Sunday, December 14, 2025

சுலைமான் அலை மற்றும் எறும்பு

 

மாணவன் -1

1 அஸ்ஸலாமு அலைக்கும்

 2 மனிதனைக் கண்டால் நீ ஏன் விரண்டோடுகிறாய்... ?

 3 ஆம் நீ சொல்வது உண்மை தான். மனிதன் மறதியில் தான் இருக்கிறான். சரி.. நீ நிர்வானமாக ஏன் திரிகிறாய் ஆடை அணிந்து திரியலாமே?

4 சரியாக சொன்னாய். அது தான் உண்மையான வாழ்க்கை. சரி... உனக்கு தேவை எதுவுமிருந்தால் என்னிடம் தயங்காமல் கேள்....?  அதை   நான் நிறைவு செய்கிறேன்.

5 எனது இந்த மோதிரம் தான்.  இந்த மோதிரம் சொர்க்கத்திலிருந்து எனக்கு கிடைத்தது.

6 தெரியாது....என்ன காரணம்.....?

 7 அல்லாஹ் எனக்கு காற்றை வசப்படுத்தித் தந்துள்ளான்.

8 ஆம் மனித இனமும் ஜின் இனமும் எனக்கு வழிப்படுகிறது.!

9 அல்ஹம்து லில்லாஹ் உன்னுடைய தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

 

அல்லாஹ்வின் மிகச்சிறிய படைப்பான அந்த எறும்பு சொன்ன பாடத்தை நாமும் உணர்ந்து வாழ்க்கையில் உயர அல்லாஹ் அருள் புரிவானாக

 

 

 

மாணவன் -2

 

 

 1 வ அலைக்குமுஸ் ஸலாம்...

 2 மனிதன் மறதியிலே இருக்கிறான்.அல்லாஹ்வையும் மறந்து விட்டான். இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதையும் மறந்து விட்டான். தான் யார் என்பதையும் மறந்து விட்டான்.இப்படி மறதியிலே மூழ்கிக் கிடக்கிற மனிதனுக்கு  அருகே சென்றால் அந்த மறதி எங்களையும் ஓட்டிக் கொள்ளுமே.... அதனால் தான் மனிதனைப் பார்த்து விரண்டோடுகிறேன்!

 3 ஓ அதுவா..! இந்த உலகத்திற்கு நாம் வரும் போது நிர்வானமாகத் தானே வந்தோம்... உலகை விட்டு போகும் போதும்  நிர்வானமாகத் தானே போகப் போகிறாம். அதனால் தான் எப்போதுமே நிர்வானமாகவே இருக்கிறேன்.!

4  நீங்களே பிறரிடத்தில் தேவையாகக்கூடியவர்... தேவை உள்ள உம்மிடம் என் தேவையைக் கேட்டு என்ன பலன்... அதற்கு தேவையே இல்லாத அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாமே......! அதனால் என் தேவையை என்னைப் படைத்த அல்லாஹ்விடமே கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன்.    சரி..... அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் பெருமை வாய்ந்ததாக எதை கருதுகிறீர்....?

5  அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா...?

6 உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த பரந்து விரிந்த பூமியின் அரசாட்சி அல்லாஹ்விடம் அந்த மோதிரத்தின் வளையத்தை விட ரொம்ப சிறியது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த மோதிரத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறான்.உங்களிடம் வேறு என்ன சிறப்பு இருக்கிறது.

7  அந்தக் காற்று உங்களுக்கு கற்றுத்தரும் பாடம் என்ன தெரியுமா? அதாவது உங்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற எல்லா நிஃமத்துகளும் இந்தக் காற்றைப் போலத்தான். இன்றைக்கு இருக்கும். நாளைக்கு இருக்காது. வேறு ஏதேனும் சிறப்பு உண்டா...?

8  அதுவும் ஓர் படிப்பினைக்குத்தான்.. அல்லாஹ்வின் படைப்புக்களில் பெரும் படைப்பான ஜின்னும் மனிதனும் உனக்கு வழிப்படும் போது நீ எனக்கு வழிப்பட்டே ஆக வேண்டும் என்று அல்லாஹ் உங்களுக்கு உணர்த்துகிறான்.

 

அல்லாஹ்வின் மிகச்சிறிய படைப்பான அந்த எறும்பு சொன்ன பாடத்தை நாமும் உணர்ந்து வாழ்க்கையில் உயர அல்லாஹ் அருள் புரிவானாக

 

No comments:

Post a Comment