Sunday, March 2, 2025

தராவீஹ் 3 - எதைக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும்

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ‏

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள். (அல்குர்ஆன் : 3:23)

மனிதர்கள் தங்களுக்கிடைய ஏற்படுகின்ற விவகாரங்களுக்கு வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க வேண்டும்.பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வேதத்திலிருந்தே தேட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற ஷரீஅத் என்பது அழகானது, அற்புதமானது,நேர்த்தியானது.குறைகளுக்கு அப்பாற்பட்டது,முழுமை பெற்றது.  

மனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் இந்த ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டிருக்கும். தனி மனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ எது ஆபத்தையும் அழிவையும் ஏற்படுத்துமோ அதுவெல்லாம் இங்கே தடை செய்யப்பட்டிருக்கும். இஸ்லாத்தில் நூற்றுக்கணக்கான ஏவல்கள் உண்டு. நூற்றுக்கணக்கான விலக்கல்கள் உண்டு. ஷரியத் கூறுகின்ற ஏவல்களையும் விலக்கல்களையும் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று சொன்னால் மனித சமூகத்திற்கு எது நன்மையோ அது ஏவல். மனித சமூகத்திற்கு எது அழிவோ அது விலக்கல் என்று சொல்லி விட முடியும்.

செத்த பிராணியை ஷரீஅத் தடை செய்திருக்கின்றது.காரணம், அதன் உடம்பில் எதாவது நோய் இருக்கலாம்.அந்த நோயின் தாக்கம் அதன் இரத்தத்தில் கலந்திருக்கலாம்.தானாக செத்துப் போன பிராணியின் உடம்பிலிருந்து இரத்தம் வெளியாராமல் அதிலேயே தங்கி விடும். அந்த பிராணியை சாம்பிடும் போது அது நிச்சயம் உடம்புக்கு கேடாக இருக்கும். எனவே தான் இஸ்லாம் அதை தடை செய்திருக்கின்றது.

இவ்வாறு ஷரீஅத் அனுமதித்தவை நன்மை தரக்கூடியதாக இருக்கும். ஷரீஅத்தால் தடை செய்யப்பட்டவை கேடு விளை விப்பதாக இருக்கும்.

இந்த தூய்மையான ஷரீஅத்தை ரப்புல் ஆலமீன் அதில் நமக்கு சில கடமைகளை விதித்திருக்கின்றான்.

1.       ஷரீஅத்தை அறிதல்

ஒரு முஸ்லிம் ஷரீஅத்தின் சட்டதிட்டங்களை அவனுக்கு தேவையான அளவு தெரிந்திருக்க வேண்டும். அது அவன் மீது கடமை. தொழக்கூடியவனுக்கு தொழுகையின் சட்டங்களும் ஜகாத் கொடுப்பவனுக்கு ஜகாத்தின் சட்டங்களும் இப்படியே ஒவ்வாரு சட்டங்களையும் தேவையான அளவு தெரிந்திருப்பது கடமையாகும்.

2.       ஷரீஅத் சட்டங்களைக் கொண்டு அமல் செய்தல்

குர்ஆன் என்பது ஓதுவதற்காக மட்டுமே வழங்கப்பட வில்லை. அதன் மிக முக்கியமான நோக்கம் அமல் செய்வது.

قال ابن مسعود رضي الله عنه: ((كان الرجلُ منَّا إذا تَعَلَّمَ عشر آيات لم يتجاوزهنّ حتى يعرفَ معانيهن، والعمل بهنّ

எங்களில் ஒருவர் குர்ஆனிலுள்ள பத்து வசனங்களை படித்தால் அதன் கருத்துக்களை விளங்கி அதனைக் கொண்டு அமல் செய்யும் வரை அதனை விட்டு விட்டு வேறு வசனங்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள்.

قال الفضيل بن عياض رحمه الله: «إِنَّما نَزَلَ القُرْآنُ ليُعْمَلَ به، فَاتَّخَذَ النَّاسُ قِرَاءَتَهُ عَمَلًا. قِيلَ: كَيْفَ العَمَلُ بِهِ؟ قَالَ: أَيْ لِيُحِلُّوا حَلاَلَهُ، ويُحَرِّمُوا حَرَامَهُ، ويَأْتَمِرُوا بِأَوامِرِهِ، ويَنْتَهُوا عَنْ نَواهِيهِ، ويَقِفُوا عِنْدَ عَجَائِبِه

குர்ஆனை அல்லாஹ் அமல் செய்வதற்காகவே அருளியிருக்கிறான். ஆனால் மக்கள் அதைக் கொண்டு ஓத மட்டுமே செய்கின்றனர் என்று ஃபுளைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் கூறினார்கள். எப்படி அமல் செய்வது என்று கேட்கப்பட்ட போது குர்ஆன் ஹலாலாக்கிதை ஹலால் என்று கூற வேண்டும். குர்ஆன் ஹராமாக்கியதை ஹராம் என்று கூற வேண்டும். குர்ஆனில் ஏவப்பட்ட விஷயங்களை செய்ய வேண்டும். குர்ஆன் தடுத்த விஷயங்களிலிருந்து தவிர்ந்து நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.


نظر سعيد بن المسيب إلى رجل صلى بعد النداء من صلاة الصبح, فأكثر الصلاة فحصبه, ثم قال: إذا لم يكن أحدكم يعلم فليسأل: إنه لا صلاة بعد النداء إلا ركعتين فانصرف فقال: يا أبا محمد أتخشى أن يعذبني الله بكثرة الصلاة ؟ قال: بل أخشى أن يعذبك الله بترك السنة.

பஜ்ர் பாங்கு சொல்லப்பட்ட பிறகு ஒருவர் தொழுது கொண்டிருப்பதை ஸஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் பார்த்தார்கள் அவர் சுன்னத்தான இரண்டு ரக்அத்தைத் தாண்டி அதிகமாக தொழுது கொண்டிருந்தார். அவரை அழைத்து பஜ்ருடைய பாங்கிற்குப் பிறகு அந்த பஜ்ருடைய சுன்னத்தான இரண்டு ரக்அத்தை தவிர அதை விட அதிகமாக தொழுவதற்கு ஷரீஅத்தில் அனுமதி இல்லை என்று சொல்லி திரும்பி விட்டார்கள். அந்த மனிதர் அவர்களை அழைத்து தொழுகை நன்மையான காரியம் தானே. அதை அதிகமாக தொழுவது குற்றமா என்று கேட்ட போது, நபியவர்களின் சுன்னத் அது தான். அந்த சுன்னத்தை மீறி நடப்பது குற்றம் என்று அவருக்கு பதில் சொன்னார்கள்.

எனவே குர்ஆனை ஹதீஸையும் அமல் செய்ய வேண்டும்.

ஸஹாபாக்கள் குர்ஆனில் ஒரு வசனம் இறங்கினால் அதை உடனே அமலுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

 

كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَ المَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، قَالَ أَنَسٌ: فَلَمَّا نَزَلَتْ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ مَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَخٍ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، أَوْ رَايِحٌ – شَكَّ عَبْدُ اللَّهِ – وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ» فَقَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَفِي بَنِي عَمِّهِ وَقَالَ إِسْمَاعِيلُ، وَيَحْيَى بْنُ يَحْيَى: «رَايِحٌ»

 

மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) ஏராளமான பேரீச்ச மரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். ‘அவரின் செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 03:92 வது) வசனம் அருளப்பெற்றதும் அபூ தல்ஹா(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நல்லது. அது ‘(மறுமையில் இலாபம் தரும் செல்வம்தானே!’ அல்லது ‘(அழிந்து) போய்விடும் செல்வம்தானே!’ என்று கூறினார்கள் – அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவித்தார்.

(தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், ‘தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியேற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (பொறுத்தமாகக்) கருதுகிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு அபூ தல்ஹா(ரலி), ‘(அவ்வாறே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!’ எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இஸ்மாயீல் இப்னு அபீ உவைஸ்(ரஹ்) அவர்களும் யஹ்யா இப்னு யஹ்யா(ரஹ்) அவர்களும் ‘(அழிந்து) போய்விடும் செல்வம் தானே!’ என்றே அறிவித்தார்கள்.புகாரி 5611

 

உலகில் ஒருவர் மட்டுமே செய்த அமல்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்து விடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதையும்) நீங்கள் அடைந்திரா விட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் : 58:12)

 

قال ابن عباس : نزلت بسبب أن المسلمين كانوا يكثرون المسائل على رسول الله صلى الله عليه وسلم حتى شقوا عليه ، فأراد الله عز وجل أن يخفف عن نبيه صلى الله عليه وسلم

முஸ்லிம்கள் பெருமானாரிடத்தில் வந்து அவர்களிடத்தில் பேச வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது தீனுல் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ அடிக்கடி அவர்களை சந்தித்து எதையாவது ஒன்றை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இது பெருமானருக்கு சிரமத்தை தந்து விடும் என்பதால் அல்லாஹு இப்படி ஒரு சட்டத்தை இந்த வசனத்தின் மூலம் உலகிற்கு சொன்னான்.

 

عن علي بن أبي طالب أنه قال : في كتاب الله آية ما عمل بها أحد قبلي ولا يعمل بها أحد بعدي ، وهي : يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة كان لي دينار فبعته ، فكنت إذا ناجيت الرسول تصدقت بدرهم حتى نفد ، فنسخت بالآية الأخرى أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات

ஹள்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆனில் ஒரு வசனம் உண்டு. அதைக் கொண்டு அமல் செய்தவன் உலகில் நான் மட்டும் தான். எனக்கு முன்னால் வேறு யாரும் அமல் செய்ய வில்லை. எனக்குப் பின்னால் வேறு எவரும் அமல் செய்யவும் முடியாது. மேற்கூறப்பட்ட வசனம் இறங்கிய உடன் ஸதகா செய்து விட்டேன். ஆனால் சிறிது நேரத்தில் அந்த சட்டத்தை அல்லாஹ் மாற்றி விட்டான் என்று கூறுகிறார்கள்.

 

3.       குர்ஆனைக் கொண்டு தீர்ப்பளித்தல்

 

முஃமின்களாக இருக்கின்ற நாம் நம்முடைய அனைத்து விவகாரங்களுக்கும் ஷரீஅத்தையே நாட வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் ஷரீஅத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பவர்களே முஃமின்கள் என்று கூறுகின்றான். முனாஃபிக்கள் அவ்வாறு தீர்ப்பளிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றான்.

 

وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ

தவிரதங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்புபெற அல்லாஹ்விடமும்அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர்.(அல்குர்ஆன் : 24:48)

وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَ

எனினும்தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம் தூதருக்கு) கீழ்ப்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர். (அல்குர்ஆன் : 24:49)

اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ

என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதாஅல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனராஅல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாகஇவர்கள்தான் வரம்பு மீறும் அநியாயக்காரர்கள் ஆவர். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.) (அல்குர்ஆன் : 24:50)

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

எனினும்மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும்அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால்அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிரவேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர். (அல்குர்ஆன் : 24:51)

தங்களின் விவகாரங்களில் ஷரீஅத்தை பின்பற்றாமல் அதன்படி தீர்ப்பளிக்காமல் புரக்கணிப்பவர்களை அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கின்றான்.

فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا‌  سَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ

ஆகவேஎவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (அல்குர்ஆன் : 6:157)

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏

உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.(அல்குர்ஆன் : 4:65)

 

أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ فِي شِرَاجٍ مِنَ الحَرَّةِ يَسْقِي بِهَا النَّخْلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْقِ يَا زُبَيْرُ، فَأَمَرَهُ بِالْمَعْرُوفِ، ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ» فَقَالَ الأَنْصَارِيُّ: أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «اسْقِ، ثُمَّ احْبِسْ، يَرْجِعَ المَاءُ إِلَى الجَدْرِ، وَاسْتَوْعَى لَهُ حَقَّهُ» فَقَالَ الزُّبَيْرُ: ” وَاللَّهِ إِنَّ هَذِهِ الآيَةَ أُنْزِلَتْ فِي ذَلِكَ: {فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ} [النساء: 65] ” قَالَ لِي ابْنُ شِهَابٍ: فَقَدَّرَتِ الأَنْصَارُ وَالنَّاسُ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْقِ، ثُمَّ احْبِسْ حَتَّى يَرْجِعَ إِلَى الجَدْرِ» وَكَانَ ذَلِكَ إِلَى الكَعْبَيْنِ

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். இறைத்தூதர் (தம்மிடம் இந்த வழக்கு வந்தபொழுது), ‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டைய தோப்பு)க்கு அதை அனுப்பி விடுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு அந்த அன்சாரி, ‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?’ என்று கேட்டார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (பிறகுவிட்டு விடுங்கள்)’ என்று கூறி, ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர்(ரலி), ‘குர்ஆனின் இந்த (திருக்குர்ஆன் 04:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது’ என்றார்கள்.அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்.

(இந்த நபிமொழியை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப்(ரஹ்) என்னிடம், ‘(உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்னும் (இந்த) நபிமொழியை அடிப்படையாகக் கொண்டே, ‘தண்ணீர் கணுக்கால்கள் வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்டதாகப் பொருள்’ என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டார்கள்’ என்றார்கள்.

 

4.       ஷரீஅத்தின் பக்கம் மக்களை அழைத்தல்

5.       ஷரீஅத்திற்காக போரிடுதல்

இன்று ஓதப்பட்ட வசனத்தில் மூன்றாவது கடமையான தீர்ப்பளிப்பதைக் குறித்து அல்லாஹ் பேசுகிறான்.

நம்முடைய எல்லா விவகாரங்களிலும் ஷரீஅத்தை பின்பற்றி நடக்கவும் அதன்படி தீர்ப்பளிக்கவும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!

 கடந்த கால பதிவுகள்

2022 நம்பிக்கையை கை விட வேண்டாம் 

2023 அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

2024 ரிளாக்ஸ் ப்ளீஸ்

வாஹிதிகள் பேரவை மாநபியை பின்பற்றுவோம்

1 comment:

  1. அல்லாஹ் உங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்குவானாக

    ReplyDelete