Tuesday, March 4, 2025

தராவீஹ் 5 - உன் சகோதரனைக் கேவலப்படுத்தாதே!

لَا يُحِبُّ اللّٰهُ الْجَــهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ‌ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا‏

அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான். (அல்குர்ஆன் : 4:148)

உலகில் ஈமான் கொண்டவனின் கண்ணியம் எல்லாவற்றை விட மேலானது. ஒரு முஃமினின் கண்ணியத்தை அல்லாஹ் உயர்த்தி விட்டான். ஒரு முஃமினின் கண்ணியத்தை மரியாதையை ஒருவன் கெடுக்க நினைத்தால் அவனை அல்லாஹ் கேவலப்படுத்தாமல் விடுவதில்லை.

صعِد رسولُ اللهِ صلّى اللهُ عليه وسلَّم المنبرَ فنادى بصوتٍ رفيعٍ فقال يا معشرَ من أسلم بلسانِه ولم يدخُلِ الإيمانَ قلبَه لا تُؤذوا المسلمين ولا تتَّبِعوا عوراتِهم فإنَّه من تتبَّع عورةَ أخيه المسلمِ تتبَّع اللهُ عورتَه ومن تتبَّع اللهُ عورتَه يفضَحْه ولو في جوفِ رحلِه ونظر ابنُ عمرَ إلى الكعبةِ فقال ما أعظَمَك وما أعظمَ حُرمتِك والمؤمنُ أعظمُ حُرمةً عند اللهِ منك

ஒரு நாள் பெருமானார் ஸல் அவர்கள் மிம்பரில் ஏறி உரத்த குரலில் நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவி ஆராய்ந்து அவனது கௌரவத்தை அழித்து விடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்த போதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான் என்று கூறினார்கள். அந்த நேரத்தில் இப்னு உமர் ரலி அவர்கள் கஃபாவைப் பார்த்து நீ எவ்ளோ கண்ணியமாக இருக்கிறாய். என்றாலும் அல்லாஹ்விடம் உன்னுடைய கண்ணியத்தை விட ஒரு முஃமினின் கண்ணியம் மேலானது என்று கூறினார்கள். (திர்மிதி 2032)

ஒரு முஃமினின் கண்ணியத்தை கெடுக்கும் எந்த காரியத்தையும் இஸ்லாம் அனுமதிக்க வில்லை. ஒரு முஃமின் தவறு செய்தால் அதை மறைத்து அவனுடைய கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ»

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி: 2442)

இன்று ஓதப்பட்ட வசனத்தில் அல்லாஹ் அதையே குறிப்பிடுகின்றான். ஒரு முஃமினின் குறையை பொதுவெளியில் வெளிச்சம் போட்டு காட்டுவதை நான் விரும்புவதில்லை என்று கூறுகின்றான்.

ஆனால் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதே போன்று வேறு எவரும் அநீதி இழைக்கப்படக்கூடாது, அவனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அநீதம் செய்தவனை பற்றி வெளியில் சொல்வதோ அவனுடைய குறைகளை வெளிப்படுத்துவதோ இந்த வசனத்தின் படி தவறல்ல.

عَنْ مُجَاهِدٍ فِي قَوْلِهِ: ﴿لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلا مَنْ ظُلِمَ﴾ قَالَ: ضَافَ رَجُلٌ رَجُلًا فَلَمْ يُؤَدِّ إِلَيْهِ حَقَّ ضِيَافَتِهِ، فَلَمَّا خَرَجَ أَخْبَرَ النَّاسَ، فَقَالَ: "ضِفْتُ فُلَانًا فَلَمْ يُؤَدِّ إِلَيَّ حَقَّ ضِيَافَتِي". فَذَلِكَ الْجَهْرُ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مِنْ ظُلِمَ، حِينَ لَمْ يُؤَدِّ الْآخَرُ إِلَيْهِ حَقَّ ضِيَافَتِهِ.

முஜாஹித் ரஹ் அவர்கள் இந்த வசனத்தின் படி அநீதம் இழைக்கப்பட்டவன் என்பதற்கு உதாரணம் கூறுகிறார்கள் ; ஒருவர் இன்னொருவரின் வீட்டிற்கு சென்றார்.ஆனால் அந்த வீட்டுக்காரர் விருந்தாளியாக வந்த இவரை கண்ணியப்படுத்த வில்லை, உபசரிக்கவில்லை என்றால், நான் அவர் வீட்டுக்கு சென்றேன். அவர் என்னை கண்ணியப்படுத்த வில்லை, என்னை உபசரிக்க வில்லை என்று அவரைப் பற்றி சொல்வது கூடும். ஏனென்றால் வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிப்பது கடமை என்று மார்க்கம் சொல்கிறது. அந்த கடமையை விட்ட அவர் குற்றவாளியாக ஆகிறார். அநீதம் இழைத்தவராக ஆகிறார். எனவே அதை வெளிப்படுத்துவது தவறல்ல என்று இந்த வசனத்திற்கு அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.

وَمِنْ هَذِهِ الْأَحَادِيثِ وَأَمْثَالِهَا ذَهَبَ أَحْمَدُ وَغَيْرُهُ إِلَى وُجُوبِ الضِّيَافَةِ

இந்த வசனத்திலிருந்து விருந்தாளியை உபசரிப்பது மார்க்கத்தில் கடமை என்று இமாம்கள் கூறுகிறார்கள்,

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَبْعَثُنَا(٧) فَنَنْزِلُ بِقَوْمٍ فَلَا يَقْرُونا، فَمَا تَرَى فِي ذَلِكَ؟ قَالَ: "إِذَا نَزَلْتُمْ بِقَوْمٍ فأمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ، فَاقْبَلُوا مِنْهُمْ، وَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ"

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள் ;

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு பதில் தந்தார்கள். (புகாரி: 2461)

விருந்தாளியை உபசரிப்பது கடமை என்பதைதான் இந்த ஹதீஸும் உணர்த்துகிறது.

எனவே அநீதம் இழைத்தவனைப் பற்றி அவனுடைய குறைகளை வெளிப்படுத்துவது குற்றமல்ல.

 

அநீதம் செய்தவனை பற்றி அவனுடைய குறைகளை வெளியே சொல்லுகின்ற பொழுது வேறு எவரும் அவரைக் கொண்டு அநீதம் செய்யப்பட மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர் அந்த அநீதம் செய்வதிலிருந்து தன்னை தடுத்துக் கொள்வார் என்பதும் இருக்கிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ؛ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ: إِنْ لِي جَارًا يُؤْذِينِي، فَقَالَ لَهُ: "أَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى الطَّرِيقِ". فَأَخَذَ الرَّجُلُ مَتَاعَهُ فَطَرَحَهُ عَلَى الطَّرِيقِ، فَجَعَلَ كُلُّ مَنْ مَرَّ بِهِ قَالَ: مَالَكَ؟ قَالَ: جَارِي يُؤْذِينِي. فَيَقُولُ: اللَّهُمَّ الْعَنْهُ، اللَّهُمَّ أَخْزِهِ! قَالَ: فَقَالَ الرَّجُلُ: ارْجِعْ إِلَى مَنْزِلِكَ، وَقَالَ(١٢) لَا أُوذِيكَ أَبَدًا".

நபியவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு தொந்தரவு தருகிறார் என்று முறையிட்டார். அப்போது நபி ஸல் அவர்கள் உன் வீட்டில் உள்ள பொருட்களை மக்கள் நடமாடக்கூடிய பாதையில் போட்டு விடு என்று சொன்னார்கள். அவர் வீட்டிலுள்ள பொருட்களை பாதையில் கொண்டு வந்து போட்டார். அவ்வழியாக கடந்து செல்லக்கூடிய ஒவ்வொருவரும் என்ன ஆனது என்று விசாரித்தார்கள். அப்போது அவர் என் பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தொந்தரவு செய்கிறான் என்று சொன்னார். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும் அல்லாஹ் அவரை சபிப்பானாக அல்லாஹ் அவரை இழிவுபடுத்துவானாக என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் ஓடோடி வந்து நீ உன் வீட்டுக்கு செல். இனிமேல் நான் உனக்கு தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொன்னார். (முஸ்தத்ரக் ஹாகிம் ; 7508(

 

பாவம் செய்தவனின் பாவத்தை வெளிப்படுத்தலாமா?

يفرّق أهل العلم بين العاصي المستتر والعاصي المجاهر، أما العاصي المستتر بذنبه فإنه مع وجوب معاقبته؛ فإنه لا يفضح ويشهر به، بل يستر عليه ويسعى في توبته وإصلاحه, وأما العاصي المجاهر بالمعصية أو الذي ينشر الفساد بين الناس، فليس من المصلحة الستر عليه وقد فضح نفسه، بل المصلحة في التحذير منه علنًا، ولا يعدّ هذا من الغيبة المحرمة؛ لأنه من باب التحذير من المجاهر، كما قال الحسن البصري: أترغبون عن ذكر الفاجر؟ اذكروا بما فيه يحذره الناس.

மார்க்க அறிஞர்கள் இதை இரண்டு வகையாக பிரிப்பார்கள். ஒருவன் மறைவாக ஒரு தவறை செய்கிறான். அதன் மூலம் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் அவருடைய அந்த குற்றத்தை வெளிப்படுத்தக் கூடாது. அது அவருடைய கண்ணியத்தை கெடுத்து விடும். மறைவாக செய்யக்கூடியவர் தவ்பா செய்து திருந்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை வெளிப்படுத்தக்கூடாது. ஆனால் ஒரு குற்றத்தை பகிரங்கமாக ஒருவர் செய்கிறார். பொதுமக்களும் அதைக் கொண்டு பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவருடைய குற்றத்தை மறைப்பதில் எந்த நன்மையும் இல்லை. அதை கட்டாயமாக வெளிப்படுத்தி ஆக வேண்டும். அப்போது தான் பிற மக்கள் அவரால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். அவ்வாறு சொல்வது புறம் பேசுவதாக ஆகாது.

ஒரு பாவியை பற்றி சொல்வதற்கு நீங்கள் யோசிக்கிறீர்களா? அவனைப் பற்றி நீங்கள் மக்களுக்கு சொல்லுங்கள். அப்போது தான் அவன் விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுவார்கள்.

 

குற்றம் செய்தவரிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

1/ البغض: فيبغض بقدر المعصية، مع بقاء حبّه بقدر إيمانه، فيجتمع فيه الحب والبغض بقدر الإيمان والمعصية.

2/العقوبة المناسبة: من حدّ أو تعزير بما يقرره ولي الأمر.

3/الستر: كما في الصحيحين عن ابن عمر -رضي الله عنهما- عن النبي -صلى الله عليه وسلم- قال: "من ستر مسلمًا ستره الله يوم القيامة" طيب، من يفضح المسلم، ما جزاؤه؟ هل يسرّك أن يفضحك الله يوم القيامة؟.

4/ عدم الشماتة والتشفي من المذنب، وهذا الأمر خطير جدًّا، فقد جاء عند الترمذي وحسنه بعض أهل العلم عن واثلة بن الأسقع أن النبي -صلى الله عليه وسلم- قال: "لا تظهر الشماتة لأخيك فيرحمه الله ويبتليك".

إن الشماتة دين متى ما أقرضته عاد إليك، وقد روي عن الحسن البصري أنه أصابته فاقة فقال: والله إني أعلم سببها, قلت قبل أربعين سنة لرجل: يا مفلس.

5/ الرفق والنصح: وهذا قد يستغربه بعض الناس، ألم نسمع قول النبي -صلى الله عليه وسلم- لأصحابه عندما لعنوا الرجل الذي يُؤتى به إلى مرارًا وقد شرب الخمر، فقال صلى الله عليه وسلم: "لا تكونوا عون الشيطان على أخيكم" رواه البخاري.

1.       அவர் செய்த குற்றத்தின் அளவுக்கு நாம் அவர் விஷயத்தில் வெறுப்பைக் காட்ட வேண்டும். அதே சமயத்தில் அவரை மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விடவும் கூடாது. ஏனென்றால் அவரிடத்தில் ஈமான் இருக்கிறது.

2.       தண்டனைக்குரிய குற்றம் என்றால் அதற்குத் தகுந்த தண்டனைகளை வழங்குவது.

3.       அவருடைய கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முடிந்த வரை அவருடைய குற்றத்தை வெளிப்படுத்தாமல் மறைத்து விடுவது.

4.       நான் அந்த தவறைச் செய்ய வில்லை.எனவே நான் தப்பித்தேன். அவர் மாட்டிக் கொண்டார் என அதைப் பார்த்து மகிழ்ச்சி அடையக்கூடாது. ஏனென்றால்

لا تظهر الشماتة لأخيك فيرحمه الله ويبتليك

(தவறு செய்த) உன்னுடைய சகோதரன் விஷயத்தில் நீ மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே அல்லாஹ் அவருக்கு கிருபை காட்டி விட்டு உன்னை சோதித்து விடுவான் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

5.       அவரிடத்தில் கடுமையாக நடந்து கொள்ளாமல் மிருதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வது

 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَكْرَانَ، فَأَمَرَ بِضَرْبِهِ. فَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِيَدِهِ وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِنَعْلِهِ وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ رَجُلٌ: مَا لَهُ أَخْزَاهُ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَكُونُوا عَوْنَ الشَّيْطَانِ عَلَى أَخِيكُمْ

போதையிலிருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பிய போது ஒருவர் (அவரைப் பார்த்து), ‘அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்’ என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள்’ என்றார்கள்.(புகாரி: 6781)

وروى ابن أبي حاتم وأبو نعيم أن رجلاً من أهل الشام كان يفد إلى عمر بن الخطاب ففقده عمر، فقال: ما فعل فلان؟ فقالوا: يا أمير المؤمنين تتابع في هذا الشراب -يعني الخمر- فدعا عمر كاتبه، فقال: اكتب: من عمر بن الخطاب إلى فلان بن فلان، سلام عليك، أما بعد: فإني أحمد الله الذي لا إله إلا هو (غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ) [غافر:3].

ثم قال لأصحابه: ادعوا الله لأخيكم أن يُقبِل بقلبه ويتوب عليه.

فلما بلغ الرجل كتاب عمر، جعل يقرأه ويردده، ويقول: (غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ) [غافر:3] قد حذرني عقوبته ووعدني أن يغفر لي

فلم يزل يرددها على نفسه ثم بكى، ثم نزع فأحسن النزع -أي التوبة- فلما بلغ عمر خبره قال: هكذا فاصنعوا، إذا رأيتم أخاكم زلّ زلة فسدّدوه ووفقوه، وادعوا الله أن يتوب عليه، ولا تكونوا أعوانا للشيطان عليه.

சிரியாவைச் சார்ந்த ஒரு மனிதர் உமர் ரலி அவர்களிடத்தில் வந்து செல்வார். சிறிது காலமாக அவரை காண வில்லை. அவருக்கு என்ன ஆனது எங்கே போனார் என்று விசாரித்தார்கள். அப்போது அவர் போதையில் மூழ்கி விட்டார். மதுவிற்கு அடிமையாகி விட்டார் என்று மக்கள் சொன்னார்கள். அப்போது உமர் ரலி அவர்கள் கடிதம் எழுதக்கூடியவரை அழைத்து, நான் சொல்வதைப் போன்று எழுது என்று சொன்னார்கள். இன்ன மனிதருக்கு உமர் எழுதுகிறேன். உன் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். என்று எழுதி விட்டு பின்வரும் வசனத்தை எழுத சொன்னார்கள்.

غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ اِلَيْهِ الْمَصِيْرُ‏

அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனிடமே (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் : 40:3)

பின்பு தன் தோழர்களைப் பார்த்து உங்களுடைய அந்த சகோதரருக்காக அவர் திருந்த வேண்டும், அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள் என்று சொன்னார்கள். அந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதர் அந்த வசனத்தை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தார். இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னுடைய தண்டனை கடுமையானது என்றும் எச்சரிக்கிறான். அதே நேரத்தில் மன்னிப்பதாகவும் வாக்களிக்கிறான். அதை திரும்பத் திரும்ப படித்த அவர் மனம் திருந்தி அழுது தவ்பா செய்தார். அவரைப் பற்றிய செய்தி உமர் ரலி அவர்களுக்கு கிடைத்த போது தன் தோழர்களைப் பார்த்து சொன்னார்கள் ;  நீங்கள் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சகோதரர் ஒருவர் நிலை தடுமாறி தவறு செய்து விட்டால் அவரிடத்தில் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். அவரை திருத்த முற்படுங்கள். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள். அவரை திட்டுவதன் மூலம் ஷைத்தானுக்கு உதவியாளர்களாக ஆகி விடாதீர்கள் என்று கூறினார்கள்.

கடந்த கால  பதிவுகள்

2022 பெருமை வேண்டாம்

2023 கல் நெஞ்சும் கறையும்

2024 கண்டும் காணாத கூட்டம்

வாஹிதிகள் பேரவை உதவி செய்

No comments:

Post a Comment