وَاَوْحَيْنَاۤ
اِلَىٰ مُوْسٰى وَاَخِيْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوْتًا
وَّاجْعَلُوْا بُيُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ
(ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹீ அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் : 10:87)
قَالَ
أَكْثَرُ الْمُفَسِّرِينَ: كَانَ بَنُو إِسْرَائِيلَ لَا يُصَلُّونَ إِلَّا فِي
مَسَاجِدِهِمْ وَكَنَائِسِهِمْ وَكَانَتْ ظَاهِرَةً، فَلَمَّا أُرْسِلَ مُوسَى أَمَرَ
فِرْعَوْنُ بِمَسَاجِدِ بَنِي إِسْرَائِيلَ فَخُرِّبَتْ كُلُّهَا وَمُنِعُوا مِنَ
الصَّلَاةِ، فَأَوْحَى اللَّهُ إلى موسى وهارون أن اتخذا لِبَنِي إِسْرَائِيلَ
بُيُوتًا بِمِصْرَ، أَيْ مَسَاجِدَ،
மூஸா நபி
அவர்களின் கூட்டத்தார்கள் அவர்களுக்கென்று கட்டப்பட்டிருந்த பள்ளிவாசல்களிலும்
ஆலயங்களிலுமே தொழுது வந்தார்கள்.
ஃபிர்அவ்ன் அந்த ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்குமாறு உத்தரவிட்ட பிறகு
அங்கே தொழ முடியாமல் போனது. அதற்கு பிறகு அல்லாஹுத்தஆலா உங்கள் சமுதாயத்திற்காக
மிஸ்ர் நாட்டில் வீடுகளை அமைத்துக் கொடுத்து அந்த வீடுகளையே தொழுமிடமாக ஆக்கிக்
கொள்ளுங்கள் என்று மூஸா நபி மற்றும் ஹாரூன் நபி அவர்களுக்கு அல்லாஹு
உத்தரவிட்டான்.
இது மூஸா
நபியின் கூட்டத்தாருக்கு சொல்லப்பட்ட செய்தியாக இருந்தாலும் அனைவருக்கும்
பொருந்தும். நம் இல்லங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் வழியாக
அல்லாஹ் மனித சமூகத்திற்கு சொல்கிறான். இல்லங்கள் வெறுமனே படுத்து உறங்கும்
இடங்களாக, சாப்பிடும் இடங்களாக, ஓய்வெடுக்கும் இடங்களாக, அமைதியையும்
பாதுகாப்பையும் தேடும் இடங்களாக மட்டுமில்லாமல், இறைவனை தொழும் இடமாகவும் இறைவனை
துதிக்கும் இடமாகவும் குர்ஆன் ஓதப்படும் இடமாகவும் இருக்க வேண்டும், அதுவே ஒரு
இஸ்லாமிய இல்லத்தின் அடையாளமாகும்.
أَنَّ
النَّافِلَةَ فِي الْمَنَازِلِ أَفْضَلُ مِنْهَا فِي الْمَسَاجِدِ، حَتَّى
الرُّكُوعَ قَبْلَ الْجُمُعَةِ وَبَعْدَهَا. وَقَبْلَ الصَّلَوَاتِ
الْمَفْرُوضَاتِ وَبَعْدَهَا، إِذِ النَّوَافِلُ يَحْصُلُ فِيهَا الرِّيَاءُ،
وَالْفَرَائِضُ لَا يَحْصُلُ فِيهَا ذَلِكَ، وَكُلَّمَا خَلَصَ الْعَمَلُ مِنَ
الرِّيَاءِ كَانَ أَوْزَنَ وَأَزْلَفَ عِنْدَ اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى.
பள்ளிவாசல்களில்
மட்டுமல்லாது இல்லங்களிலும் தொழ வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
குறிப்பாக உபரியான வணக்கங்களை பள்ளிவாசல்களில் தொழுவதை விட வீடுகளில் தொழுவதே
சிறந்தது என்று கூறுகிறது.
கடமையான
தொழுகைகளை பள்ளியில் தான் தொழ வேண்டும்.
عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَيْسَ صَلاَةٌ
أَثْقَلَ عَلَى المُنَافِقِينَ مِنَ الفَجْرِ وَالعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا
فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ المُؤَذِّنَ،
فَيُقِيمَ، ثُمَّ آمُرَ رَجُلًا يَؤُمُّ النَّاسَ، ثُمَّ آخُذَ شُعَلًا مِنْ
نَارٍ، فَأُحَرِّقَ عَلَى مَنْ لاَ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ بَعْدُ
ஸுப்ஹு, இஷா
ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும்
இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள்
அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
இகாமத்
சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று
தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு
வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.’(புகாரி: 657)
உபரியான தொழுகைகளை
பள்ளிகளும் தொழலாம் என்றாலும் அவைகளை வீட்டில் தொழுவது சிறந்தது. அதற்கு ஒரு
காரணமும் உண்டு லுஹர் அஸர் போன்றவை கடமையான தொழுகைகள் என்பதால் அதில் முகஸ்துதி
வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் உபரியான தொழுகைகளை தொழுகின்ற பொழுது
முகஸ்துதியும் பெருமையும் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. முகஸ்துதி என்பது
அமல்களை பாழாக்கி நன்மைகளை இல்லாமல் ஆக்கி விடும். எனவே நான் சரியான தொழுகைகளை
வீட்டில் தொழுவது சிறந்தது என்று மார்க்கம் கூறுகிறது.
வீட்டில் தொழுவதில் ஐந்து நன்மைகள்
قال العلامة عبدالله بن عبدالرحمن الجبرين رحمه الله: النوافل: الأفضل أن تكون في البيت, وذلك فيه فوائد:
أولاً: أن يعمر البيت بذكر الله, ولا يخلو البيت من ذكر الله.
ثانياً: أنه متى عمّر البيت بالذكر فإنه يكون مطردة للشياطين ومأوى للملائكة والخير
ثالثاً: أنه يكون قدوة حسنة للزوجة, والصغار, ولأهله إذا رأوه يكثر من النوافل, اقتدوا به في هذه النوافل فأكثروا منها.
رابعاً تعليم الأهل...كيفية الصلاة فقد يكون بعض الأولاد أو بعض النساء لا يحسن الصلاة...فإذا صلى ولي أمرهم أمامهم في البيت اقتدوا به وتعلموا صفة الصلاة
خامساً: أن يكون أقرب إلى الإخلاص, وأبعد من الرياء
அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் ஜிப்ரீன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
வீட்டில் தொழுவதில் ஐந்து நன்மைகள்
1. அல்லாஹ்வை நினைவு கூறும் இடமாக வீடு ஆகும்.
2. ஷைத்தானை விரட்டும்.
3. வீட்டிலுள்ளவர்களுக்கு முன்மாதிரியாக அமையும்.
4. குழந்தைகளுக்கு தொழுகைக்கான பயிற்சியாக அமையும்.
5. முகஸ்துதியை விட்டும் தூரமாகும்.
عَنْ زَيْدِ
بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
احْتَجَرَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُجَيْرَةً مُخَصَّفَةً، أَوْ
حَصِيرًا، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي
فِيهَا، فَتَتَبَّعَ إِلَيْهِ رِجَالٌ وَجَاءُوا يُصَلُّونَ بِصَلاَتِهِ، ثُمَّ
جَاءُوا لَيْلَةً فَحَضَرُوا، وَأَبْطَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَنْهُمْ فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ
وَحَصَبُوا البَابَ، فَخَرَجَ إِلَيْهِمْ مُغْضَبًا، فَقَالَ لَهُمْ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا زَالَ بِكُمْ صَنِيعُكُمْ حَتَّى
ظَنَنْتُ أَنَّهُ سَيُكْتَبُ عَلَيْكُمْ، فَعَلَيْكُمْ بِالصَّلاَةِ فِي
بُيُوتِكُمْ، فَإِنَّ خَيْرَ صَلاَةِ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الصَّلاَةَ المَكْتُوبَةَ»
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் (ரமளான் மாதத்தின் ஓர் இரவில்) பாயினால் ஒரு சிறிய அறையை (பள்ளிவாசலில்)
அமைத்துக் கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி
(நபித்தோழர்களில்) சிலரும் வந்து நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர்.
பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தோழர்களிடம்
வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள்
தங்களின் குரலை எழுப்பி (சப்தமிட்ட)னர். (நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களின்
வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்து, ‘(இத்தொழுகையில்
கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செய்ல தொடர்ந்து கொண்டே போகிறது. (இத்தொழுகை)
உங்களின் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (எனவேதான்
இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள்
இல்லங்களிலேயே (கூடுதலான நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட
தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான்
சிறந்ததாகும்’ என்றார்கள்.(புகாரி: 6113)
நபியவர்கள்
சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதையே வழமையாக கொண்டு இருந்தார்கள் என்பதை
ஹதீஸ்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ
سَأَلْتُ
عَائِشَةَ، عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ
التَّطَوُّعِ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا فِي
بَيْتِي، ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي بِالنَّاسِ، ثُمَّ يَرْجِعُ إِلَى بَيْتِي
فَيُصَلِّي رَكْعَتَيْنِ، وَكَانَ يُصَلِّي بِالنَّاسِ الْمَغْرِبَ، ثُمَّ
يَرْجِعُ إِلَى بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ، وَكَانَ يُصَلِّي بِهِمُ
الْعِشَاءَ، ثُمَّ يَدْخُلُ بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ، وَكَانَ يُصَلِّي
مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ فِيهِنَّ الْوِتْرُ، وَكَانَ يُصَلِّي لَيْلًا
طَوِيلًا قَائِمًا، وَلَيْلًا طَوِيلًا جَالِسًا، فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ،
رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ، وَإِذَا قَرَأَ وَهُوَ قَاعِدٌ، رَكَعَ وَسَجَدَ
وَهُوَ قَاعِدٌ ، وَكَانَ إِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ يَخْرُجُ
فَيُصَلِّي بِالنَّاسِ صَلَاةَ الْفَجْرِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
நான் ஆயிஷா
(ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (கடமையல்லாத)
கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு)
கூறினார்கள்:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்)
தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (லுஹர்) தொழுவிப்பார்கள்.
பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு
மஃக்ரிப் தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்)
தொழுவார்கள். மக்களுக்கு இஷா தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு
ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இரவில் ஒன்பது
ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில்
நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும்
தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் ஸஜ்தாவுக்குச்
செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் ஸஜ்தா
செய்வார்கள். ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள்
தொழுவார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷக்கீக் (ரஹ்)(அபூதாவூத்: 1251)
عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ عُمَرَ:
«أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ،
وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ،
وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى
يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»
நபி (ஸல்)
அவர்கள் லுஹருக்கு முன் 2 ரக்அத்களும், லுஹருக்கு
பின் 2 ரக்அத்களும் தொழுபவர்களாகவும்; மஃரிபுக்குப்
பிறகு தம் வீட்டில் 2 ரக்அத்கள் தொழுபவர்களாகவும்; இஷாவுக்குப்
பிறகு 2 ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.
ஜும்ஆவுக்குப்
பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும்
இருந்தனர்.(புகாரி: 937)
நபித் தோழர்கள்
தங்கள் வீட்டில் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி அதை தொழும் இடமாக ஆக்கியிருந்தார்கள்.
أَنَّ
عِتْبَانَ بْنَ مَالِكٍ، كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ
لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ،
إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالسَّيْلُ، وَأَنَا رَجُلٌ ضَرِيرُ البَصَرِ،
فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلَّى،
فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ
تُحِبُّ أَنْ أُصَلِّيَ؟» فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ البَيْتِ، فَصَلَّى فِيهِ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
மஹ்மூத் இப்னு
ரபீஃ கூறினார்:
பார்வையற்ற
இத்பான்பின் மாலிக் தம் சமுதாயத்திற்கு இமாமத் செய்பவராக இருந்தார். (ஒரு நாள்)
நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது!
நானோ பார்வையற்றவன். எனவே நீங்கள் என் வீட்டில் வந்து தொழுங்கள். அவ்விடத்தை நான்
தொழுமிடமாக்கிக் கொள்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்று ‘நான்
எங்கே தொழ வேண்டும் என விரும்புகிறீர்?’ என்று
கேட்டார்கள். அவர் வீட்டில் ஓர் இடத்தைக் காட்டினார். அவ்விடத்தில் நபி(ஸல்)
அவர்கள் தொழுதார்கள்.(புகாரி 667)
வீட்டை
மஸ்ஜிதாக மாற்றிய தாயார்
امرأة صالح بن
حيي ، إنها امرأة مات عنها زوجها وترك لها ولدين ، فلما شبا إذا بها تعلمهم أول ما
تعلمهم العبادة والطاعة وقيام الليل .لقد قالت لولديها : ينبغي ألا تمر لحظة واحدة
من الليل في بيتنا إلا وفيه قائم ذاكر لله عز وجل ، فقالا : وماذا تريدين يا أماه
؟ قالت : نقسم الليل بيننا ثلاثة أجزاء ، يقوم أحدكما الثلث الأول ، ثم يقوم الآخر
الثلث الثاني ، وأقوم أنا الثلث الأخير ، ثم أوقظكما لصلاة الفجر .فقالا : سمعاً
وطاعة يا أماه ، فلما ماتت الأم لم يترك الولدان قيام الليل ، لأن حب الطاعة
والعبادة قد ملأ قلبيهما ، وصارت أحلى لحظات حياتهما هي اللحظات التي يقومان من
الليل ، فقسما الليل بينهما نصفين ، ولما مرض أحدهما مرضاً شديداً قام الآخر الليل
كله وحده
.
ஸாலிஹ் பின் ஹுயை என்பவரின் மனைவி அவர்களுடைய கணவர் இறந்துவிட்ட பிறகு அவர்களுடைய இரண்டு ஆண் மக்களையும் மிக அழகான முறையில் வளர்த்து வந்தார்கள். அவர்களுக்கு இரவு வணக்கத்தின் மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தினார்கள். ஒரு நாள் தன்னுடைய பிள்ளைகளிடத்தில் சொன்னார் ; நம் வீட்டில் இரவில் ஒரு நொடிப் பொழுது கூட தொழாத நேரமாக இருக்கக் கூடாது. அப்போது பிள்ளைகள் அதற்கான விளக்கத்தை கேட்ட போது, நாம் நமக்குள் இரவின் நேரங்களை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்வோம். உங்களில் ஒருவர் இரவில் மூன்று பகுதிகளில் முதல் பகுதியில் நின்று தொழ வேண்டும். இரண்டாம் நபர் இரண்டாவது பகுதியில் நின்று தொழ வேண்டும். பிறகு நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரவின் மூன்றாவது பகுதியில் நான் நின்று தொழுகிறேன். ஃபஜ்ர் நேரம் வருகின்ற பொழுது உங்களை நான் தொழுகைக்கு எழுப்பி விடுகிறேன். இப்படி நமக்குள் இரவை மூன்று பகுதிகளாக பிரித்து கொள்வோம் என்று அந்த தாயார் சொன்னார்கள். தாயையும் அந்த தாயைப் படைத்த இறைவனையும் நேசித்த அந்த பிள்ளைகள் அதற்கு சம்மதம் தெரிவித்து அவ்வாறு தொழுது வந்தார்கள். சில காலங்களுக்குப் பிறகு தாயார் இறந்து விடவே அவர்கள் ஏற்படுத்திய அந்த சுன்னத்தை நாம் விடக்கூடாது. அதை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி இரவை இரண்டு பகுதிகளாக பிரித்து அவ்விருவரும் தொழுது வந்தார்கள். சில காலங்களுக்கு பிறகு அவ்விருவரில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு பலவீனமடைந்த போது மீதம் இருக்கக்கூடிய ஒருவர் மட்டும் இரவு முழுக்க நின்று தொழுது தாயார் ஏற்படுத்திய அந்த சுன்னத்தை விடாமல் பாதுகாத்து வந்தார்.
கடந்த கால குறிப்புகள்
2022அமல்களை இறைவன் மட்டுமா பார்க்கிறான்
2024 நைனூவா மக்கள்
வாஹிதிகள் பேரவை வலிமார்கள்
No comments:
Post a Comment