சமீப காலமாக பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. ஆதி காலத்தில் மனிதனின் தேவைக்காகவும் உதவிக்காகவும் சில மிருகங்களை வளர்த்து வந்த மனிதன், பிறகு அவைகளினால் சில இயற்கை நன்மைகளை பெற்ற பொழுது பிராணிகளின் அவசியத்தை உணர்ந்து அவைகளோடு நெருங்கி பழக ஆரம்பித்தான். ஆனால் இன்று பிராணிகளை வளர்ப்பது நவீன காலத்து கலாச்சாரமாக மாறி விட்டது. தேவைக்காகவும் உதவிக்காகவும் வளர்த்த காலம் கடந்து இப்போது அதை வளர்ப்பது ஃபேஷனாக மாறிப்போனது.பிராணிகள் விஷயத்தில் சிலர் எல்லை கடந்து அதற்கு அடிமையாகி விட்டார்கள். வித விதமான பறவைகளையும் பிராணிகளையும் வீட்டில் வாங்கி நிரப்புவதை வழமையாக கொண்டிருக்கின்றார்கள்.