Tuesday, March 11, 2025

தராவீஹ் 11- அவன் விரும்பியதை மாற்றி அமைக்கிறான்

 




يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ ‌ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ‏

(எனினும், அதில்) அவன் நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லாக் காரியங்களும் தவறாது நடைபெறும்.) (அல்குர்ஆன் : 13:39)



وَقَالَ قَتَادَةُ وَابْنُ زَيْدٍ وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ: يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ مِنَ الْفَرَائِضِ وَالنَّوَافِلِ فَيَنْسَخُهُ وَيُبَدِّلُهُ، وَيُثْبِتُ مَا يَشَاءُ فَلَا يَنْسَخُهُ، وَجُمْلَةُ النَّاسِخِ وَالْمَنْسُوخِ عِنْدَهُ فِي أُمِّ الْكِتَابِ، وَنَحْوُهُ ذَكَرَهُ النَّحَّاسُ وَالْمَهْدَوِيُّ 

கடமையான விஷயங்களிலும் உபரியான விஷயங்களிலும் அவன் விரும்பியதை நீக்கி விடுவான் அவன் விரும்பியதை தரிபடுத்துவான் என்று கத்தாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.



عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ النَّحَّاسُ: وَحَدَّثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ، قَالَ حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَلِيُّ بْنُ أَبِي طَلْحَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ، "يَمْحُوا اللَّهُ مَا يَشاءُ" يَقُولُ: يُبَدِّلُ اللَّهُ مِنَ الْقُرْآنِ مَا يَشَاءُ فَيَنْسَخُهُ، "وَيُثْبِتُ" مَا يَشَاءُ فَلَا يُبَدِّلُهُ، "وَعِنْدَهُ أُمُّ الْكِتابِ" يَقُولُ: جُمْلَةُ ذَلِكَ عِنْدَهُ فِي أُمِّ الْكِتَابِ، النَّاسِخُ وَالْمَنْسُوخُ



குர்ஆனில் அவன் இறக்கிய வசனங்களை, சட்டங்களை அவர் விரும்பினால் அதை நீக்கிவிட்டு அதற்கு பகரமாக வேறு வசனங்களையும் அல்லது சட்டங்களையும் கொண்டு வருவான்.அல்லது அவ்வாறு செய்யாமல் விட்டு விடவும் செய்வான் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.



وَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ أَيْضًا: يَغْفِرُ مَا يَشَاءُ- يَعْنِي- مِنْ ذُنُوبِ عِبَادِهِ، وَيَتْرُكُ مَا يَشَاءُ فَلَا يَغْفِرُهُ

அல்லாஹ் அவன் விரும்பியவர்களுக்கு பாவங்களை மன்னிப்பான். அவன் விரும்பியவர்களுக்கு மன்னிக்காமல் அந்த பாவங்களை அவரிடத்திலேயே விட்டு விடுவான் என்று ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.



وَقَالَ عِكْرِمَةُ: يَمْحُو مَا يَشَاءُ- يَعْنِي بِالتَّوْبَةِ- جَمِيعَ الذُّنُوبِ وَيُثْبِتُ بَدَلَ الذُّنُوبِ حَسَنَاتٍ [قَالَ تَعَالَى](٧): ﴿إِلَّا مَنْ تابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صالِحاً﴾(٨) [الفرقان: ٧٠]



அல்லாஹ் பாவ மன்னிப்பின் மூலமாக அடியார்கள் செய்யக்கூடிய பாவங்களை எல்லாம் அழித்து அந்த பாவங்களுக்கு பகரமாக நன்மைகளை தரிபடுத்துவான் என்று இக்ரிமா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.



وَقَالَ الرَّبِيعُ بْنُ أَنَسٍ: هَذَا فِي الْأَرْوَاحِ حَالَةَ النَّوْمِ، يَقْبِضُهَا عِنْدَ النَّوْمِ، ثُمَّ إِذَا أَرَادَ مَوْتَهُ فَجْأَةً أَمْسَكَهُ، وَمَنْ أَرَادَ بَقَاءَهُ أَثْبَتَهُ وَرَدَّهُ إِلَى صَاحِبِهِ، بَيَانُهُ قَوْلُهُ: "اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِها"(١٠) الآية [الزمر: ٤٢]



اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌  فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌  اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ

மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.  (அல்குர்ஆன் : 39:42)



இந்த வசனத்தின் படி ஒருவர் தூங்கும் போது அவருடைய உயிர் கைப்பற்றப்படுகிறது அவன் விரும்பினால் அதை அப்படியே வைத்துக் கொள்வான் அவன் விரும்பினால் அதை திருப்பி அந்த அடியானுக்கு கொடுத்து விடுவார்கள் என்று ரபீஃ பின் அனஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.



وَقِيلَ: هُوَ الرَّجُلُ يَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِطَاعَةِ اللَّهِ، ثُمَّ يَعْمَلُ بِمَعْصِيَةِ اللَّهِ فَيَمُوتُ عَلَى ضَلَالِهِ، فَهُوَ الَّذِي يَمْحُو، وَالَّذِي يُثْبِتُ: الرَّجُلُ يَعْمَلُ بِمَعْصِيَةِ اللَّهِ الزَّمَانَ الطَّوِيلَ ثُمَّ يَتُوبُ، فَيَمْحُوهُ اللَّهُ مِنْ دِيوَانِ السَّيِّئَاتِ، وَيُثْبِتُهُ فِي دِيوَانِ الْحَسَنَاتِ

 

ஒருவர் நீண்ட காலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நன்மையான காரியங்களில் நிலைத்திருப்பார். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு பாவமான காரியத்தை செய்து அதிலேயே மரணித்து விடுவார். அல்லாஹு அழித்து விடக் கூடிய மனிதர் இவர். ஒருவர் நீண்ட காலமாக பாவத்திலேயே மூழ்கிப் போய் இருப்பார். ஆனால் கடைசி நேரத்தில் நன்மையின் பக்கம் திரும்பி தவ்பா செய்து அந்த நிலையில் மரணித்து விடுவார். அல்லாஹ் தரிபடுத்தக்கூடிய மனிதர் இவர் என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.




وَقَالَ كَعْبٌ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ لَأَنْبَأْتُكَ بِمَا هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. "يَمْحُوا اللَّهُ مَا يَشاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتابِ". 

அல்லாஹு அவன் விரும்பியதை அழித்து விடுவான் அவன் விரும்பியதை அப்படியே வைத்து விடுவான் என்று வரக்கூடிய அந்த வசனம் மட்டும் குர்ஆனில் இல்லை என்றால் நான் உங்களுக்கு உலக அழிவு நாள் வரைக்கும் நடப்பவற்றை அறிவித்து விடுவேன் என்று உமர் ரலி அவர்களை பார்த்து கஅப் ரலி அவர்கள் கூறினார்கள்.




மேற்கூறப்பட்ட விளக்கங்களை எல்லாம் வைத்துப் பார்க்கிற பொழுது அல்லாஹ் எதையும் எப்படியும் மாற்றுவதற்கு அதிகாரம் படைத்தவன். யாரையும் எந்த நிலையில் இருந்தும் எந்த நிலையின் பக்கமும் திருப்புவதற்கு அவனுக்கு அதிகாரம் உள்ளது. அவனுடைய அந்த அதிகாரத்தில் யாரும் தலையீடு செய்ய முடியாது. ஏனென்று கேட்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எனவே நாம் செய்ய வேண்டியது எல்லாம் துஆ மட்டும் தான். 



أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَطُوفُ بِالْبَيْتِ وَهُوَ يَبْكِي وَيَقُولُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنِي فِي أَهْلِ السَّعَادَةِ فَأَثْبِتْنِي فِيهَا، وَإِنْ كُنْتَ كَتَبْتَنِي فِي أَهْلِ الشَّقَاوَةِ وَالذَّنْبِ فَامْحُنِي وَأَثْبِتْنِي فِي أَهْلِ السَّعَادَةِ وَالْمَغْفِرَةِ، فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ، وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ

 

உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் கஃபாவை தவாப் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அழுது கொண்டே இறைவா என்னை பாக்கியசாலிகளில் ஒருவனாக நீ எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்திவிடு. ஒருவேளை அபாக்கியசாலிகளில் என்னை நீ எழுதி இருந்தால் அதை அழித்து பாக்கியவான்களில் ஒருவனாக என்னை நீ மாற்றி விடு. ஏனென்றால் நீ விரும்பியதை அழித்து விடுவாய். நீ விரும்புவதை தரிப்படுத்துவாய் என்று கூறினார்கள்.

وَقَالَ ابْنُ مَسْعُودٍ: اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنِي فِي السُّعَدَاءِ فَأَثْبِتْنِي فِيهِمْ، وَإِنْ كُنْتَ كَتَبْتَنِي فِي الْأَشْقِيَاءِ فَامْحُنِي مِنَ الْأَشْقِيَاءِ وَاكْتُبْنِي فِي السُّعَدَاءِ، فَإِنَّكَ: تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ، وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ

 

وَكَانَ أَبُو وَائِلٍ يُكْثِرُ أَنْ يَدْعُوَ: اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنَا أَشْقِيَاءَ فَامْحُ وَاكْتُبْنَا سُعَدَاءَ، وَإِنْ كُنْتَ كَتَبْتَنَا سُعَدَاءَ فَأَثْبِتْنَا، فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ



இப்னு மஸ்வூது ரலி அபூ வாயில் ரலி  போன்றோரும் இவ்வாறு துஆ செய்து இருக்கிறார்கள்.




وَقَالَ مَالِكُ بْنُ دِينَارٍ فِي الْمَرْأَةِ الَّتِي دَعَا لَهَا: اللَّهُمَّ إِنْ كَانَ فِي بَطْنِهَا جَارِيَةٌ فَأَبْدِلْهَا غُلَامًا فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ

 

மாலிக் பின் தீனார் ரஹ் அவர்கள் கருவுற்ற ஒரு பெண்ணுக்கு துஆ செய்கின்ற பொழுது இறைவா இவளுடைய வயிற்றில் பெண் பிள்ளையை நீ வைத்திருந்தால் அதை ஆண் பிள்ளையாக மாற்றி அவளுக்கு கொடுத்து விடுவாயாக என்று துஆ செய்தார்கள்.



நாம் செய்யக்கூடிய துவாக்கள் நம் கொடுக்கக்கூடிய சதக்காக்கள் நம் ஆயுளை அதிகப்படுத்தும் நமக்கு வர வேண்டிய துன்பங்களை தடுக்கும் அல்லாஹ்வுடைய விதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் மேற்கூறப்பட்ட அந்த ஆயத்தின் கருத்தை வைத்து நாம் விளங்கிக் கொள்கிறோம்.



عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ: "مَنْ أَحَبَّ أَنْ يَمُدَّ اللَّهَ فِي عُمْرِهِ وَأَجَلِهِ وَيَبْسُطَ لَهُ فِي رِزْقِهِ فَلْيَتَّقِ اللَّهَ وَلْيَصِلْ رَحِمَهُ" كَيْفَ يُزَادُ فِي الْعُمْرِ وَالْأَجَلِ؟! فَقَالَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: ﴿هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضى أَجَلًا وَأَجَلٌ مُسَمًّى عِنْدَهُ﴾(٥) [الأنعام: ٢]. فَالْأَجَلُ الْأَوَّلُ أَجَلِ الْعَبْدِ مِنْ حِينِ وِلَادَتِهِ إلى حين موته، والأجل الثَّانِي- يَعْنِي الْمُسَمَّى عِنْدَهُ- مِنْ حِينِ وَفَاتِهِ إِلَى يَوْمِ يَلْقَاهُ فِي الْبَرْزَخِ لَا يَعْلَمُهُ إِلَّا اللَّهُ، فَإِذَا اتَّقَى الْعَبْدُ رَبَّهُ وَوَصَلَ رَحِمَهُ زَادَهُ اللَّهُ فِي أَجَلِ عُمْرِهِ الْأَوَّلِ مِنْ أَجَلِ الْبَرْزَخِ، مَا شَاءَ، وَإِذَا عَصَى وَقَطَعَ رَحِمَهُ نَقَصَهُ اللَّهُ مِنْ أَجَلِ عُمْرِهِ فِي الدُّنْيَا مَا شَاءَ، فَيَزِيدُهُ فِي أَجَلِ الْبَرْزَخِ فَإِذَا تَحَتَّمَ الْأَجَلُ فِي عِلْمِهِ السَّابِقِ امْتَنَعَ الزِّيَادَةُ وَالنُّقْصَانُ، لِقَوْلِهِ تَعَالَى: ﴿فَإِذا جاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ ساعَةً وَلا يَسْتَقْدِمُونَ﴾(٦) [الأعراف: ٣٤] 



هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا   وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ‌ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ‏

அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்.  (அல்குர்ஆன் : 6:2)




ஒரு குழந்தை தாயின் வயிற்றில் அதற்கு ரூஹ் ஊதப்படும் போதே அதனுடைய ஆயுட்காலம் எழுதப்பட்டு விடும்ஹ அது எத்தனை ஆண்டு காலம் உலகத்தில் வாழும்? என்பது முடிவு செய்யப்பட்டு விடும். அப்படி இருக்க ஆயுள் காலத்தில் எப்படி கூடுதல் குறைவு ஏற்படும்? என்ற கேள்விக்கு இந்த ஆயத்தின் மூலம் மார்க்க அறிஞர்கள் பதில் கூறுகிறார்கள். 

அதாவது அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு தவணை வைத்திருக்கிறான். முதலாவது தவணை அவன் பிறந்ததிலிருந்து இறக்கின்ற வரை. இரண்டாவது தவணை அவன் இறந்ததிலிருந்து அல்லாஹ்வை சந்திக்கும் வரை. ஒருவன் நல்ல காரியங்களை செய்தால், ஆயுளை அதிகப்படுத்துகின்ற சதக்கா துஆ போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அல்லாஹுத்தஆலா அவனுடைய இரண்டாவது தவணையில் இருந்து சில வருடங்களை எடுத்து அவனுடைய முதல் தவணையில் இணைத்து விடுவான். அதன் மூலம் அவனுக்கு உலகத்தில் வாழக்கூடிய காலங்கள் அதிகமாகி அவனுடைய இரண்டாவது தவணையில் காலங்கள் குறைந்துவிடும். அதே சமயத்தில் ஒருவன் பாவமான காரியங்களில் ஈடுபட்டால், ஆயுளையும் பரக்கத்தையும் குறைக்கக்கூடிய காரியங்களை செய்தால் அல்லாஹுத்தஆலா அவனுடைய முதல் தவணையில் இருந்து சில வருடங்களை எடுத்து இரண்டாவது தவணையில் சேர்த்து விடுவான். அப்போது அவன் உலகத்தில் வாழக்கூடிய வருடங்கள் குறைந்து இரண்டாவது தவணையில் அவனுடைய காலங்கள் அதிகரித்து விடும்.



دخل ملك الموت على نبى الله داوود

فنهض النبي عليه السلام .

وقال : أهلا بأخي وحبيبي ملك الموت ، أجئتني قابضاً أم زائرا

قال لا جئت أعلمك بأمر هذا الشاب

الذي في مجلسك بقي من عمره عشرة أيام

والشاب عمره عشرين سنة يأتي

ليجالس نبي الله ؟؟؟

فاغتم نبي الله داوود ، واخذ يراقب هذا الشاب ،

ومضت الايام العشر ولم يأتيه الموت لهذا الشاب

واذ بملك الموت يدخل على نبي الله

فنهض وقال :

اهلا بأخي وحبيبي ملك الموت أجئتني قابضا أم زائرا

قال ملك الموت : لا جئت أعلمك بأمر هذا الشاب الذي خرج من مجلسك

قال نبي الله : بلى ياملك الموت

قلت لي عشرة أيام و إلى اليوم ستة عشرة يوما !!!

قال أمرني ربي أن أقبض روحه

فمشيت شرقا وغرباً

فلم أجد له لقمة يأكلها ولا جرعة ماء يشربها 

ومابقي له إلا انفاساً معدودة هو يمشي وانا أمشي بجانبة

فمر به فقيرا وقال أعطني بالله

عليك ..

فمد يده في جيبه وأخرج ستة دنانير وأعطاها للفقير ..

فقال الفقير :أطال الله في عمرك وجعلك رفيق داوود في الجنة

فناداه رب العزة تعال ياملك الموت لاتقبض ؟

قال ملك الموت: ربي لم يكن له لقمة يأكلها ولا جرعة ماء يشربها 

ومابقي له إلا انفاس معدودة ؟

قال الله : اما رأيت ماأعطى الفقير

قال بلى ؟

اما سمعت دعاء الفقير

قال بلى :

قال اذهب الى نبي الله وقل السلام يقرؤك السلام

ويقول لك ان الله اعطاه بستة دنانير

ستين عاماً

ولايموت الا وله من العمر ثمانين عاما وهو رفيقك ياداوود في الجنة.



ஒரு நாள் மலக்குல் மவுத் இஸ்ராயில் அலை அவர்கள் தாவூத் நபியிடத்தில் வந்தார்கள். அப்போது அவர்கள் என்னை பார்க்க வந்தீர்களா அல்லது என் உயிரை கைப்பற்ற வந்தீர்களா என்று கேட்டார்கள். இல்லை உங்கள் சபையில் உங்களோடு அமர்ந்திருக்கிற ஒரு வாலிபரைப் பற்றி உங்களுக்கு சொல்வதற்கு வந்திருக்கிறேன். அந்த சபையில் அமர்ந்திருக்கிற 20 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் உயிரை இறைவன் கைப்பற்றும்படி சொல்லி விட்டான். அவருடைய ஆயுளில் அவருக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன என்று சொன்னார்கள். இதைக் கேட்ட தாவூது நபி அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள். ஆனால் பத்து நாட்கள் கடந்தும் அந்த வாலிபர் மரணிக்காமல் உயிரோடு இருந்தார். மீண்டும் இஸ்ராயீல் அலை அவர்கள் தாவூத் நபியிடத்தில் வந்த போது அதற்கான விளக்கத்தைக் கேட்டார்கள். அப்போது அவர்கள் அவரைக் குறித்து சொன்னார்கள். அவரின் ரூஹை கைப்பற்றும் படி அல்லாஹ் கூறி விட்டான். அவருடைய ஆயுள் முடிந்து விட்டது. அவருடைய ரிஸ்கில் உணவோ குடிபானமோ எதுவும் இல்லாத அளவிற்கு எல்லாம் அவருக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. அவருடைய ஆயுளில் ஒரு சில நொடிகளே இருந்தன. அவருடைய உயிரை கைப்பற்றுவதற்கு வந்து கொண்டிருந்த பொழுது அவரிடத்தில் ஒரு ஏழை வந்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்க, அவர் 6 தினார்களை எடுத்து அந்த ஏழைக்கு வழங்கினார். இப்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னிடத்தில் அவரது உயிரை கைப்பற்ற வேண்டாம் என்று கூறினான். அவருடைய ஆயுள் முடிந்து விட்டதாக சொன்னாயே என்று கேட்ட போது, அவர் கொடுத்ததை பார்த்தீர்களா? அவரிடத்தில் தீனாரைப் பெற்ற அந்த ஏழையின் நாவிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளை கேட்டீர்களா? இவருக்கு ஆயுள் காலத்தை நீக்கி விடுவாயாக என்று அவர் கேட்டார். எனவே அவர் கொடுத்த ஆறு தீனாருக்கு பக்கமாக அவருக்கு மேலும் 60 வருடத்தை நான் அதிகப்படுத்தி விட்டேன் என்று அல்லாஹ் கூறினான்.



அல்லாஹ்விடம் அதிகம் துஆ செய்வோம். ஸதகாக்கள் செய்வோம். நீண்ட ஆயுளைப் பெறுவோம்.

 

கடந்த கால பதிவுகள்

2022 குர்ஆன் கூறும் தேனீக்கள்

2023 நிம்மதி

2024 அனைத்தும் வசப்படும்

வாஹிதிகள் பேரவை ரிஸ்க்

1 comment: