Sunday, March 9, 2025

தராவீஹ் 10 - நரை ஓர் எச்சரிக்கை

 

عن ابن ‌عباس قال: قال أبو ‌بكر: يا رسولَ اللهِ، أَراكَ قد شِبْتَ، قال: «شَيَّبَتْني هُودٌ، والواقعةُ، والمُرسَلاتُ، و﴿عَمَّ يَتَساءَلُونَ﴾، و﴿إِذا الشَّمْسُ كُوِّرَتْ﴾

அபூபக்கர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்களுக்கு (விரைவாக) நரை ஏற்பட்டு விட்டதே என்று கேட்டார்கள். ஹூத்,வாகிஆ,முர்ஸலாத்,நபஃ, தக்வீர். இந்த அத்தியாயங்கள் எனக்கு நரையை ஏற்படுத்தி விட்டன என்றார்கள். (திர்மிதி ; 3297)

أي: تلك السُّورُ هي سَببُ ما ذكَرتَ مِن الشَّيبِ؛ قيل: وذلِك لِمَا في تلك السُّورِ مِن ذِكْرِ هَلاكِ الأُممِ السَّابقةِ، وما حدَث لهم مِن العذابِ، وذِكْرِ أهوالِ القيامةِ، ومَواقِفِها وعَجائبِها ومَصائبِها، وأحوالِ الهالِكين والمعذَّبين مع ما في بَعضِهنَّ مِن الأمرِ بالاستقامةِ، وهو مِن أصعَبِ المقاماتِ، وكأنَّ ذلك الشَّيبَ بسببِ الخوفِ الصَّادِرَ مِن النَّبيِّ صلَّى اللهُ علَيه وسلَّم مِن الإشفاقِ على أُمَّتِه والخوفِ عليهم.

விரைவாகவே உங்களுக்கு நரை ஏற்பட்டு விட்டதே என்ற அபூபக்கர் ரலி அவர்களின் கேள்விக்கு ஹூது என்ற அத்தியாயமும் அது போன்ற உள்ள சில அத்தியாயங்களும் தான் எனக்கு நரை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன என்று கூறினார்கள். ஏனென்றால் அந்த சூராக்களில் முந்தைய சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட அழிவு. அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு கிடைத்த வேதனை, மறுமை நாளில் ஏற்படும் திடுக்கங்கள், அதே போன்று முந்தைய சமுதாயத்தினர்கள் சந்தித்த சோதனைகள். இதுவெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து படித்த பிறகு தன் சமூகத்தின் மீது அவர்களுக்கு இருந்த அளவிட முடியாது அன்பும் அச்சமும் கவலையும் தான் அவர்களுக்கு நரை வருவதற்கு காரணம் என்று இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.

وَقَدْ قِيلَ : إِنَّ الَّذِي شَيَّبَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سُورَة " هُود " قَوْله في الآية الثانية عشرة منها: " فَاسْتَقِمْ كَمَا أُمِرْت " فهو أمر بالاستقامة والثبات على ذلك ، ولا يصبر على الالستقامة إلا عظماء الرجال .

فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا‌  اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ

ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் : 11:112)

நபி ஸல் அவர்களுக்கு நரை ஏற்படுவதற்கு ஹூத் அத்தியாயத்தின் இந்த வசனம் தான் காரணம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனேன்றால் இந்த வசனத்தில் இஸ்திகாமத் என்று சொல்லப்படுகிற நன்மையான காரியங்களில் நிலைத்திருத்தலைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.இஸ்திகாமத் என்ற தன்மை அநேகமான மக்களிடத்தில் காண முடியாத தன்மை. எனவே அதை சிந்தித்து அதை நினைத்து கவலைப்பட்டதினால் நரை ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.


இஸ்திகாமத் வலிமார்களின் அடையாளம்

قال الإمام ابن حجر العسقلاني رحمه الله: المراد بولي الله: العالم بالله، المواظب على طاعته، المخلص في عبادته؛ (فتح الباري)

இறைநேசர் என்பவர் இறைவனை அறிந்தவர்,இறை வணக்கத்தின் மீது தொடர்படியாக இருப்பவர்,மனத்தூய்மையுடன் இறை வணக்கத்தில் ஈடுபடுபவர். (ஃபத்ஹுல் பாரி)

كن طالبا للاستقامة لا طالبا للكرامة

வலிமார்களிடம் நீங்கள் கராமத்தைத் தேடாதீர்கள். இஸ்திகாமத்தைத் தேடுங்கள் என்று ஞானிகள் கூறுவார்கள்.

