மாணவன்
1 ; இந்த உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சி, ரொம்ப மோசமாப் போச்சி!!!
2 ;வேற யாரப்பாத்து சொல்றது? உங்களால தான் இந்த உலகமே கெட்டுப்போச்சி.
3 ; தயிர் சாதமோ புளி சாதமோ கெட்டுப்போறதுக்கு நீங்க தான்
காரணம்.
4 ; நாங்க ஒழுக்கமா தான் இருக்கோம். உங்கள்ட தான் ஒழுக்கமே இல்ல.
5 ; ஆ.... உங்க ஒழுக்கத்தப் பத்திதான் எங்களுக்குத் தெரியுமே. பொம்பளன்னா
பொம்பள மாதிரி டிரஸ் போடனும். அத வுட்டுட்டு நாங்க போடுற டீ ஷர்ட்டயும், பேண்டையும், போடுறீங்களே இதான் உங்க
ஒழுக்கமா?
6 ; ஆமா. ஆண்கள மாதிரி
ஆடை அணியும் பெண்கள நபி [ஸல்] அவங்க
சபிச்சிருக்காங்க தெரியுமா?
7 ; உங்க டிரஸ் கூட என்ன முறையாவா இருக்குது?
8 ; அந்தக் கொறச்சலதாம்மா சொல்றேன். டிரஸ்ஸுங்றது உடம்ப
மறைக்கிறதுக்கு.ஆனா நீங்க போடுற ட்ரஸ் அப்டியா இருக்குது.அய்யோ அல்லாஹ் கொஞ்சம்
லூஸா தச்சி போட்டா என்ன கொறஞ்சா போயிடுவீங்க.அதுமட்டுமில்லாம உங்க அழக
மறைக்கிறதுக்காக தான் இஸ்லாம் புர்கா போடனுன்னு சொல்லுது. ஆனா நீங்க போடுற புர்கா
அப்டியாமா இருக்குது.அதுல எத்தன டிஸைன் எத்தன கலர்.இதுல வேற முடிய தூக்கி வெளிய
விட்டுக்குறது.முடியும் மறைக்க வேண்டிய பகுதின்னு உங்களுக்கு தெரியாதா என்ன.இதனாலயே…. பல பேர் கெட்டுப் போறாங்க.
9 ; எங்களப் பாக்க வைக்கிறதே நீங்க தானம்மா! ரோட்ல போகும்போது ஒழுங்கா போவனும். ஆனா.... நீங்க ஜல்
ஜல்லுன்னு கொலுச போட்டுகிட்டு....தல நிறைய பூவ வச்சிக்கிட்டு.....உடம்பு முழுக்க
செண்ட தேச்சிக்கிட்டு போனா யாரு தான் பாக்காம இருப்பா!
10 ; ஆமா நாங்க வேல வெட்டியில்லாம தான் இருக்கோம். அதான் உங்கள
பாக்குறோம். அட போம்மா..... ஏதோ நல்ல விஷயம் ஒன்னு சொல்லலாம்னு நினச்சேன்.
11 ; ஒரு பெண் தன் கணவனுக்கு மட்டுந்தான் தன் அழகக் காட்டனும். ஊர்
மக்களுக்கு காட்டக்கூடாது. அதனால ஒரு பெண் வெளியே போவும் போது அண்ணிய ஆண்கள கவர்ர
மாதிரி எதையும் போடக்கூடாது. வீட்டுல கணவனுக்காக மட்டும் தான் கொலுசு, பூ, செண்டு
இதெல்லாம் போடனும்னு இஸ்லாம் சொல்லுது. ஆனா நீங்க வெளியே போகும் போது தான்
எல்லாத்தையும் போட்டுட்டு போறீங்க. இது அல்லாஹ்வோட கோபத்த ஏற்படுத்தாதா?
12 ; சரி இனி நாங்க தங்க நக அணிய மாட்டோம்.
13 ; ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும்.
மாணவி
1 ; அத ஏண்ணே என்னப் பாத்துச் சொல்றீங்க?
2 ; என்ன!!! எங்களால தான் கெட்டுப் போச்சா? கெட்டுப்போற அளவுக்கு நாங்க என்ன பண்ணுனோம்? அது மட்டுமில்லாம கெட்டுப்போறதுக்கு உலகம் என்ன தயிர் சாதமா? இல்ல புளி சாதமா?
3 ; நீங்க மட்டு என்ன சுத்தமா!
4 ; எங்கள்ட என்ன
ஒழுக்கமில்ல! ஒழுக்கத்துக்கு முன்மாதிரியே நாங்க தான் தெரியுமா?
5 ; ஏன்? டீ ஷர்ட்டையும், ஃபேண்டையும் ஆம்பளைங்க மட்டுந்தான் போடனும்னு என்ன எழுதியா
வச்சிருக்கு?
6 ; அப்டியா தெரியாதே!!! இன்ஷா அல்லாஹ்! இனி நாங்க ஆண்கள மாதிரி ஆடை அணிய
மாட்டோம். எங்க ட்ரஸ்ஸயே போடுறோம்.
7 ; ஏன் எங்க ட்ரஸ்ஸுக்கு என்ன கொறச்சல்?
8 ; ஆ..... நீங்க ரோட்டப் பாத்து
நடக்கனும். ரோட்ல போரத
பாத்து ஏன் நடக்குறீங்க?
9 ; நாங்க எங்களுக்கு விருப்பமானத
போட்டுட்டுப் போவோம். நீங்க உங்க வேளய பாக்க வேண்டிய தானே!
10 ; நல்ல விஷயமா!!! என்ன விஷயம்?
11 ; நீங்க மட்டும் என்ன
சுத்தமா? ஆண்கள் தங்க நக அணியக் கூடாதுன்னு நபி [ஸல்] அவங்க சொல்லியிருக்காங்க. ஆனா நீங்க சுன்னத்தான திருமணத்திலேயே அந்த ஹராம செய்றீங்களே இது மட்டும் சரியா?
12 ; நாங்களும் எங்க அழக அண்ணிய ஆண்களுக்கு காட்ட மாட்டோம். எங்க
நபி [ஸல்] அவங்க சொன்ன முறையில நடப்போம். அன்புக்குறிய தாய்மார்களே நீங்களும் என்ன மாதிரி மாறிக்கோங்க. அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஒழுக்கமான வாழ்வை
அமைத்துத்தருவானாக.
மாஷா அல்லாஹ் ஹஜ்ரத்
ReplyDelete