وَمَا مِنْ
دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ
اَمْثَالُـكُمْ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ ثُمَّ اِلٰى
رَبِّهِمْ يُحْشَرُوْنَ
பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன் : 6:38)
இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா பூமியில் இருக்கின்ற அனைத்து
உயிரினங்களும் நம்மைப் போன்ற ஒரு சமூகம் என்று குறிப்பிடுகின்றான்.
إِلَّا أُمَمٌ
أَمْثالُكُمْ) أَيْ هُمْ جَمَاعَاتٌ مِثْلُكُمْ فِي أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ
خَلَقَهُمْ، وَتَكَفَّلَ بأرزاقهم، وعدل عليهم، فلا ينبغي أَنْ تَظْلِمُوهُمْ،
وَلَا تُجَاوِزُوا فِيهِمْ مَا أُمِرْتُمْ بِهِ
1. நம்மைப் போன்ற
சமூகம் என்பதற்கு இமாம்கள் கூறும் முதல் விளக்கம் : நமக்கு ரிஸ்க் அளிப்பதைப் போன்றே அல்லாஹ் உலகில் இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும்
உணவளிக்கின்றான்.
رُوِيَ أنَّ
مُوسى عَلَيْهِ السَّلامُ عِنْدَ نُزُولِ الوَحْيِ إلَيْهِ تَعَلَّقَ قَلْبُهُ
بِأحْوالِ أهْلِهِ، فَأمَرَهُ اللَّهُ تَعالى أنْ يَضْرِبَ بِعَصاهُ عَلى صَخْرَةٍ
فانْشَقَّتْ وخَرَجَتْ صَخْرَةٌ ثانِيَةٌ، ثُمَّ ضَرَبَ بِعَصاهُ عَلَيْها
فانْشَقَّتْ وخَرَجَتْ صَخْرَةٌ ثالِثَةٌ، ثُمَّ ضَرَبَها بِعَصاهُ فانْشَقَّتْ
فَخَرَجَتْ مِنها دُودَةٌ كالذَّرَّةِ وفي فَمِها شَيْءٌ يَجْرِي مَجْرى الغِذاءِ
لَها، ورُفِعَ الحِجابُ عَنْ سَمْعِ مُوسى عَلَيْهِ السَّلامُ، فَسَمِعَ
الدُّودَةَ تَقُولُ: سُبْحانَ مَن يَرانِي، ويَسْمَعُ كَلامِي، ويَعْرِفُ مَكانِي،
ويَذْكُرُنِي ولا يَنْسانِي
ஒரு நாள் மூஸா
நபியவர்களுக்கு தன்னுடைய குடும்பத்தாரின் வாழ்வாதாரம் குறித்த எண்ணமும் கவலையும்
ஏற்பட்டது. அப்போது அவர்களுடைய அந்த கவலையை போக்குவதற்கும், உலகத்தில் இருக்கிற
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்க கூடியவனாக நான் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு
உணர்த்துவதற்கும் ஒரு நிகழ்வை அல்லாஹுத்தஆலா ஏற்பாடு செய்தான். ஒரு பாறையின் மீது
தடியை வைத்து அடிக்குமாறு மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். அவர்கள் அடித்ததும்
அந்த பாறை இரண்டாக பிளந்தது. அதிலிருந்து இன்னொரு பாறை ஒன்று வெளிப்பட்டது. தடியைக்
கொண்டு அதையும் அடித்தார்கள். அதிலிருந்து மூன்றாவது ஒரு பாறை வெளிப்பட்டது. தடியைக்
கொண்டு அதையும் அடித்தார்கள். அது பிளந்ததும் அதிலிருந்து புழு ஒன்று வெளியே
வந்தது. அதனுடைய வாயிலே ஒரு பொருளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது
அந்த புழு பேசிய வார்த்தையை மூஸா நபி அவர்கள் செவிமடுத்தார்கள். அந்த புழு சொன்னது
; என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிற
நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிற என் இருப்பிடத்தை அறிந்திருக்கிற என்னை
மறக்காமல் என்னை நினைவில் வைத்து எனக்கு உணவளித்துக் கொண்டிருக்கிற என்னுடைய
இறைவனை நான் பரிசுத்தப்படுத்துகிறேன் என்று கூறியது. (தஃப்ஸீர் ராஸீ)
قال سليمان عليه السلام لنملة: كم رزقك في كل سنة؟ قالت: حبة حنطة. فحبسها
في قارورة وجعل عندها حبة حنطة فلما مضت السنة فتح القارورة فوجدها قد أكلت نصف
الحبة فسألها عن ذلك فقالت: كان اتكالي على الله قبل الحبس، وبعده كان عليك فخشيت
أن تنساني فادخرت النصف إلى العام الآتي. فسأل ربه أن يضيف جميع الحيوانات يوما
واحدا فجمع طعاما كثيرا فأرسل الله تعالى حوتا فأكله أكلة واحدة، ثم قال: يا نبي
الله؛ إني جائع. فقال: رزقك كل يوم أكثر من هذا؟ قال: بأضعاف كثيرة. وفي حادي
القلوب الطاهرة قال: إني آكل كل يوم سبعين ألف سمكة
ஸுலைமான் நபி அலை அவர்கள் ஒரு எறும்பிடம் ஒரு வருடத்திற்கான உன்னுடைய
உணவு என்ன? என்று கேட்டார்கள். ஒரே ஒரு கோதுமை என்று சொன்னது.
ஸுலைமான் நபி அவர்கள் ஒரு பாட்டிலில் ஒரு கோதுமையை வைத்து அந்த எறும்பை உள்ளே அடைத்து
வைத்தார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அதில் பாதியை மட்டுமே சாப்பிட்டிருந்தது.
காரணம் கேட்ட போது நான் எப்போதும் என்னைப் படைத்த இறைவனை நம்பியிருப்பேன். அவன்
எனக்கு உணவளிக்க பொறுப்பெடுத்துக் கொண்டவன். அவன் என்னை மறக்க மாட்டான். என்னை
பசியிலும் விட மாட்டான்.இப்போது எனக்கு உணவளிக்க நீங்கள் பொறுப் பெடுத்திருக்கிறீர்கள்.என்னை
நீங்கள் மறந்து விட்டால் என்ன செய்வது? எனவே தான் பாதியை
சாப்பிட்டு பாதியை சேமித்து வைத்திருக்கின்றேன் என்று கூறியது.
ஒரு நாள் சுலைமான் நபி அலை அவர்கள் இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து ஜீவராசிகளுக்கும்
நான் உணவளிக்கிறேன் என்று சொன்னார்கள் அல்லாஹ்வும் சரி என்று சொல்ல, நிறைய உணவு
தானியங்களை சேமித்து வைத்திருந்தார்கள். அல்லாஹுத்தஆலா கடலில் வாழக்கூடிய ஒரே ஒரு
மீனை மட்டும் அனுப்பி நீங்கள் சேமித்து வைத்த உணவிலிருந்து இந்த மீனுக்கு உணவளியுங்கள்
என்று சொன்னான். அவர்கள் கொடுத்தார்கள் அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து
உணவையும் ஒரே தடவையில் அது விழுங்கி விட்டு எனக்கு பசிக்கிறது என்று அந்த மீன் சொன்னது.
அதைப் பார்த்த சுலைமான் நபி அலை அவர்கள் ஆச்சரியப்பட்டு இதை விட உன்னுடைய உணவு
அதிகமா என்று கேட்டார்கள். ஆம் இதை விட பல மடங்கு அதிகமாக அல்லாஹ் எனக்கு
உணவளிக்கிறான். ஒவ்வொரு நாளும் 70000 மீன்களை நான் சாப்பிடுவேன் என்று சொன்னது. (நுஜ்ஹதுல் மஜாலிஸ்)
2. நம்மைப் போன்றே
அவைகளும் அல்லாஹ்வை தொழுது துதிக்கின்றன.
وَقِيلَ: هِيَ
أَمْثَالٌ لَنَا فِي التَّسْبِيحِ وَالدَّلَالَةِ، وَالْمَعْنَى: وَمَا مِنْ
دَابَّةٍ وَلَا طَائِرٍ إِلَّا وَهُوَ يُسَبِّحُ اللَّهَ تَعَالَى
أَلَمْ تَرَ
أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ
صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ
صَلَاتَهُ
وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
வானங்கள்
மற்றும் பூமியிலுள்ளவைகளும் இறக்கைகளை விரித்த நிலையில் {பறக்கின்ற}
பறவைகளும் நிச்சயமாக அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன என்பதை {நபியே!}
நீங்கள் பார்க்க வில்லையா ?
