Monday, March 3, 2025

தராவீஹ் 4 - அல்குர்ஆனின் நான்காவது அத்தியாயம்

குர்ஆனின் நான்காவது அத்தியாயமான நிஸா சூரா இன்று தொடங்கி அதன் வசனங்கள் ஓதப்பட்டது. குர்ஆனில் உள்ள முக்கியமான சூராக்களில் இதுவும் ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சூரா இது.ஏனெனில் இந்த அத்தியாயத்தில் குடும்ப அமைப்பு, கணவன் மனைவி உறவு சீராக இருப்பதற்கான அறிவுரைகள், உறவை சேர்ந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வசனங்கள், வாரிசுரிமை சட்டங்களை விரிவாக பேசும் வசனங்கள், இஸ்லாத்தின் அடிப்படைக் கூறுகளை கூறும் வசனங்கள், ஜகாத்தை குறித்த வசனங்கள், பிறருடைய உரிமைகளையும் கடமைகளையும் உணர்வுகளையும் பேண வேண்டும் என்பதை உணர்த்தும் வசனங்கள்.இவ்வாறு சமூக மக்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளை இந்த அத்தியாயம் சுமந்திருக்கின்றது.

குறிப்பாக பெண் சமூகம் படிக்க வேண்டிய சூரா இது. ஏனெனில் பெண்கள் சம்பந்தப்பட்ட நிறைய வசனங்கள் இதில் இருக்கின்றது. பெண்களுக்கு தேவையான சட்டங்கள் இதில் இருக்கின்றது. பெண்களின் உரிமைகளை அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இந்த அத்தியாயம் பேசுகின்றது.

பெண்களுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதை அழுத்தமாக பேசும் வசனங்கள் இதில் உண்டு.


عن جابر قَالَ: جَاءَتِ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبيع إِلَى رسول الله صلى الله عليه وسلم فقالت: يَا رَسُولَ اللَّهِ، هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ، قُتل أَبُوهُمَا مَعَكَ فِي أحُد شَهِيدًا، وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا، فَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا يُنْكَحَان إِلَّا وَلَهُمَا مَالٌ. قَالَ: فَقَالَ: "يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ". قَالَ: فَنَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ، فَأَرْسَلَ رسولُ اللَّهِ 
 إِلَى عَمِّهِمَا فَقَالَ: "أعْطِ ابْنَتي سَعْدٍ الثُّلُثَيْنِ، وأُمُّهُمَا الثُّمُنَ، وَمَا بَقِيَ فَهُوَ لَكَ".فَهَذا أوَّلُ مِيراثٍ قُسِمَ في الإسْلامِ  (ابن كثير)

ஸஅத் பின் ரபீவு ரலி அவர்களின் மனைவி நபி ﷺ அவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே என்னுடைய கணவர் உஹது போர்க்களத்தில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். அவரின் மூலமாக எனக்கு பிறந்த இரண்டு பெண் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய சகோதரர் அவர் விட்டுச் சென்ற அனைத்து செல்வத்தையும் எடுத்துக் கொண்டார். என் பிள்ளைகளுக்காக எதையும் அவர் விட்டு வைக்க வில்லை. பொருளாதாரம் இல்லாமல் அவர்களை திருமணம் செய்து வைக்க முடியாது என்று முறையிட்டார்கள். அப்போது நபி  அவர்கள் இந்த விஷயத்தில் அல்லாஹ் சரியான தீர்வை சொல்வான் என்று சொன்னார்கள். அந்நேரத்தில் தான் இந்த வசனம் அருளப்பட்டது. நபி ﷺ அவர்கள் ஸஅது ரலி அவர்களின் சகோதரரை அழைத்து இந்த பெண் மக்களுக்கு மூன்றில் இரண்டு பங்கையும் அவர்களது தாயிக்கு எட்டில் ஒரு பங்கையும் கொடுத்து விடுங்கள். மீதியுள்ளது உனக்குரியது என்று சொன்னார்கள். வாரிசுரிமை குறித்த வசனம் அருளப்பட்ட பிறகு பங்கு வைக்கப்பட்ட முதல் சொத்து இது தான். (இப்னு கஸீர்)

فَإِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا يَجْعَلُونَ جَمِيعَ الْمِيرَاثِ لِلذُّكُورِ دُونَ الْإِنَاثِ، فَأَمَرَ اللَّهُ تَعَالَى بِالتَّسْوِيَةِ بَيْنَهُمْ فِي أَصْلِ الْمِيرَاثِ،

ஜாஹிலிய்யா காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை முழுவதுமாக மறுக்கப்பட்டது. சொத்துரிமை ஆண்களுக்கு மட்டும் தான் என்ற சிந்தனை இருந்தது. அந்த சிந்தனையை உடைத்து பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று பெண் சமூகத்திற்காக இஸ்லாம் குரல் கொடுத்தது. அந்த சொத்துரிமை குறித்து பேசும் வசனங்கள் இந்த அத்தியாயத்தில் இருக்கின்றது.