عن سعيد بن المسبب - رحمه الله - قال: (ما فاتتني التكبيرة الأولى منذ خمسين سنة، وما نظرت في قفا رجل في الصلاة منذ خمسين سنة

ஐம்பது வருடங்களாக எனக்கு தக்பீர் தஹ்ரீமா தவறியதில்லை. ஐம்பது வருடங்களாக தொழுகையில் எனக்கு முன்னால் இருக்கும் மனிதரின் பின் கழுத்தை நான் பார்த்ததில்லை என்று ஸயீத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஜுனைதுல் பக்தாதி ரஹ் அவர்களிடம் ஒருவர் உங்களிடம் நான் எந்த அற்புதத்தையும் பார்க்க வில்லையே என்று கேட்பார். அதற்கு அவர்கள் நான் என்றைக்காவது ஜமாஅத் தொழுகையை விட்டு பார்த்திருக்கிறாயா என்று கேட்பார்கள். அவர் இல்லை என்று சொல்வார். இதை விட வேறு என்ன அற்புதத்தை நீ எதிர் பார்க்கிறாய் என்று கேட்பார்கள்.


திடுக்கும் என்பது நரைக்கு காரணமாக இருக்கும்

فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبَا  ‏

நீங்கள் (இதை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம் பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கின்ற) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும். (அல்குர்ஆன் : 73:17)

 

فَالْفَزَع يُورِث الشَّيْب وَذَلِكَ أَنَّ الْفَزَع يُذْهِل النَّفْس فَيُنَشِّف رُطُوبَة الْجَسَد , وَتَحْت كُلّ شَعْرَة مَنْبَع , وَمِنْهُ يَعْرَق , فَإِذَا اِنْتَشَفَ الْفَزَع رُطُوبَته يَبِسَتْ الْمَنَابِع فَيَبِسَ الشَّعْر وَابْيَضَّ ; كَمَا تَرَى الزَّرْع الأخْضَر بِسِقَائِهِ , فَإِذَا ذَهَبَ سِقَاؤُهُ يَبِسَ فَابْيَضَّ ;

ஏனென்றால் ஒரு திடுக்கம் உள்ளத்தை நிலைகுலையச் செய்து உடம்பில் இருக்கக்கூடிய ஈரத்தன்மையை எடுத்து விடும். ஈரத்தன்மை போய் விடுகிற காரணத்தினால் தான் முடிகள் கருப்பு நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறமாக மாறி விடுகிறது. எவ்வாறு தேவையான நீர் இல்லையென்றால் ஒரு விவசாயம் பட்டு போய் விடுமோ அந்த மாதிரி மனித உடம்பிலும் நிகழ்கிறது. வயதானவர்களின் உடம்பில் ஈரத்தன்மை குறைந்து விடும். அதனால் தான் அவர்களது தலை முடியில் நரை ஏற்படுகிறது.

 

நரை என்பது மவ்த் நெருங்கி விட்டது என்பதை அறிவிக்கும் ஒன்று.

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்). (அல்குர்ஆன் : 35:37)

 

قَوْلُهُ تَعَالَى: ﴿وَجاءَكُمُ النَّذِيرُ﴾ وقرى "وَجَاءَتْكُمُ النُّذُرُ" وَاخْتُلِفَ فِيهِ، فَقِيلَ الْقُرْآنُ. وَقِيلَ الرَّسُولُ، قَالَهُ زَيْدُ بْنُ عَلِيٍّ وَابْنُ زَيْدٍ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَعِكْرِمَةُ وَسُفْيَانُ وَوَكِيعٌ وَالْحُسَيْنُ ابن الْفَضْلِ وَالْفَرَّاءُ وَالطَّبَرِيُّ: هُوَ الشَّيْبُ. وَقِيلَ: النَّذِيرُ الْحُمَّى. وَقِيلَ: مَوْتُ الْأَهْلِ وَالْأَقَارِبِ. وَقِيلَ: كَمَالُ العقل. والنذير بمعنى الإنذار. قرطبي

எச்சரிக்கை செய்யக்கூடியவர் உங்களிடம் வந்திருக்கிறார் என்ற வார்த்தைக்கு இமாம்கள் பல்வேறு விளங்களை கூறுகிறார்கள்.

குர்ஆன் என்று சிலரும் நபி ஸல் அவர்கள் என்று சிலரும் நோய்கள் என்று சிலரும் நெருக்கமானவர்களின் மரணம் என்று சிலரும் கூறுகிறார்கள்.நரை வந்து விட்டது என்று இப்னு அப்பாஸ் ரலி இக்ரிமா ரலி போன்றோர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இவைகளெல்லாம் மரணம் நெருங்கி விட்டது. நீ மரணத்தை சந்திப்பதற்கு தயாராகிக் கொள். உன்னை திருத்திக் கொள்.பாவங்களை விட்டும் விலகி நன்மைகளில் கவனம் செலுத்து.பாவ மன்னிப்பைத் தேடு என்றெல்லாம் மனிதனைப் பார்த்து கூறுகின்றன.

 

நமக்கு வரும் நோய்கள் நம்மை எச்சரிக்கின்றது.

وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْ مُّصِيْبَةٌ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَيَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَـتَّبِعَ اٰيٰتِكَ وَنَـكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏

(நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்). (அல்குர்ஆன் : 28:47)

இவ்வாறு நோய்கள்,நரை முடி,சோதனைகள்,நெருங்கியவர்களின் மரணம் இவைகளையெல்லாம் அல்லாஹ் நமக்கு தருவது நாம் படிப்பினை பெறுவதற்குத் தான். இதிலும் படிப்பினை பெறாதவர்கள் கைசேதமடைந்தவர்கள் ஆகும்.

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِىَ الْاَمْرُ‌‌ۘ وَهُمْ فِىْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ‏

ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (அல்குர்ஆன் : 19:39)

 

قال الإمام ابن قتيبة رحمه الله: رأى إياس بن قتادة شعرة بيضاء في لحيته, فقال: أرى الموت يطلبني وأراني لا أفوته, أعوذ بك يا رب من فُجاءات الأمور

இயாஸ் பின் கதாதா ரஹ் அவர்கள் தன் தலையில் நரைமுடியை பார்த்த போது மரணம் என்னைத் தேடுகிறது. நான் அதிலிருந்து தப்ப முடியாது என்று கூறி விட்டு திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன் என்றும் சொன்னார்கள்.

 وقال الحافظ ابن رجب رحمه الله: من لم ينذره باقتراب أجله وحي, أنذره الشيب وسلب أقرانه بالموت...من نزل به الشيب فهو بمنزلة الحامل التي تمت شهور حملها, فما تنتظر إلا الولادة, كذلك صاحب الشيب لا ينتظر إلا الموت

ஒருவருக்கு குர்ஆனும் ஹதீஸும் மரணத்தை எச்சரிக்கவில்லை என்றால் அவருக்கு ஏற்படுகின்ற நரைமுடி அவருக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை அறிவித்து விடும். நரைமுடி வந்து விட்டவர் வயிற்றில் குழந்தையை சுமந்து இருக்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணைப் போல. அவள் குழந்தையை எதிர்பார்க்கிறாள். இவர் மரணத்தை எதிர்பார்க்கிறார் என்று அல்லாமா இப்னு ரஜப் ரஹ் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நரை முடி கியாமத்தில் ஒளி

عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ القِيَامَةِ  رواه الترمذي (1635)

அல்லாஹ்வுடைய பாதையில் யாருக்கு நரை ஏற்பட்டதோ கியாமத்து நாளில் அது அவருக்கு ஒளியாக இருக்கும். (திர்மிதி ; 1635)

 

நரையை பிடுங்குவதை மார்க்கம் தடுக்கின்றது

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ: لاَ تَنْتِفُوا الشَّيْبَ فَاِنَّهُ نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَّ شَيْبَةً فِي اْلاِسْلاَمِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ. رواه ابن حبان

நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள், ஏனென்றால், கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்குக் காரணமாகும், எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிறாரோ, (ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்), அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு பதவி உயர்த்தப்படுகிறது”  (இப்னு ஹிப்பான்)

 

கருப்பல்லாத மற்றதைக் கொண்டு நரையை மறைப்பது தவறல்ல

فعن جابر بن عبد الله رضي الله عنه قال: (أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بياضا، فقال رسول الله صلى الله عليه وسلم: غيروا هذا بشيء واجتنبوا السواد

'மக்கா வெற்றி நாளில் நபித் தோழர் அபூபக்கர் ரலி அவர்களின் தந்தை அபூ குஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் பொல வெள்ளை வெளேர் என்று இருந்தது. அப்போது நபியவர்கள் 'இந்த வெள்ளை நிறத்தை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.' என்று கூறினார்கள். (முஸ்லிம்: 4270)

கடந்த கால குறிப்புகள்

2022 அழகிய வரலாறு

2023 வான்மறை கூறும் வரலாறுகள்

2024 பொறாமைத் தீ

வாஹிதிகள் பேரவை நன்மைகள் தீமைகளை அழித்து விடும்

No comments:

Post a Comment