُوْدُوْا نَـعُدْ‌ وَلَنْ تُغْنِىَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـٴًـــا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ

(நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன் : 8:19)


தாவூது நபி அவர்கள் தன் படையோடு ஜாலூத்து மன்னனின் படையை எதிர்கொள்வதற்கு சென்றபோது அவர்கள் ஓதிய துஆவை அல்லாஹ் குர்ஆனில் சுட்டிக்காட்டுகிறான்.



لما برزوا لجالوت وجنوده:[قالوا ربنا أفرغ علينا صبرًا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين]

ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 2 ; 250)


இறையச்சமும் துஆவும் தான் வெற்றியைப் பெற்றுத் தரும்



وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَـنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌  فَاَوْحٰۤى اِلَيْهِمْ رَبُّهُمْ لَــنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَۙ

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான். (அல்குர்ஆன் : 14:13)

وَلَـنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْ بَعْدِهِمْ‌ ذٰ لِكَ لِمَنْ خَافَ مَقَامِىْ وَخَافَ وَعِيْدِ

நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).

(அல்குர்ஆன் : 14:14)




 من اتقى الله عاش قويا وسار في بلاده امنا

அல்லாஹ்வை யார் அஞ்சுகிறாரோ அவர் பலம் மிக்கவராக வாழ்வார். பூமியில் பாதுகாப்பாக பயணிப்பார். (ஹுல்யதுல் அவ்லியா ; 1984)

 


இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கிறான்.



اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ

 

நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 16:128)



இறையச்சமுள்ளவர்களோடு அல்லாஹ் இருப்பதினால் அவர்கள் யாரைக் கண்டும் அஞ்ச மாட்டார்கள். அனைவரும் அவர்களைக் கண்டு அஞ்சுவார்கள்.



خرج موسى عليه السلام يرعى غنمه ؛ فانتهى الى واد كثير الذئاب فأدركه التعب و النوم فبقى متحيرا ان اشتغل بالغنم

عجز عن ذلك من غلبة النوم و ان نام غدرت غدرت الذئاب على الغنم ؛ فرمق بطرفه الى السماء و قال : أحاط علمك و نفذت

ارادتك و سبق تقديرك ثم وضع رأسه و نام

فلما استيقظ وجد ذئبا واضعا عصاه على عاتقه و هو يرعى الاغنام فتعجب موسى من ذلك فأوحى الله اليه ان يا موسى " كن لى كما أريد أكن لك كما تريد

ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற மூசா நபி அலை அவர்கள் ஓநாய்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தார்கள். நீண்ட தூரப் பயணத்தினால் அவர்களுக்கு களைப்பும் தூக்கமும் ஏற்பட்டது. ஆனால் தூங்கினால் ஓநாய்களால் ஆடுகளுக்கு ஆபத்து ஏற்பட நேரிடும். அதே சமயத்தில் ஓய்வெடுக்காமல் அவர்களால் இருக்க முடியாது‌. அந்த நேரத்தில் அவர்கள் தன் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தி இறைவா உனக்கு எல்லாம் தெரியும். உன்னுடைய நாட்டப்படியே எல்லாம் நடைபெறும். விதியில் எது இருக்கிறதோ அது நடக்கட்டும் என்று கூறி உறங்கி விட்டார்கள் கண்விழித்துப் பார்த்த பொழுது ஒரு ஆச்சரியத்தைக் கண்டார்கள். அவர்களுடைய தடியை கையில் வைத்துக்கொண்டு ஒரு ஓநாய் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ், நான் விரும்புகிற மாதிரி நீங்கள் இருந்தால் நீங்கள் விரும்புகிற மாதிரி நான் இருப்பேன் என்று கூறினான். (நுஜ்ஹதுல் மஜாலிஸ்



 

 


No comments:

Post a Comment