அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கிற இந்த இஸ்லாமிய மார்க்கம் ஒரு கட்டுக் கோப்பான மார்க்கம்.எப்படியும் வாழலாம் என்று விட்டு விடாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் கட்டுப்பாடான மார்க்கம்.வெறும் வணக்கவியல் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் சொல்லித்தரும் மார்க்கம். ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை அவன் எப்படியும் வாழ்ந்து விட முடியாது.இஸ்லாம் கூறுகின்ற வரையறைக்குள் மட்டுமே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நாம் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் விசாரணை உண்டு,கேள்வி கணக்கு உண்டு, படைத்தவனிடம் கணக்கு காட்டியாக வேண்டும்,அதற்கு பதிலும் சொல்லியாக வேண்டும்.