يٰبَنِىْۤ
اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ
يَذَّكَّرُوْنَ
ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (அல்குர்ஆன் : 7:26)
இந்த வசனத்தில் அல்லாஹ் நமக்கு ஆடைகளை வழங்கியிருப்பதாக சொல்லி விட்டு
ஆடையின் இரண்டு நோக்கங்களை கூறுகிறான்.
1. மானத்தை
மறைப்பது.
2. அலங்காரம்
நாம் உடுத்துகின்ற ஆடைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
மறைக்க வேண்டிய உறுப்புக்கள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.அது தான் ஆடை உடுத்துவதின்
முதல் நோக்கம்.
ஆடைகள் விஷயத்தில் இமாம்கள் சில நிபந்தனைகள் விதிக்கின்றனர்
1. மறைக்க வேண்டிய
உறுப்புக்களை அந்த ஆடை மறைக்க வேண்டும்.
2. உடல் பாகங்கள்
தெரிகின்ற அளவு மெல்லியதாக இருக்கக்கூடாது.
3. ஆண்கள்
பெண்களைப் போன்றோ பெண்கள் ஆண்களைப் போன்றோ அணியக்கூடாது.
4. இறை நிராகரிப்பாளர்களுக்கு
ஒப்பாக இருக்கக்கூடாது.
5. பெருமைக்காக அணியக்கூடாது.
உடலை மறைக்கும் ஆடை
قال أسامة بن
زيد رضي الله عنهما : ( كساني رسول الله صلى الله عليه وسلم قُبْطِيَّةً كثيفة مما
أهداها له دِحْيَةُ الكلبي , فكسوتُها امرأتي , فقال:" ما لك لم تلبس
القُبْطِيَّةً ؟ " , قلت: ( كسوتُها امرأتي ) , فقال: " مُرها , فلتجعل
تحتها غُلالة – وهي شعار يُلْبَسُ تحت الثوب – فإني أخاف أن تَصِفَ حجمَ عِظامِها
" ) [ حسن ]
உஸாமா இப்னு
ஜைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு முறை தங்களுக்கு
அன்பளிப்பாக வந்த எகிப்து தேசத்தின் ஆடை ஒன்றை எனக்கு அன்பளிப்பாக அணியக் கொடுத்தார்கள்.
நான்
வீட்டிற்குச் சென்று அதை என் மனைவியிடம் அணிந்து கொள்ளுமாறு கூறிவிட்டேன். பின்பு
நான் அண்ணலாரின் சபைக்கு வந்த போது என்னிடம் ”உஸாமாவே உம்மிடம் நான் தந்த ஆடையை
நீர் ஏன் அணிய வில்லை?” என்று நபி {ஸல்}
அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வின் தூதரே! அதனை நான் என் மனைவிக்கு அணியக்
கொடுத்து விட்டதைக்” கூறினேன். அதைக் கேட்ட நபி {ஸல்}
அவர்கள் “உமது மனைவியிடம் அந்த ஆடையை அணியும் போது அதனுள் ஓர்
உள்ளாடையை அணிந்து கொள்ளும் படி நீர் கூறும்! ஏனெனில், உமது
மனைவியின் உடலமைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்து விடுமோ என நான் அஞ்சுகின்றேன்”
எனக் கூறினார்கள். (ஸியரு அஃலாமின் நுபலா )
حفصة بنت عبد
الرحمن بن أبي بكر دخلت على عائشة رضي الله عنها وعليها خمار رقيق يشف عن جبينها،
فشقته عائشة عليها، وقالت: أما تعلمين ما أنزل الله في سورة النور[6]؟! ثم دعت
بخمار فكستها[7]، وفي رواية الموطأ: ((وكستها حمارًا كثيفًا
ஒரு முறை
அபூபக்கர் ரலி அவர்களின் பேத்தியான ஹஃப்ஸா ஆயிஷா ரலி அவர்களிடத்தில் வந்தார்கள்.
அப்போது உடல் அவயங்கள் வெளியே தெரிகின்ற வகையில் மெல்லிய ஆடை ஒன்றை
உடுத்திருந்தார்கள். அதைப் பார்த்த ஆயிஷா ரலி அவர்கள் அதை வாங்கி கிழித்து
விட்டார்கள். நூர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கிய வசனம் உனக்கு தெரியாதா
என்று கேட்டு விட்டு வேறு ஒரு கனமான ஆடையை எடுத்து அவருக்கு அணிவித்து விட்டார்கள்.
صنفان من أهل
النارلم أَرَهُمَا : قوم معهم سِياطٌ كأذناب البقر يضربون بها الناس , ونساء
كاسيات عاريات , مُمِيلاتٌ مائلات , رؤوسهن كأسنمة البُخْتِ المائلة , لا يدخلن
الجنة , ولا يجدن ريحها , وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا " .[ مسلم ]
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “இரு வகையினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களில் ஒரு வகையினர்
மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டு மக்களை
அவர்கள் அடிப்பார்கள். இன்னொரு வகையினர் ஆடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும்
பெண்களாவார்கள். பிறரைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களும் பிறர் பக்கம்
வீழ்வார்கள். இவர்களின் தலை உயரமான கழுத்துடன் அங்கும் இங்கும் சாயும் ஆண்
ஒட்டங்களின் திமில்களைப் போல் இருக்கும். இவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.
அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சுவனத்தின் வாடையை இன்னின்ன தூரத்தில் இருந்து
கூட நுகரலாம்.(முஸ்லிம்)
இறை
நிராகரிப்பாளர்களின் ஆடை
وعن عبد الله
بن عمرو رضي الله عنهما قال : " رأى رسول الله صلى الله عليه وسلم عَلَيَّ
ثوبين معصفرين , فقال : ( إن هذه من ثياب الكفار فلا تَلْبَسها ). [ مسلم ]
அப்துல்லாஹ்
இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை
அணிந்திருந்தேன். இதைக் கண்ட நபி {ஸல்} அவர்கள்
இந்த ஆடைகளை அணியாதீர்கள்! இவை நிராகரிப்போர்களுடைய ஆடைகள்” என என்னிடம்
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
قال رسول الله
صلى الله عليه وسلم : " من تشبه بقوم فهو منهم " . [ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”மாற்றார்களின்
கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களே!”(முஸ்லிம்)
புகழுக்காக ஆடை
قال رسول الله
صلى الله عليه وسلم : " ومن لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ في الدنيا , ألبسه الله
ثوبَ مَذَلَّةٍ يوم القيامة , ثم ألهب في ناراً " . [ حسن ]
“உலகில்
புகழுக்காகவும், பிறர் புகழ்வதற்காகவும் ஆடை
அணிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் இழிவெனும் ஆடையை அணிவித்து நரகத்தில்
புகுத்துவான்.”(நஸாயீ )
பெருமைக்காக
ஆடை
عَنْ أَبِي
ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«ثَلَاثَةٌ لَا
يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا
يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قَالَ: فَقَرَأَهَا رَسُولُ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا، قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا
وَخَسِرُوا، مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْمُسْبِلُ، وَالْمَنَّانُ،
وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ»
நபி (ஸல்)
அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத்
தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான்
உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை
கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள்
இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச்
சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம் 171
ஆண்களைப்
போன்று ஆடை அணியும் பெண்கள்
وعن أبي هريرة
رضي الله عنه قال : " لعن رسولُ الله صلى الله عليه وسلم الرجلَ يَلْبَس
لِبْسَةَ المرأة , والمرأة تلبَسُ لِبسَةَ الرجل " . [ صحيح ]
“அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களையும், பெண்களைப்
போன்று ஆடை அணியும் ஆண்களையும் சபித்தார்கள்.”(முஸ்லிம்
தனியாக இருந்தாலும் மறைக்க வேண்டியதை
மறைத்தாக வேண்டும்
يا رسولَ
اللهِ، عَوْراتُنا ما نأتي منها وما نذَرُ؟ قال: احفَظْ عَورَتَك إلَّا مِن
زَوجتِك أو ما ملَكَت يمينُك. قال: قلتُ: يا رسولَ اللهِ، إذا كان القَومُ بعضُهم
فى بعضٍ؟ قال: إنِ استطَعْتَ أنْ لا يريَنَّها أحدٌ فلا يريَنَّها. قال: قلتُ: يا
رسولَ اللهِ، إذا كان أحدُنا خاليًا؟ قال: اللهُ أحَقُّ أن يُستَحيا منه مِن
النَّاسِ
அல்லாஹ்வின்
தூதரே, எங்கள் 'அவ்ராவைப்
பொறுத்தவரை, அதில் நாம் என்ன மறைக்க வேண்டும்,
எதை நாம் வெளிப்படுத்த வேண்டும்? என்று கேட்கப்பட்டது. நபியவர்கள்
கூறினார்கள் : "உங்கள் மனைவியிடமிருந்தும், உங்கள்
வலது கை வைத்திருப்பவர்களிடமிருந்தும் (அதாவது, அடிமைகள்)
தவிர உங்கள் 'அவ்ராவை (முழுமையாக) மூடு." அல்லாஹ்வின்
தூதரே, மக்கள் நெருக்கமாக இருந்தால் என்ன? என்று கேட்ட போது "யாரும்
அதைப் பார்க்கவில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய முடிந்தால், அதை யாரும் பார்க்க விடாதீர்கள்." என்றார்கள். அல்லாஹ்வின்
தூதரே, நம்மில் ஒருவர் தனியாக இருந்தால் என்ன செய்வது?
என்று கேட்கப்பட்ட போது மக்களை விட நீங்கள் வெட்கப்படுவதற்கு "அல்லாஹ் மிக தகுதியானவன்
என்று கூறினார்கள்.
ஆயிஷா
ரலி அவர்களின் பேணுதல்
وعن أم
المؤمنين عائشة رضي الله عنها قالت: " كنت أدخل البيت الذي دُفِنَ فيه رسول
الله صلى الله عليه وسلم وأبي رضي الله عنه واضعةً ثوبي , وأقول: ( إنما هو زوجي
وأبي ) , فلما دُفن عمر رضي الله عنه , والله ما دخلته إلا مشدودة عليَّ ثيابي ,
حياءً من عمر رضي الله عنه. (صححه الحاكم على شرط الشيخين ).
அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களும், எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட
அறையினுள் நான் எனது மேல் துணி இல்லாது செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர்கள்
இருவரில் ஒருவர் எனது கணவர், இன்னொருவர் எனது தந்தை என்ற
அடிப்படையில் நான் அப்படி நடந்து கொண்டேன். ஆனால், உமர்
(ரலி) அவர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பின்பு எனக்கேற்பட்ட வெட்க உணர்வின்
காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் ஒரு போதும் நுழைந்ததில்லை.”(முஸ்தத்ரக்
ஹாகிம் )
அழகிற்காக அலங்காரத்திற்காக ஆடை அணிவது தவறல்ல. அழகாக இருக்க வேண்டும்
என்பதைத் தான் இறைவனும் எதிர் பார்க்கிறான்.
ஆடையில்லா
மனிதன் அரை மனிதன்' என்பது பழமொழி.மனிதனின் அந்தஸ்த்தை
ஆடையை வைத்தே உலகம் மதிப்பிடுகிறது. ஒருவனிடம் கல்வியும், செல்வமும்
ஏராளமாக இருந்தாலும், அவனது ஆடை தரம் குறைந்ததாக இருந்தால்
உலக மக்களால் சாதாரணமாகவே கருதப் படுகிறான்.எனவே ஆடையை அழகாக உடுத்துவதை இஸ்லாம்
வரவேற்கிறது,விரும்புகிறது.
عن جابر بن
عبدالله رضي الله عنه قال: أتانا رسول الله صلى الله عليه وسلم، فرأى رجلًا شَعثًا
قد تفرَّق شَعرُه، فقال: ((أما كان يجد هذا ما يسكِّن به شعره))، ورأى رجلًا آخر،
وعليه ثياب وسخةٌ، فقال: ((أما كان هذا يجد ماءً يغسل به ثوبه
நபி (ஸல்)
அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ”
இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?”
என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத் (3540)
،
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ
«لَا يَدْخُلُ
الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ» قَالَ رَجُلٌ:
إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً،
قَالَ: «إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ،
وَغَمْطُ النَّاسِ»
நபி (ஸல்)
அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில்
நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது
ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என
ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று
கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்
அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான்.
தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக்
கேவலமாக கருதுவதும் தான்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின்
நிஃமத்தை வெளிப்படுத்த வேண்டும்.
قال النبي ﷺ
للرجل الذي رأى عليه ثيابًا في غاية الابتذال، ألك مال؟ قال: نعم، قال: من أي
المال؟ قال: قد آتاني الله من الإبل، والغنم، والخيل، والرقيق، قال: فإذا آتاك
الله مالا فليُرَ أثرُ نعمة الله عليك، وكرامته
மட்டமான ஆடை
அணிந்திருந்த
ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'உன்னிடம் செல்வம் உண்டா?' என்று
கேட்டார்கள். நான் 'ஆம்' என்றார்.
'என்னென்ன செல்வம் உள்ளது?' என்று அவர்கள் கேட்டார்கள். 'ஒட்டகம்,
ஆடு, குதிரை, அடிமை
இவைகளெல்லாமுண்டு என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் உனக்கு
வசதியைத்தரும் போது' உனக்கு அவன் அளித்துள்ள அருட்கொடையும்,
மதிப்பும் உன்மீது தென்பட வேண்டும்' எனக்கூறினார்கள்.
(அபூதாவூது)
மாலிக் ரஹ் அவர்களின் ஆடை
وكان الإمام
مالك يعتني بلباسه عنايةً تامةً، ويَرى بذلك إعظامَ العلم ورفعةَ العالم،
ويقول إن
مروءة العالم أن يختار الثوبَ الحسنَ يرتديه ويظهر به، وأنه ينبغي ألا تراه العيون
إلا بكامل اللباس حتى العمامة الجيدة،
وقد كان يلبس أجود
اللباس وأغلاه وأجمله،
قال الزبيري:
كان مالك يلبس الثياب العدنية الجياد، والخراسانية والمصرية المرتفعة البِيض،
ويتطيب بطيب
جيد ويقول: «ما أُحب لأحد أنعم الله عليه إلا أن يُرى أثرُ نعمته عليه
இமாம் மாலிக் ரஹ் அவர்கள் பல நாட்டிலிருந்து மிக உயர் தரமான ஆடைகளை
வாங்கி உடுத்துவார்கள். மிகவும் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தை பூசுவார்கள்.
காரணம் கேட்ட போது அல்லாஹ் ஒருவருக்கு நிஃமத்தை செய்திருந்தால் அது அவரிடத்தில்
வெளிப்பட வேண்டும் என்று கூறுவார்கள்.
கடந்த கால குறிப்புகள்
2022 ஸுஜூது
2023 அஃராஃப் வாசிகள்
வாஹிதிகள் பேரவை பெருமை
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமை ஹஜ்ரத்
👍
ReplyDeleteMashallah and jazakallah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete