மாணவி - 1
1, அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.அக்கா அஸ்ஸலாமு அலைக்கும். அக்கா அஸ்ஸலாமு
அலைக்கும்ம்ம்ம்ம்ம்
என்னக்கா இத்தன தடவ ஸலாம் சொல்லிட்ட பதிலே சொல்லவே மாட்டேங்குறீங்க. உங்களுக்கு என்ன காது கேக்கலியா
2, அப்ப ஏன்கா பதில் சொல்லல.
3, ஏன்கா என்ன ஆச்சு நான் என்ன பன்னேன்.
4, ஏன்கா அப்டி சொல்றீங்க.நானும் ஈமான் கொண்டிருக்கேன். ஈமான்
கொண்டவங்க முஸ்லிம்க தான
5, ஏன் இல்லை, நான் தொழுறேன்,நோன்பு வைக்கிறேன்.எல்லா
அமல்களையும் செய்றேன்.
6, அப்டி நான் என்னக்கா பாவம் செஞ்சிட்டேன்.
7, நீங்க என்ன சொல்றீங்க எதப்பத்தி பேசுறீங்கன்னே எனக்கு புரியலக்கா. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.
8, ஆமாக்கா வட்டிக்கு கடன் வாங்குனேன் என்ன பன்றது.
9, ஆமா பாவம் தான்.
10, ஆமா ஹராம் தான்.
11, என்னக்கா பன்றது. என் சூழ்நில அப்டி, என் மகளுக்கு கல்யாணம். 50 பவுன் நக போடனும். ஒரு லட்ச ரூபா ரொக்கம்
கொடுக்கனும், மத்தபடி கல்யாண சாப்பாடு போடனும், சீர்வரிச செய்யனும். இப்படி நிறைய
செலவு இருக்குது. இவ்வளவும் செய்றதுக்கு என் கிட்ட எங்கக்கா வசதி இருக்கு. என்னப்
பத்தி தான் உங்களுக்கு தெரியுமே, அதனால தான் அக்கா வேற வழியில்லாம வட்டிக்கு கடன்
வாங்க வேண்டியதா போச்சு.
12, நானும் ஹராம் இல்லன்னு சொல்லல, but no way எனக்கு வேற வழி
இல்லையேக்கா.
13, ஆமா இன்னைக்கு ஒவ்வொரு ஆளும் கையில பணத்த வச்சிட்டு
யாருக்கு கடன் கொடுக்கலாம், யாருக்கு கடன் கொடுக்கலாம்னு பாத்துகிட்டே இருக்காங்க.
ஏன்கா நீங்க வேற புரியாம பேசுறீங்க. இந்த காலத்துல கடன் கேட்டா யாரு தராங்க.
14, நீங்க சொன்ன எல்லாருட்டயும் கேட்டுப் பாத்துட்டேன். நாய்
மாதிரி அலஞ்சது தான் மிச்சம். ஒரு புரோஜனமும் இல்ல. இந்த காலத்துல கேட்டு
வாங்குறதுக்கு ஆளு இருக்குதே தவிர.... கொடுக்குறதுக்கு ஆள் இல்லாம போச்சு என்னா....
பன்றது.
15, ஆமாக்கா என்ன பன்றது, சரீய்ய்ய் நீங்க இவ்ளோ விவரமா
பேசுறீங்களே... வட்டி வாங்க கூடாது.. அது செய்யக்கூடாது... இது செய்யக்கூடாதுன்னு
பெருசா பேசுறீங்களே... நீங்க ஒரு 50,000 எனக்கு கடனா கொடுங்களேன்.
16, இல்லக்கா நீங்க
17, இல்லக்கா நீங்க ஒரு 50,000
18, ஒன்னும் இல்லக்கா ஒன்னும் இல்ல
19, பாத்தீங்களா இவ்ளோ நேரமா வட்டி ஏன் வாங்குற, அது பெரிய
பாவமாச்சே, வட்டியில்லாம கடன் வாங்க வேண்டியதான, இன்னைக்கு யாருக்கும் இரக்கம்
இல்லாம போச்சு அப்டி இப்டின்னு பெருசா டைலாக் விட்டாங்க. சரி நீங்க கடன்
கொடுக்கன்னு கேட்ட உடன வராத ஃபோன வந்த மாதிரி பேசி ஆக்டிங் பன்னிட்டு எஸ்கேப்
ஆயிட்டாங்க. இப்டித்தாங்க இன்னைக்கு எல்லாரும் இருக்குறாங்க.
இன்னைக்கு எல்லாருட்டயும் பணம் இருக்கு. நல்ல வசதி இருக்கு.
ஆனா யாருக்கும் இரக்கம் இல்ல. உதவி
செய்யனுன்னு எண்ணம் இல்ல, மக்களோட கஷ்டத்த புரிஞ்சிக்குற மனப்பான்ம இல்ல.இப்டி
எல்லாரும் அவங்கவங்க சுயநலத்த பாக்குறதனால தான் எங்கள மாதிரி ஆளுங்கலாம் வட்டி
வாங்க வேண்டியதா இருக்கு. என்ன மாதிரி ஆளுங்க வட்டி வாங்குறதுக்கு காரணமே இந்த
மாதிரி சுயநல வாதிங்க தான்.
நான் ஒன்னு சொல்றேன் நல்ல புரிஞ்சிக்கோங்க.வட்டி வாங்குற
நாங்க குற்றவாளிங்கன்னா அத வாங்குறதுக்கு காரணமா இருக்குற இந்த மாதிரி
பணக்காரங்களும் குற்றவாளிங்க தான்.அதனால அல்லாஹ் கொடுத்த பணத்த நல்ல வழியில செலவு
செய்வோம்,இல்லாதவங்களுக்கு உதவி செய்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக.
மாணவி - 2
1, ஏன் கேக்காது. காதுலா நல்ல தான் கேக்குது.
2, எப்டிடீ சொல்ல முடியும். எந்த மூஞ்ச வச்சுகிட்டு சொல்லச்
சொல்ற.
3, நீ என்ன பன்னல அத முதல்ல சொல்லு.செய்யக் கூடாத
காரியத்தலாம் செய்ற.நீ முதல்ல முஸ்லிமா என்னன்னே எனக்கு டவுட்டா இருக்குது. அப்ப
எப்டி உனக்கு பதில் சொல்ல முடியும்.
4, எல்லாம் சரி தான்.ஆனா ஒரு முஸ்லிமோட காரியம்லா உன்கிட்ட
இல்லையே
5, தொழுதா மட்டும் போதுமா? நோன்பு வச்சா மட்டும் போதுமா? பாவமும் செய்யாம இருக்கனும், அப்பத்தான் உண்மையான முஸ்லிமா
இருக்க முடியும்.
6, நீ என்ன பாவம் செய்யல அதச் சொல்லு.
7, இஸ்லாம் வெறுக்குற இஸ்லாம் தட செஞ்சிருக்க கேவலமான வட்டிங்குற
பாவத்த செய்றியே அதத்தான் சொல்றேன்.
8, வட்டி பாவந்தானே
9, வட்டி ஹராம் தானே
10, அப்ப எல்லாந்தெரிஞ்சே செய்றியா?
11, என்ன பெரிய சூழ்நில. என்ன சூழ்நிலயா இருந்தாலும் வட்டி
ஹராமாச்சே அத எப்டி செய்யலாம்.
12, ஏன் வழியில்ல. யாரு கிட்டயாவது வட்டியில்லாம கடன் வாங்க
வேண்டிய தான.
13, ஏன் உன் குடும்பத்துல உள்ளவங்க, உன் அண்ணன் தம்பிங்க,
உன் பக்கத்து வீட்ல உள்ளவங்க, உன்னோட தோழிங்க, இப்டி யாருட்டயாவது கேக்க வேண்டிய
தான.
14, அட அல்லாஹ்வே
அந்தளவுக்கா இன்னைக்கு யாருக்கும் இரக்கம் இல்லாம போச்சு.
15, ஹலோ யார் பேசுறது, யாருங்க பேசுறது. கட் ஆயிடுச்சு.
என்னம்மா கேட்ட
16, ஹலோ சரியா கேக்கலங்க சத்தமா பேசுங்க. கட் ஆயிடுச்சு. நீ
என்னம்மா கேட்ட.
17, ஹலோ யாருங்க பேசுறது.அதான் சரியா கேக்க மாட்டேங்குதே
ஏன் திருப்பி திருப்பி போன போட்டு டென்ஷன் படுத்துறீங்க. நீ என்னம்மா கேட்ட.
18, சரிம்மா எனக்கு முக்கியமான வேல இருக்குது.அப்றம்
பாப்போம் ok வா
No comments:
Post a Comment