நான்ஸி 1
1, ஹை ரோஸி எப்டி இருக்க
2, நானும் நல்ல இருக்கேன், அப்றம் ஏன் ஒரு மாதிரியா இருக்க, எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லயா ?
3, நாட்ல கொடுமையா என்ன ஆச்சு. நீ எதப்பத்தி சொல்ற
4, ஓ... அதச் சொல்றியா....
5, ஆமா ஆமா, நாட்ல எந்த பிரச்சன நடந்தாலும் அதுக்கு முத
காரணம் அவங்களா தான் இருக்கும். இந்த முஸ்லிம்களுக்கு வேற வேலையே இல்ல போல தெரியிது.
6, இனிமே முஸ்லிம்களோட பழக்கத்தலா கொறச்சிக்கனும். இல்லனா
நமக்கும் ஆபத்து தான்.
-----------
7, நல்ல இருக்கோம், நல்ல இருக்கோம்
8, அதுலாம் ஒன்னுமில்ல, நீங்க போலாம்
9, ஒன்னுமில்ல 2 நாளைக்கு முன்னாடி குண்டு வெடிச்சிச்சில்ல.
அதப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.
10, அதுக்கு என்னவா. அத செஞ்சதே உங்க முஸ்லிம்க தான. எத்தன
பேரு அநியாயமா செத்துட்டாங்க. நீங்க ஏன் தான் இப்டி செய்றீங்களோ தெரியல.
10, முஸ்லிம்க பேரு தான வந்துச்சி.அப்ப நீங்க செய்யாம வேற
யாரு செஞ்சா.
11, ஓ அப்டியா.....
12, ஆமா அதுவும் கரைக்ட் தான்.
13, நீ சொல்றதுலாம் சரி தான். ஆனா உலகத்துல முஸ்லிம்கள்னாவே
எல்லாரும் பயப்படுறாங்களே.
14, நாங்களும் அப்டித்தான் தவறா புரிஞ்சி வச்சிருக்கோம்.
இஸ்லாத்த பத்தி கொஞ்சம் எடுத்துச் சொல்லுள்ளே. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.
15, அப்டியா
16, சொல்லு
17, ஓ இவ்ளோ விஷயம் இருக்கா. நான் கூட இஸ்லாத்த பத்தி இவ்ளோ
நாளா தப்பா தான் புரிஞ்சிட்டு இருந்தேன். உன் கிட்ட பேசுன பிறகு தான் நிறைய
விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்.
ரோஸி 2
1, நான் நல்ல இருக்கேன் நீ எப்டி இருக்க நான்ஸி
2, அதுலாம் ஒன்னும் இல்ல..... நாட்டுல நடக்கிற
கொடுமையத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்.
3, இல்ல 2 நாளைக்கு முன்னாடி குண்டு வெடிச்சிச்சில்ல. 2
முஸ்லிம் தீவிரவாதிங்க கைது செய்யப்பட்டாங்களே
4, ஆமா, இந்த முஸ்லிம்க ஏன் தான் இப்டி இருக்காங்களோ
தெரியல. நாட்ல குண்டு வெடிப்பு, கலவரம், கொல , கொல்ல எல்லாத்தையும் செய்றது அவங்க
தான்.
5, நாட்ல அமைதியா இருக்கச் சொன்னாலும் இருக்க
மாட்டுக்காங்க. சரி பாக்கிஸ்தானுக்கு போங்கன்னாலும் போக மாட்டுக்காங்க. இங்க
உக்காந்து அழிச்சாட்டியம் பன்னிட்டு இருக்காங்க.
6, ஆமா ஆமா கரைக்டா சொன்ன.
-------------
7, நல்ல இருக்கோம், நல்ல இருக்கோம்
8, அதுலாம் ஒன்னுமில்ல, நீங்க போலாம்
ஃபாத்திமா 3
1, ஹை ரோஸி நான்ஸி எப்டி
இருக்கீங்க.
2, ரொம்ப நேரமா என்ன
பேசிட்டு இருக்கீங்க
3, சும்மா சொல்லுங்க நம்ம
ஃப்ரன்ஸ் தான. நமக்குள்ள என்ன இருக்கு.
4, ஆமா அதுக்கு என்ன
5, ஓ இதான் உங்க
பிரச்சனையா... முதல்ல அத செஞ்சது முஸ்லிம்களே கிடயாது. அது தெரியுமா உங்களுக்கு.
6, எல்லாரும் அப்டித்தான் புரிஞ்சி வச்சிருக்காங்க. முஸ்லிம்க
பெயர கெடுக்கனுங்கறதுக்காக இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சதி தான் அது.
எல்லாத்தையும் அவங்களே செஞ்சிட்டு எங்க மேல பழிய போட்றுவாங்க. அவங்க வேலையே அதான்.
7, ஆமா. நீங்களே பாக்கத்தான செய்றீங்க. எங்களுக்கு எதிரா
எவ்ளோ சட்டம் இந்த நாட்ல வந்துருக்கு. முத்தலாக் சட்டத்துல கை வச்சிட்டாங்க.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த போக்கிட்டாங்க, பாபர் மசூதிய கைப்பத்திட்டாங்க. இப்ப பொதுசிவில்
சட்டத்த கொண்டு வர்ரதுக்கு முயற்சி பன்னிட்டு இருக்காங்க. இவ்ளோ நடந்த பிறகும்
நாங்க எங்கயாச்சும் கலவரம் பன்னோமோ. அமைதியா தான போராட்டிட்டு இருக்கோம்.
8, அதுமட்டுமில்லாம முஸ்லிம்கள கண்டாவே அடிக்கிறாங்க.
கொல்றாங்க. எங்க வீட்ட கொளுத்துறாங்க. எங்க பொருளாதாரத்த சேதப்படுத்துறாங்க. எங்க
பள்ளிவாசல இடிக்கிறாங்க, எங்க குர்ஆன அசிங்கப்படுத்துறாங்க. இவ்ளோ அநியாயம் செஞ்ச
பிறகும் நாங்க எதாச்சும் பிரச்சன பன்னோமோ. அமைதியான முறையில போராடிட்டு தான்
இருக்கோம்.
9, அது அவங்க தவறா புரிஞ்சி வச்சிருக்காங்க.
10, சொல்றேன் கேளுங்க. இஸ்லாம் அமைதி மார்க்கம். இஸ்லாம்
என்ற வார்த்தைக்கே அமைதின்னு தான் அர்த்தம். இஸ்லாமும் எங்களுக்கு அத தான்
போதிக்குது. ஒரு முஸ்லிம், தன் நாவாலோ தன் கரத்தாலோ பிறருக்கு எந்த கஷ்டத்தையும்
கொடுக்க கூடாது. அவர் தான் உண்மையான முஸ்லிமுன்னு நபி ஸல் அவங்க சொல்லிருக்காங்க.
11, இன்னும் சொல்றேன் கேளு.
12, உறவுகள சேர்ந்து வாழனும், அண்டை வீட்டார மதிக்கனும்,
பெரியவங்கள கண்ணியப்படுத்தனும், சிறியவங்களுக்கு இரக்கம் காட்டனும், எல்லாரையும்
சகோதரர்களா பார்க்கனும், ஆடுமாடு போன்ற பிராணிகள் மேல கூட அன்பு வைக்கனும்.
யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. தேவைக்காக கையில எதாச்சும் கூர்மையான
பொருள் வச்சிருந்தா அதோட கூர்மையான பகுதிய மடக்கி வச்சிக்கனும். யாரையும்
பயமுறுத்தக்கூடாது. .யாருக்கும் அநியாயம் செய்யக்கூடாது. யாரையும் ஏமாத்தக்கூடாது.
யார் மனசையும் புன்படுத்தக்கூடாது. எல்லாத்துக்கும் முடிஞ்ச அளவு உதவனும். பக்கத்து
வீட்ல யாருக்கும் உடம்பு சரியில்லன்னா அவங்கள சந்திச்சி ஆறுதல் சொல்லனும், யாராச்சும்
மவ்தாயிட்டாங்கன்னா அந்த கடமைகள் எல்லாத்தையும் செய்யனும். இப்டி இஸ்லாம்
சொல்லித்தர நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு.
13, அப்டியா ரொம்ப ரொம்ப சந்தோஷம்.வாங்க போலாம்.
குறிப்பு – முதலில் நான்ஸியும் ரோஸியும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
நம்பர் 6 கு பிறகு ஃபாத்திமா சேர்ந்து கொள்வாள். பின்பு நான்ஸியும் ஃபாத்திமாவும்
பேசுவார்கள். இறுதியாக மூன்று பேரும் சேர்ந்து உரையாடலை முடிப்பார்கள்.
No comments:
Post a Comment