ஒவ்வொன்றும் அதன் தொழுகையையும் தஸ்பீஹையும் அறிந்திருக்
கின்றன.அல்லாஹ் அவர்கள் செய்கின்றவன்றை நன்கு அறிந்தவன். {24
;41}
أولم يروا إلى
ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون )
அல்லாஹ் படைத்த
எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு சுஜுது செய்வதற் காக{த்தான்}
வலப்பக்கமும் இடப்பக்கமும் அந்தப் பொருளின் நிழல்கள் சாய்கின்றன
என்பதை நீங்கள் பார்க்க வில்லையா? {16 ; 48}
وعن ابن عباس
قال : جاء رجل فقال : يا رسول الله ، إني رأيتني الليلة وأنا نائم ، كأني أصلي خلف
شجرة ، فسجدت فسجدت الشجرة لسجودي ، فسمعتها وهي تقول : اللهم اكتب لي بها عندك
أجرا ، وضع عني بها وزرا ، واجعلها لي عندك ذخرا ، وتقبلها مني كما تقبلتها من
عبدك داود . قال ابن عباس : فقرأ النبي صلى الله عليه وسلم سجدة ثم سجد ، فسمعته
وهو يقول مثل ما أخبره الرجل عن قول الشجرة
ஒரு மனிதர் நபி
ஸல் அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் நான் ஒரு கனவு கண்டேன்.அதில் ஒரு மரத்தின்
பின்னால் நான் தொழுதேன்.நான் ஸஜ்தா செய்தேன்.நான் ஸஜ்தா செய்வதைப் பார்த்து அந்த
மரமும் ஸஜ்தா செய்தது.அப்போது அந்த மரம் சொன்னது, இறைவா
நான் செய்த ஸஜ்தாவிற்கு பகரமாக உன்னிடம் எனக்கு கூலியை பதிவு செய்.என்னிலிருந்து
ஒரு குற்றத்தை அழித்து விடு.உனது அடியார் தாவூது நபியிடமிருந்து நீ ஏற்றுக்
கொண்டதைப் போன்று என்னிடமிருந்தும் நீ ஏற்றுக் கொள் என்று அந்த மரம் சொன்னதாக அந்த
மனிதர் கூறினார். நபி ஸல் அவர்கள் ஒரு ஸஜ்தாவின் வசனத்தை ஓதி ஸஜ்தா
செய்தார்கள்.அப்போது அந்த மரம் எந்த வார்த்தை சொன்னதோ அதே வார்த்தையை நபி ஸல்
அவர்கள் சொல்வதை நான் கேட்டேன் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். {இப்னு
ஹிப்பான் ; 1758}
3. நம்மைப் போன்றே
அவைகளும் மறுமையில் எழுப்பப்படும் என்று அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
وَقَالَ أَبُو
هُرَيْرَةَ: هِيَ أَمْثَالٌ لَنَا عَلَى مَعْنَى أَنَّهُ يَحْشُرُ الْبَهَائِمَ
غَدًا وَيَقْتَصُّ لِلْجَمَّاءِ مِنَ الْقَرْنَاءِ ثُمَّ يَقُولُ اللَّهُ لَهَا:
كُونِي تُرَابًا. وَهَذَا اخْتِيَارُ الزَّجَّاجِ فَإِنَّهُ قَالَ: (إِلَّا أُمَمٌ
أَمْثالُكُمْ) فِي الْخَلْقِ وَالرِّزْقِ وَالْمَوْتِ وَالْبَعْثِ وَالِاقْتِصَاصِ
அவைகளில் ஒரு பிராணி இன்னொரு பிராணியை அநியாயமாக முட்டியிருந்தால்
காயப்படுத்தியிருந்தால் அதற்கு பழி தீர்க்கப்பட்டு பின்பு அவைகளைப் பார்த்து மண்ணாக
ஆகி விடுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்.
அவைகள் மண்ணாக ஆகி விடும்.அதைப் பார்த்த பிறகு தான் மனிதன் நானும் இதைப் போன்று
மண்ணாக ஆகி விடக்கூடாதா என்று கூறுவான்.
يَحْكُمُ الله
بين الْحَيَوَانَاتِ الَّتِي كَانَتْ فِي الدُّنْيَا، فَيَفْصِلُ بَيْنَهَا
بِحُكْمِهِ الْعَدْلِ الَّذِي لَا يَجُورُ، حَتَّى إِنَّهُ لِيَقْتَصَّ لِلشَّاةِ
الجمَّاء مِنَ الْقَرْنَاءِ. فَإِذَا فَرَغَ مِنَ الْحُكْمِ بَيْنَهَا قَالَ
لَهَا: كُونِي تُرَابًا، فتصير تُرَابًا. فَعِنْدَ ذَلِكَ يَقُولُ الْكَافِرُ:
﴿يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا﴾ أَيْ: كُنْتُ حَيَوَانًا فَأَرْجِعُ إِلَى
التُّرَابِ
ஒரு கொம்புள்ள
ஆட்டை ஒரு கொம்புள்ள ஆடு முட்டிக் குத்தியதற்காகப் பழிவாங்கப்படும். இந்தளவுக்கு
நாம் மறுமை நாளில் உரிமைகளை அதற்குரியவர்களிடம் நிச்சயமாகச் செலுத்தியே ஆகவேண்டும்.”
என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்,
திர்மிதி) மனிதனால் பிறஜீவிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதங்களையும்
அல்லாஹ் கச்சிதமாகத் தீர்த்துவிட்டு விலங்கினங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவான்.
இதனைக் காணும் நிராகரிப்பாளன் தான் அனுபவிக்கப்போகும் வேதனைகற்கு அஞ்சி தன்னையும்
இறைவன் அவ்வாறு செய்துவிடக்கூடாதா என அங்காளாய்ப்பான். “இன்னும் நிராகரித்தவனோ
‘நான் மண்ணோடு மண்ணாக ஆகியிருக்கவேண்டுமே!’ என்று கூறுவான்”(78:40)
4. மனிதர்கள்
ஒவ்வொருவரிடத்திலும் ஒரு பிராணியின் குணம் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு
பிராணியைப் போன்று இருப்பான் என்று ஸுஃப்யான் பின் உயைனா ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள்.
وَقَالَ
سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ: أَيْ مَا مِنْ صِنْفٍ مِنَ الدَّوَابِّ وَالطَّيْرِ
إِلَّا فِي النَّاسِ شِبْهٌ مِنْهُ، فَمِنْهُمْ مَنْ يَعْدُو كَالْأَسَدِ،
وَمِنْهُمْ مَنْ يَشْرَهُ كَالْخِنْزِيرِ، وَمِنْهُمْ مَنْ يَعْوِي كَالْكَلْبِ،
وَمِنْهُمْ مِنْ يَزْهُو كَالطَّاوُسِ، فَهَذَا مَعْنَى الْمُمَاثَلَةِ
நம்மைப் போன்றே அனைத்து
ஜீவராசிகளும் படைத்தவனை விளங்கியிருக்கிறது.
وعَنْ أبِي
الدَّرْداءِ أنَّهُ قالَ: أُبْهِمَتْ عُقُولُ البَهائِمِ عَنْ كُلِّ شَيْءٍ إلّا
عَنْ أرْبَعَةِ أشْياءَ: مَعْرِفَةِ الإلَهِ، وطَلَبِ الرِّزْقِ، ومَعْرِفَةِ
الذَّكَرِ والأُنْثى، وتَهَيُّؤِ كُلِّ واحِدٍ مِنهُما لِصاحِبِهِ.
அபுத்தர்தா ரலி
அவர்கள் கூறுகிறார்கள் ; பிராணிகளுடைய அறிவு
நான்கு விஷயங்களைத் தவிர்த்து மற்ற விஷயங்களில் குழப்பமடைந்து இருக்கும். அதாவது
இந்த நான்கு விஷயங்களும் அனைத்து பிராணிகளும் தெளிவாக இருக்கும். 1.இறைவனை
அறிதல்.2.உணவைத் தேடுதல்.3.ஆண் எது பெண் எது என்று பிரித்து அறிதல்.4.தன் துணையை
நாடுதல்.
எனவே எல்லா
வகையிலும் மற்ற மிருகங்கள் பறவைகள் அனைத்து ஜீவராசிகளும் நம்மைப் போன்றே
இருக்கின்றன. மனிதர்களை மதிப்பதைப் போன்று அவைகளையும் மதிக்க வேண்டும். அவைகளின்
உணர்வுகளையும் புரிந்து நடக்க வேண்டும். அநியாயமாக அவைகளை துன்புறுத்துவதோ வேதனைப்
படுத்துவதோ அநாவசியாக அவைகளை கொள்வதோ கூடாது.
அவசியமின்றி ஒரு பிராணியைக் கொன்றால் அதற்கும் அல்லாஹ்விடம் கேள்வி
கணக்கு உண்டு.
مَن قتَلَ
عُصفورًا عَبَثًا عَجَّ إلى اللهِ يقولُ: يا ربِّ، إنَّ فُلانًا قَتَلني عَبثًا،
ولم يَقتُلْني لِمَنفعةٍ.
தேவையின்றி ஒரு சிட்டுக்குருவியை ஒருவன் கொன்றால் மறுமையில் அந்த
சிட்டுக்குருவி இவன் என்னை தேவையின்றி கொன்றான். எந்த பயனுமின்றி என்னை கொன்று
விட்டான் என்று இறைவனிடம் கூறும். (நஸயி ;
4446)
கடந்த கால குறிப்புகள்
2022 நன்மைகள் யாருக்காக
2023 வேண்டாம் அவர்களின் தொடர்பு
2024 நமது முதல் கவனம்
வாஹிதிகள் பேரவை அழியும் உலகம்
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமை ஹஜ்ரத்
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete