இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
لَـتُبْلَوُنَّ
فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا
الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا
وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் : 3:186)
هَذَا
الْخِطَابُ لِلنَّبِيِّ ﷺ وَأُمَّتِهِ وَالْمَعْنَى: لَتُخْتَبَرُنَّ
وَلَتُمْتَحَنُنَّ فِي أَمْوَالِكُمْ بِالْمَصَائِبِ وَالْأَرْزَاءِ
بِالْإِنْفَاقِ فِي سَبِيلِ اللَّهِ وَسَائِرِ تَكَالِيفِ الشَّرْعِ.
وَالِابْتِلَاءُ فِي الْأَنْفُسِ بِالْمَوْتِ وَالْأَمْرَاضِ وَفَقْدِ
الْأَحْبَابِ. وَبَدَأَ بِذِكْرِ الْأَمْوَالِ لِكَثْرَةِ الْمَصَائِبِ بِهَا.
உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்
மக்களுக்கு சோதனைகள் வரும். நோய் நொடிகளால் சோதிக்கப்படுவீர்கள். அதிக மரணங்களைக்
கொண்டு சோதிக்கப்படுவீர்கள். இஸ்லாமிய எதிரிகள் மூலமாகவும் சோதனைகளை
சந்திப்பீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்று
அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான்.
عن عكرمة أنه
حدثه عن ابن عباس ، رضي الله عنه ، قال : دخل أبو بكر الصديق ، رضي الله عنه ، بيت
المدراس ، فوجد من يهود أناسا كثيرا قد اجتمعوا إلى رجل منهم يقال له : فنحاص وكان
من علمائهم وأحبارهم ، ومعه حبر يقال له : أشيع . فقال أبو بكر : ويحك يا فنحاص
اتق الله وأسلم ، فوالله إنك لتعلم أن محمدا رسول الله ، قد جاءكم بالحق من عنده ،
تجدونه مكتوبا عندكم في التوراة والإنجيل ، فقال فنحاص : والله - يا أبا بكر - ما
بنا إلى الله من حاجة من فقر ، وإنه إلينا لفقير . ما نتضرع إليه كما يتضرع إلينا
، وإنا عنه لأغنياء ، ولو كان عنا غنيا ما استقرض منا كما يزعم صاحبكم
قال: بعث
النبي صلى الله عليه وسلم أبا بكر الصديق رحمه الله إلى فنحاص يستمدُّه، وكتب إليه
بكتاب، وقال لأبي بكر: " لا تَفتاتنَّ عليّ بشيء حتى ترجع
". (26) فجاء أبو بكر وهو متوشِّح بالسيف، فأعطاه الكتاب، فلما
قرأه قال: " قد احتاج ربكم أن نمده "! فهمّ أبو بكر أن يضربه
بالسيف، ثم ذكر قول النبي صلى الله عليه وسلم: " لا تفتاتنّ علي بشيء
حتى ترجع "، فكف، ونـزلت: وَلا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا
آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ
. (27) وما بين الآيتين إلى قوله: " لتبلون في أموالكم
وأنفسكم
பனூகைனுகா
என்ற யூதர்களின் ஒரு கோத்திரம் மதீனாவில் இருந்தது. அதன் தலைவன் ஃபின்ஹாஸிடம் ஒரு
சமயம் நபி ﷺ
அவர்கள் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
இவன்
யாரென்றால்,
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் குறிப்பாக நபி ﷺ
அவர்களையும் இலக்காரமாக பேசியவன். இவனுடைய இலக்கார பேச்சுக்கு அல்லாஹ்வும்
விதிவிலக்கானவனல்ல. சமயங்களில் அல்லாஹ் வையும் எதையாவது சொல்லி வம்புக்கு
இழுப்பதுண்டு. அவனிடத்தில் சென்ற அபூபக்கர் ரலி அவர்கள், முஹம்மது நபி ﷺ
அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் என்று உனக்கு நன்றாக தெரியும். அவர்களைப் பற்றி
தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே அல்லாஹ்வை அஞ்சிக் கொள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்
என்று சொன்னார்கள். அதற்கவன் எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் எந்தத் தேவையும் இல்லை.
அவன் தான் எங்களிடத்தில் தேவையாகிறான். நாங்கள் செல்வந்தர்கள். உங்கள் இறைவன் தான்
ஏழை என்று நக்கலாக கூறினான். அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவனை வெட்டி விட
வேண்டும் என்ற எண்ணம் அபூபக்கர் ரலி அவர்களுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் அல்லாஹ்
ரஸூலுக்காக தன் கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக திரும்பி வந்து விட்டார்கள்.
இந்நிகழ்வைக் குறித்துத் தான் இந்த வசனம் பேசுகிறது.
வாழ்க்கையில்
பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியமானது. வாழ்க்கையில் சிரமங்கள், கஷ்டங்கள்,சோதனைகள்,
இழப்புக்கள், அவமானங்கள், எதிரிகளின் அடக்குமுறைகள்
இருக்கத்தான் செய்யும். அந்த நேரத்திலெல்லாம் அவசரப்படாமல் நினாதம் இழக்காமல்
பொறுமை கொண்டால் வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம், இறைவனிடத்திலும்
அந்தஸ்தைப் பெறலாம்.
إنما يوفى الصابرون أجرهم بغير حساب
பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை கணக்கின்றி
நிச்சயம் பெறுவார்கள். (அல்குர்ஆன்
: 39 ; 10)
கோபம்
என்பது மனித இயல்பு. நாம் எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி
நடக்கும் நிகழ்வுகள் நம்மை கோபமடையச் செய்கின்றன. கோபம் வந்தால் நாம் நாமாக
இருப்பதில்லை. கோபத்தில் நம்மை மீறி விடுகின்றோம். கோபத்தில் வார்த்தைகள் நம்மை
அறியாமலேயே அனலாய் வந்து விடுகின்றன. யாரும் ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக் கொண்டு
திட்டுவதில்லை. அந்த நேரத்துக் கோபம் நம்மை நிதானமிழக்கச் செய்து விடுகின்றன.
சின்னக் குழந்தைகள்
கூட சில நேரங்களில் டென்சனாகி விடுகிறார்கள்.
கோபத்தில்
நாம் எடுக்கும் அந்த நேரத்து முடிவுகள் நம் வாழ்வில் மிகப்பெரும் இழப்பை
ஏற்படுத்தி விடுகின்றன. கோபத்தில் பேசி விட்டு பிறகு நம்மை நாமே வருந்திக்
கொள்வதும் உண்டு. பேச்சோடு நில்லாமல் கையில் கிடப்பதை எடுத்து அடித்து விடுபவர்களும்
உண்டு. கோபம் தலைக்கேறி சில நேரத்தில் கொலையில் கூட
முடிந்து விடுவதும்
உண்டு.
ஆனால் உண்மையான
வீரன் என்பவன் சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் அல்ல. தன்னைத்தானே வீழ்த்துபவனே
வீரன் என்கிறது நபி மொழி.
ليسَ
الشَّدِيدُ بالصُّرَعَةِ، إنَّما الشَّدِيدُ الذي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ
الغَضَبِ.
நபி
ﷺ
அவர்கள் கூறினார்கள்: ‘குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன்
அல்ல; மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக்
கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்’ 9புகாரி ; 6114)
படைத்த இறைவனைப் பற்றி ஒருவன் நக்கலாக பேசினால்
இலேசாக ஈமானுள்ள எவனும் கேட்டு விட்டு சும்மா இருக்க மாட்டான். ஆனால் ஈமானுக்கே
உதாரணமான அபூபக்கர் ரலி அவர்களுக்கு எத்தனை பெரிய கோபம் வந்திருக்கும். என்றாலும்
அந்த நேரத்தில் கோபத்தை அடக்கி தான் உண்மையான வீரர் என்பதை நிரூபித்து
விட்டார்கள்.
தன்னை காயப்படுத்தும் சொற்கள் அல்லது நடத்தைகளை மற்றவரோ, தானோ செய்யும் போது கோபம் ஏற்படுகிறது. மூளையில்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமிக்டலாவின் கட்டளைப்படி, (கேட்டகாலமைன்) எனும் ரசாயனம் சுரக்கத் தொடங்குகிறது.
இந்த ரசாயனம் மூச்சின் வேகத்தை அதிகரித்துகிறது, இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கிறது, உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை வழக்கத்தை விட
அதிகமாகவும் அதிவேகத்திலும் வழங்குகிறது. இதனால் சிறிது நேரத்துக்கு அதிவேக ஆற்றல்
கிடைக்கும். அட்ரினலின், நான்-அட்ரினலின் ஹார்மோன்களும் கோபத்தின் போது
சுரந்து, ஒரு மனிதனை சண்டையிடும் நிலைக்கு
தயார்படுத்தும்.
எளியவனின்
கோபம் திட்டித்தீர்ப்பதோடு முடிந்து விடுகிறது. ஆனால் வலியவனின் கோபமோ ‘உன்னை என்ன
செய்கிறேன் பார்’ என்று பழிவாங்கப் புறப்பட்டு விடுகிறது. எனவே தான் இறைவனிடத்தில்
மிகவும் விருப்பமானவர் பட்டியலில் பழிவாங்காமல் விட்ட மனிதரும் இடம் பெறுகிறார்.
நபி(ஸல்)
அவர்கள் நவின்றார்கள்; ‘நபி மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்விடம்
கேட்டார்கள்: ‘என் அதிபதியே..! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும்
நேசத்திற்குரியவர் யார்?’ அதற்கு இறைவன் கூறினான்; ‘எவர்
பழிவாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகின்றாரோ அவரே என்னிடம்
மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.’
இறைவனை
அஞ்சி வாழும் மனிதன் எல்லாரையும் போல் அல்ல. அவனுக்கென்று சில பண்பு நலன்கள்
இருக்கின்றன. அவனுக்குக் கோபம் வந்தால் அவன் இறைவனை அஞ்சிக் கொள்வதன் மூலம்
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
ثلاثٌ مِنْ
أَخْلاقِ المؤْمِنينَ منْ إِذا غَضِبَ لم يُدْخِلْهُ غَضَبُهُ في باطِلٍ وَمَنْ
إِذا رَضِيَ لم يُخْرِجْهُ رضاه من حَقٍّ ومن إذا قَدَرَ لم يَتَعاطَ ما لَيْسَ
لَهُ
மூன்று
விஷயங்கள் இறைநம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும். 1. ஒருவனுக்குக்
கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. 2. அவன்
மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தை
விட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது. 3. அவனுக்கு
வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையல்லாத பிறருடைய
பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது.’ (தப்ரானி
; 164)
இந்த
மூன்று பண்புகளும் மிக முக்கியமானவை. இந்தப் பயிற்சியை நபிகளார் தம்
தோழர்களுக்குத் தொடந்து வழங்கி வந்திருக்கின்றார்கள். எனவே அவர்கள் கோபத்தை மென்று
விழுங்குபவர்களாக இருந்தார்கள்.
سبَّ رجلٌ أبا
هريرة، فلمَّا انتهى قال له أبو هريرة رضي الله عنه: "انتهيتَ، قال الرجل:
نعم، وإن أردتَ أن أزيدك زِدتُك، فقال أبو هريرة: يا جارية، ائتني...، فسكن
الرَّجل، وقال في نفسه: بماذا سيأمرها؟ فقال: أبو هريرة ائتني بوضوءٍ، فتوضأ أبو
هريرة وتوجَّه إلى القِبلة، فقال: اللهم إنَّ عبدك هذا سبَّني، وقال عنِّي ما لم
أعلمه من نفسي، اللهمَّ إن كان عبدك هذا صادقًا فيما قال عنِّي، اللهم فاغفر لي،
اللهم إن كان عبدك هذا كاذبًا فيما قال عنِّي، اللهم فاغفر له، فانكبَّ الرجل على
رأس أبي هريرة رضي الله عنه يُقَبِّلُها".
ஒரு
மனிதர் அபூஹுரைரா ரலி அவர்களைக் கடுமையாக திட்டினார். திட்டி முடித்து
விட்டாயா என்று கேட்டார்கள். ஆம், இன்னும் திட்ட வேண்டும் என்று சொன்னாலும் நான்
திட்டுவேன் என்று கூறினார். உடனே அபூஹுரைரா ரலி அவர்கள் தன் அடிமைப் பெண்ணை
அழைத்தார்கள். அந்த மனிதர், இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று யோசித்தார்.
அபூஹுரைரா ரலி அவர்கள் உளு செய்வதற்கு தண்ணீர் எடுத்துக் கேட்டார்கள். உளு
செய்தார்கள். இவர் என்னைப் பற்றி சொன்ன வார்த்தைகள் உண்மையாக இருந்தால் அவரை
மன்னித்து விடு. பொய்யாக இருந்தாலும் மன்னித்து விடு என்றார்கள்.
خرج يومًا
يمشي فمرَّ على رجلٍ من اليهود وكان معه كلب، فأراد الرَّجل أن يُغضب إبراهيم،
فقال الرجل لإبراهيم: يا إبراهيم، لحيتُك هذه أطهر من ذَنَب كلبي أم ذَنَبُ كلبي
أَطهر من لحيتك؟ فإذا إبراهيم يقول: إن كنتُ من أهل الجنَّة فإنَّ لحيتي أطهر من
كلبك، وإن كنتُ من أهل النَّار فذَنَب كلبك أَفْضل من لحيتي، فقال الرجل: هذه أخلاق
النبوَّة، وأنا أشهد أن لا إله إلا الله وأن محمدًا رسول الله.
இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் ஒரு மனிதரைக்
கடந்து சென்றார்கள். அவனிடம் ஒரு நாய் இருந்தது. அவர்களை வம்பிழுப்பதற்காக
இப்ராஹீமே உங்கள் தாடி சுத்தமானதா இல்லை இந்த நாயின் வால் சுத்தமானதா என்று
கேட்டார். அதற்கவர்கள் கொஞ்சமும் கோபமடையாமல் நான் சொர்க்கவாதியாக இருந்தால் என்
தாடி சுத்தமானது. நரகவாதியாக இருந்தால் உன் நாயின் வாலே சுத்தமானது என்று
கூறினார்கள். அவர்களின் அந்த பதிலைக் கேட்டு அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
عن أبي هريرة رضي الله عنه: أن رجلًا قال للنبي صلى الله عليه وسلم: أوصني، قال:
((لا تغضب))، فردد مرارًا، قال: ((لا تغضب
நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று
கேட்டார். நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். அவர் திருப்பி திருப்பி அதே கேள்வியைக்
கேட்ட போதும் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். (புகாரி ; 6116)
கோபம் என்பது மிகவும் ஆபத்தானது. இன்றைக்கு நடக்கின்ற குடும்பத்தின்
பிரச்சினைகளாக இருந்தாலும் சரி சமூகத்தின் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி
எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் கோபம். இன்றைக்கு அதிகமான தம்பதிகளுக்குள்
மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்திற்கு செல்வதற்கு அடிப்படைக் காரணம் கோபம் தான்.
எனவே தான் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.அவர்
திருப்பித் திருப்பிக் கேட்டும் நபியவர்கள் அதையே சொன்னார்கள்.
கோபம் வருகிற பொழுது அதைக் கட்டுப்படுத்துவதற்கான அதை அடக்கிக் கொள்வதற்கான
வழிமுறைகளையும் இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது.
وعن أبي حرب
بن أبي الأسود، عن أبي ذر أن رسول الله صلى الله عليه وسلم قال لنا: ((إذا غضب
أحدكم وهو قائم فليجلس، فإن ذهب عنه الغضب، وإلا فليضطجع
உங்களில் ஒருவர் நிற்கின்ற போது கோபம் ஏற்பட்டால்
உட்கார்ந்து கொள்ளட்டும். கோபம் போய் விடும். இல்லையென்றால் படுத்து விடட்டும். (அபூதாவூத் ; 4782)
கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான முதல் வழிமுறை நம்முடைய சூழ்நிலைகளை மாற்றி
அமைப்பது. அதாவது நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து விடுவது. உட்கார்ந்து
கொண்டிருந்தால் படுத்து விடுவது. சூழ்நிலை மாறுகின்ற போது நம்முடைய உணர்விலும்
மாற்றம் ஏற்படும். இடத்தைப் பொருத்து உணர்வு மாறுபடுகிறது. அந்த வகையில் நம் சூழ்நிலைகளை
மாற்றி அமைக்கின்ற பொழுது அந்த கோபம் குறைந்து விடும். மட்டுமல்ல நின்று
கொண்டிருக்கிற பொழுது கோபத்தினால் எதிர்வினைகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
அங்கே உட்கார்ந்து விட்டால் அது குறைந்து விடும். அதுவும் படுத்து விட்டால் எதிர்வினைக்கான
சந்தர்ப்பமே இல்லாமல் ஆகி விடும். அதனால் தான் இஸ்லாம் அப்படி ஒரு வழிமுறையை
நமக்கு சொல்லித் தருகிறது.
قال رسول الله
صلى الله عليه وسلم: ((إن الغضب من الشيطان، وإن الشيطان خُلق من النار، وإنما
تُطفأ النار بالماء، فإذا غضب أحدكم فليتوضَّأ))
இரண்டாவது வழிமுறை கோபம் வருபவர் ஒழு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
கோபம் என்பது ஷைத்தானின் மூலம் ஏற்படுகிறது. ஷைத்தான் கோபம் என்ற அந்த நெருப்பை
நம் உள்ளத்திலே போடுகிறான். அதனால் தான் கோபம் கொப்பளிக்கிறது. உடம்பு சூடாகி
விடுகிறது. எனவே அந்த சூட்டை அணைப்பதற்கான ஒரே வழிமுறை ஒழு செய்து கொள்வது தான்.
மூன்றாவது, கோபம் ஷைத்தானுடைய
தூண்டுதலால் ஏற்படுவதனால் ஷைத்தானை விரட்டுவதற்கான வேலையை செய்ய வேண்டும் அதன்
மூலமும் கோபம் நம்மிடம் இருந்து விலகும்.
عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صلى
الله عليه وسلم وَرَجُلاَنِ يَسْتَبَّانِ، فَأَحَدُهُمَا احْمَرَّ وَجْهُهُ
وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "
إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ، لَوْ قَالَ
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ. ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ ".
فَقَالُوا لَهُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " تَعَوَّذْ
بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ "
நபி ஸல் அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். இரு
மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம்
சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி ஸல் அவர்கள்
ஒரு வார்த்தையை நான் அறிவேன். அதை அவன் கூறினால் அவனிடம் ஏற்பட்டுள்ள கோபம் அவனை
விட்டும் போய் விடும். அதாவது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று
கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் கோபப்பட்டவரிடம் சென்று ஷைத்தானை விட்டும்
அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறியதாக சொன்னார்கள். (புகாரி ; 3282)
இது
ஒரு உளவியல் சிகிச்சை. கோபம் வந்தால் நாம் வேறு சிந்தனையில் நம்மை ஈடுபடுத்திக்
கொள்ள வேண்டும். ஒளு எனும் உடற்சுத்தி ஒரு பயிற்சி. தண்ணீரால் முகம், கை,
கால்கள், மூக்கு, காது
மடல்கள், தலை என கழுவ வேண்டும். இது கோபத்தைக் கட்டுப்
படுத்த உதவும்.
அடுத்தவர்கள்
செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப்
பெயர்தான் கோபம். கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல்,
மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது. இந்தப்பாதிப்பால்
நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன
உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது. இதைத் தடுக்க வைத்தியரிடம் சென்று மாத்திரை
மருந்து சாப்பிடுவோம். இதே
நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம். எனவே
தான் நபி ஸல் அவர்கள் கோபம் கொள்ளாதே அதுவே வெற்றிக்கான வழி என்று
குறிப்பிட்டார்கள். கோபம் வந்தாலும் அதை அடக்குவற்கான வழிமுறையைக்
கற்றுத்தந்தார்கள்.
2022 நம்பிக்கையை கை விட வேண்டாம்
2023 அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
வாஹிதிகள் பேரவை மா நபியைப் பின்பற்றுவோம்
No comments:
Post a Comment