یُوصِیكُمُ ٱللَّهُ فِیۤ أَوۡلَـٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَیَیۡنِۚ 

உங்கள் சந்ததியில் ஆணும் பெண்ணும் இருந்தால் ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 4 ;11)

அதேபோன்று பெண்களில் யாரை மணமுடிப்பது கூடும். பெண்களில் யார் மஹ்ரம்கள் என்று விரிவாக பேசும் வசனங்கள் இந்த அத்தியாயத்தில் இருக்கின்றது.

حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏

உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்துவிட்டவற்றைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கருணையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 4:23)

அதேபோன்று மஹர் தொகையை தாராளமாக கொடுக்க வேண்டும். அதில் அநீதம் இழைக்கக்கூடாது என்று கூறும் வசனம் இதில் உண்டும்.

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌   فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏

நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம். (அல்குர்ஆன் : 4:4)

عَنِ النَّحَّاسِ. وَالْخِطَابُ فِي هَذِهِ الْآيَةِ لِلْأَزْوَاجِ، قَالَهُ ابْنُ عَبَّاسٍ وَقَتَادَةُ وَابْنُ زَيْدٍ وَابْنُ جُرَيْجٍ. أَمَرَهُمُ اللَّهُ تَعَالَى بِأَنْ يَتَبَرَّعُوا بِإِعْطَاءِ الْمُهُورِ نِحْلَةً مِنْهُمْ لِأَزْوَاجِهِمْ. وَقِيلَ: الْخِطَابُ لِلْأَوْلِيَاءِ، قَالَهُ أَبُو صَالِحٍ. وَكَانَ الْوَلِيُّ يَأْخُذُ مَهْرَ الْمَرْأَةِ وَلَا يُعْطِيهَا شَيْئًا، فَنُهُوا عَنْ ذَلِكَ وَأُمِرُوا أَنْ يَدْفَعُوا ذَلِكَ إِلَيْهِنَّ. قَالَ فِي رِوَايَةِ الْكَلْبِيِّ: أَنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانَ الْوَلِيُّ إِذَا زَوَّجَهَا فَإِنْ كَانَتْ مَعَهُ فِي الْعِشْرَةِ(٢) لَمْ يُعْطِهَا مِنْ مَهْرِهَا كَثِيرًا وَلَا قَلِيلًا، وَإِنْ كَانَتْ غَرِيبَةً حَمَلَهَا عَلَى بَعِيرٍ إِلَى زَوْجِهَا وَلَمْ يُعْطِهَا شَيْئًا غَيْرَ ذَلِكَ الْبَعِيرِ

ஒரு அறிவிப்பின்படி இந்த உத்தரவு திருமணம் முடிக்கக்கூடிய ஆண்களுக்கானது. அதாவது நீங்கள் திருமணம் முடிக்கின்ற பொழுது உங்கள் மனைவிக்கு தாராளமாக மகர் கொடையை கொடுத்து விடுங்கள் என்று அல்லாஹ் உத்தரவிடுகிறான். இன்னொரு அறிவிப்பின் படி இந்த உத்தரவு பெண்ணுடைய பொறுப்புதாரிக்கானது. ஏனென்றால் அந்த காலத்தில் கணவன் அந்த பெண்ணுக்கு மஹரைக் கொடுத்தாலும் பெண்ணுடைய வலியாக இருப்பவர் அந்த மகரை அவரே எடுத்துக் கொண்டு அந்த பெண்ணுக்கு எதையும் கொடுக்காமல் தடுத்து விடுவார். ஜாஹிலிய்யா காலத்தில் அப்படி ஒரு மோசமான பழக்கம் இருந்து வந்தது. அதை கண்டித்து, மகர் என்பது அதற்கு முழு உரிமை பெற்றவள் அந்த பெண் தான் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.

அதேபோன்று அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான இன்னொரு அநீதமும் நடந்து வந்தது. அதாவது ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து சிறிது காலம் வாழ்வார். அதற்குப் பிறகு இன்னொரு திருமணம் செய்ய விரும்புகின்ற பொழுது அந்த முதல் மனைவியை நிர்பந்தித்து அவளை கட்டாயப்படுத்தி அவளிடம் கொடுத்த அந்த மகர் தொகையை திருப்பி வாங்கிக் கொள்வார்கள்.பின்பு அவளிடம் இருந்து வாங்கிய அந்த மகரைக் கொண்டு இன்னொரு திருமணம் செய்து கொள்வார்கள். அந்த பெண்ணோடு சிறிது காலம் வாழ்ந்து சுகங்களை அனுபவித்து விட்டு அவளைக் கட்டாயப்படுத்தி அவளிடமிருந்து மகர் தொகையை வாங்கி இன்னொரு திருமணத்தை செய்து கொள்வார்கள். இப்படியே ஒரே மகர் தொகையைக் கொண்டு பல பெண்களை திருமணம் செய்யக்கூடிய அராஜகம் அன்றைக்கு நடந்தது. பெண்களுக்கு எதிரான இந்த அநீதத்தை கண்டித்து அல்லாஹுத்தஆலா இந்த அத்தியாயத்தில் வசனத்தை இறக்கி அருளினான்.

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌  اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا

ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா? (அல்குர்ஆன் : 4:20)

இப்படி பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல அநீதங்களையும் அடக்குமுறைகளையும் இந்த அத்தியாயத்தின் வசனங்கள் தடுத்து அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

 

மிக முக்கியமான ஐந்து வசனங்கள்

 

عن عبدِ اللهِ بن مَسعودٍ رضِي اللهُ عنه، قال: (إنَّ في النِّساء لخمسَ آياتٍ، ما يسرُّني بهنَّ الدُّنيا وما فيها، وقد علِمتُ أنَّ العلماء إذا مرُّوا بها يعرفونها:

நிஸா அத்தியாயத்தில் 5 வசனங்கள் இருக்கிறது.அந்த ஐந்து வசனங்களுக்கு பகரமாக இந்த உலகமும் உலகத்தில் இருக்கிற அனைத்தும் எனக்கு கிடைத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது என்று இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறினார்கள்.

 

அந்த ஐந்து வசனங்களும் எனக்கு ஆக மகிழ்ச்சியை தரக்கூடியவை என்று கூறினார்கள் ஏனென்றால் அந்த ஐந்து வசனங்களும் அல்லாஹு ரப்புல் ஆலமீனுடைய கருணையையும் கிருபையையும் வெளிப்படுத்தும் வசனங்களாக இருக்கின்றன.

 

اِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம். (அல்குர்ஆன் : 4:31)

 

اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ‌  وَاِنْ تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًاؔ

நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதை இரட்டிப்பாக்கித் தன் அருளால் மேலும், அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கிறான். (அல்குர்ஆன் : 4:40)

 

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (அல்குர்ஆன் : 4:48)

 

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ‌ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا

அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். (அல்குர்ஆன் : 4:64)

 

وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا‏

எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான். (அல்குர்ஆன் : 4:110)

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் நிஸா அத்தியாயத்தில் 8 வசனங்கள் இருக்கிறது அந்த எட்டு வசனங்களும் சூரியன் உதித்து மறைகின்ற இந்த பூமியை விட இந்த சமூகத்திற்கு மிகவும் மேலானதாகும்.

 

குர்ஆனில் இருக்கிற அனைத்து வசனங்களும் சமூக மக்களுக்கு சிறந்ததாகவும் பலன் தரக்கூடியதாகவும் தான் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் குறிப்பிட்ட அந்த வசனங்கள் இறைவன் அடியார்களை மன்னிப்பதாகவும் அவர்கள் மீது கருணை காட்டுவதாகவும் கூறப்படும் வசனங்களாக இருக்கின்றன. எனவே தான் இந்த வசனங்களை அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்.

 

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«اقْرَأْ عَلَيَّ» قَالَ: قُلْتُ: أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ: «إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي» قَالَ: فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ، وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} [النساء: 41] قَالَ لِي: «كُفَّ – أَوْ أَمْسِكْ -» فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை கண்டேன். 65 (புகாரி: 5055)

கடந்த கால பதிவுகள்

2022 மரண சிந்தனை 

2023 இஸ்லாம் கூறும் வாரிசுரிமைச் சட்டம்

2024 இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை

வாஹிதிகள் பேரவை அமானிதம்

 

  

2 comments: