வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை
செய்வதாக இருந்தாலும் அது உலகம் சார்ந்த காரியமாக இருந்தாலும் மறுமையை நோக்கமாகக்
கொண்ட காரியமாக இருந்தாலும் அதிலே நின்று நிதானமாக அமைதியாக பக்குவமாக பொறுமையாக யோசித்து,
செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு
செய்து அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அந்த நிதானமும் பொறுமையும் தான் அந்த
காரியத்தில் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.
Showing posts with label விருந்தாளிகள். Show all posts
Showing posts with label விருந்தாளிகள். Show all posts
Monday, June 29, 2020
Saturday, March 26, 2016
விருந்தோம்பல்
மலேசிய மின்னல் FM ல் "இறையருள்" என்ற நிகழ்ச்சியில் பேசிய சிந்தனைத்துளிகள்
விருந்தாளிகளை
உபசரிப்பதும் அவர்களை கண்ணியப்படுத்துவதும் இஸ்லாம் போற்றும் உயர்ந்த பண்புகளில்
ஒன்று.இறைத்தூதர்களிடம் இருந்த அழகிய குணங்களில் ஒன்று இந்த விருந்தோம்பல்.எல்லா
இறைத்தூதர்களும் வலியுறுத்திய விஷயங்களில் ஒன்று இந்த விருந்தோம்பல்.யாரிடத்தில்
விருந்தாளிகளை உபசரிக்கும் உயர்ந்த பண்பு காணப்படுகிறதோ அவர் உயர்ந்த
அந்தஸ்துடையவராக கருதப்படுகிறார். இஸ்லாம் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து
பார்க்கிறது.
இஸ்லாம்
விருந்தோம்பலை சிறந்த அமலாக கருதுகிறது. நமக்கிடையே சகோதரத்துவம் மென்மேலும் வளர்ச்சியடைவதற்கும்
நமக்கு மத்தியில் நட்புறவு நீடிப்பதற்கும் நமது உறவுப் பாலங்கள் உறுதியாவதற்கும்
நம்மிடையே விருந்தோம்பல் என்ற பண்பு நிச்சயம் இடம் பெற வேண்டும். ஆனால் விருந்தோம்பலில்
அடங்கியுள்ள தத்துவங்களைப் பற்றியும் அதன் விழுமியங்களைப் பற்றியும் இன்று நம்மில்
பலர் சிந்திப்பது மில்லை அதைப் பேணுவதுமில்லை.
விருந்தினரை உபசரிப்பதும் அவர்களை கண்ணியப்படுத்துவதும்
இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். இறை நம்பிக்கையின் ஒரு
அங்கம் என்று சொல்லும் அளவிற்கு விருந்தோம்ப லுக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு.
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள் ;- “யார்”
அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத் தட்டும்”. அதுமட்டுமல்ல விருந்தினரை உபசரிக்காதவரிடம் இறை
நம்பிக்கையும்,
மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது என்று கூறினார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறிய இந்த செய்தியின் மூலம் விருந்தோம்பலின் அவசியத்தை நாம் உணரலாம்.
இந்த விருந்தோம்பல் என்பது
சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் நட்புறவை
விரிசலடையாமல் பாதுகாப்பதற்கும் தான் இஸ்லாம் அடையாளம் காட்டியது.எனவே அந்த
நோக்கத்தில் தான் செய்ய வேண்டும். விருந்தளித்தல் என்பது பிரதி உபகாரமாகச்
செய்யப்படும் ஒன்றல்ல.எனவே விருந்தாளியாக வந்தவர் கடந்த காலங்களில் நம்மிடம்
எப்படி நடந்து கொண்டார் என்று பார்த்து அதை மனதில் நிறுத்தி அதே போன்று நடந்து
கொள்வதற்குப் பெயர் விருந்தோம்பல் அல்ல என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள
வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தோழர்களில் ஒருவர் அண்ணல்
நபியிடம் வந்து“அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு மனிதரிடம் சென்ற போது, அவர் எனக்கு விருந்தளிக்க வில்லை.என்னை சரியாக உபசரிக்க
வில்லை. அதன் பின்னர்,
அவர் என்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க
வேண்டுமா? அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நானும்
அவரிடத்தில் நடக்க வேண்டுமா?”
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக! என்று கூறினார்கள்.
எனவே இதன் மூலம் பிறர் செய்வதைப் பார்த்து அதே போன்று செய்வதற்கு
பெயர் விருந்தோம்பல் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
விருந்தாளிகளை உபசரிப்பதை சிறந்த காரியம் என்று
கூறி அதை வலியுறுத்தியதைப் போலவே ஒருவர் விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்று
அவருக்கு பதிலளிப்பதையும் இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது.யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு
செய்துவிட்டார்”
என மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
விருந்தழைப்பை ஏற்று பதிலளிக்காமல் மறுப்பவர்கள்
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும்
கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது என்று
சொன்னதிலிருந்து விருந்துக்கு பதிலளிப்பதும் கடமை என்பதை உணர முடிகிறது.
இஸ்லாம் காட்டித்தந்த இந்த அழகிய வழிகாட்டுதலின் படி
வாழ்ந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக ஆமீன்.
Subscribe to:
Posts (Atom)