Wednesday, March 13, 2024

இதுவே அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ  وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ‌ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ‌ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்த வற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. (அல்குர்ஆன் : 4:113)

இந்த வசனத்தில் அல்லாஹ் நபி அவர்களைப் பார்த்து உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தந்தோம் என்று கூறி விட்டு இந்த அறிவு என்பது உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை என்று கூறுகிறான்.

உலகில் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கும் அவரவர்களுக்குத் தகுதியான பாக்கியங்களை வழங்கியிருக்கிறான். சிலருக்கு குழந்தைச் செல்வம் பெரியதாக இருக்கிறதுசிலருக்கு பொருட்ச் செல்வம் பெரியதாக இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வின் பார்வையில் மிகச் சிறந்த நிஃமத் என்பது கல்வி தான்.

திருக்குர்ஆனின் அத்தியாங்களில் சூரத்துல் ளுஹா என்ற 93-வது அத்தியாயத்தில் அல்லாஹ் நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று நிஃமத்துகளை சொல்லி அதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் பின்வரும் மூன்று ஆயத்தின் மூலமாக தெரிவிக்கின்றான்.

முதலாவது நிஃமத்  ;

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டுஅப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

தன்னுடைய உயர்வான வளர்ப்பிலும் கண்கானிப்பிலும் பெருமானார் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த இறைவன் அவர்களை யதீமாகவ பிறக்க வைத்தான்.


لماذا ولد نبيك يتيما فقال الله انا له ولي وحافظ ونصير

உன்னுடைய தூதரான நபி  அவர்கள் தந்தையில்லா எதீமாக பிறந்ததன் பின்னனி என்ன என்று மலக்குகள் கேட்ட போது, நானே அவர்களை வளர்ப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும் உதவி செய்பவனாகவும் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். (அல்பிதாயா வன் நிஹாயா)

இதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டுமென்பதை

فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ

எனவேநீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். (அல்குர்ஆன் : 93 ; 9) என்ற வசனத்தில் கூறுகிறான்.

 

عن أبي هريرة رضي الله عنه أن رجلاً شكا إلى النبي صلى الله عليه وسلم قسوة قلبه فقال: "إن أردت أن يلين قلبك فأطعم المساكين وامسح رأس اليتيم

இரக்கமற்ற உள்ளமுடைய ஒருவர் நபி அவர்களிடம் தன் உள்ளத்தைப் பற்றி முறையிட்டார். நபி அவர்கள் அம்மனிதரிடம் உள்ளம் இரக்கம் கொண்டதாக மாற ஏழைகளுக்கு உணவளிக்குமாறும் அநாதைக் குழந்தைகளின் தலையை தடவுமாறும் ஏவினார்கள். (அஹ்மத் ; 7576)

 

இரண்டாவது நிஃமத் ;

وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ

மேலும்அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

யதீமாக இருந்தாலும் அல்லாஹ் அபூதாலிப் அவர்களின் மூலமாக நபி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வான். பின்பு கதீஜா அம்மையார் மூலமாக செல்வத்தை வழங்கினான். பின்பு அபூபக்கர் ரலி அவர்களின் மூலமாக செல்வத்தை வழங்கினான். ஹிஜ்ரத்திற்குப் பிறகு அன்ஸாரிகளின் மூலம் செல்வத்தை வழங்கினான். அதற்குப் பிறகு போர்க்களத்தில் கனீமத்தின் மூலம் வழங்கினான். குறிப்பாக கைபர் யுத்தத்தின் மூலம் நபியவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் பெரும் செல்வ வழங்கினான் அளித்தான்.

அல்லாஹ் கொடுத்த செல்வத்திற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை

 وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ

யாசிப்போரை விரட்டாதீர்” என்ற வசனத்தின் வழியே உணர்த்துகிறான்.

மூன்றாவது நிஃமத் ;

وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ

இன்னும்நபித்துவத்தின் ஞானம் இல்லாமல் இருந்த உங்களுக்கு நபித்துவத்தை வழங்கி அதன் ஞானத்தை அவன் அறிவித்தான். (அல்குர்ஆன் : 93 ;7)

ووجدك ضالا فهدي

الْمُرَادَ بِهَذَا أَنَّهُ، عَلَيْهِ السَّلَامُ، ضَلَّ فِي شِعَابِ مَكَّةَ وَهُوَ صَغِيرٌ، ثُمَّ رَجَعَ

وَقِيلَ: إِنَّهُ ضَلَّ وَهُوَ مَعَ عَمِّهِ فِي طَرِيقِ الشَّامِ، وَكَانَ رَاكِبًا نَاقَةً فِي اللَّيْلِ، فَجَاءَ إِبْلِيسُ يَعْدِلُ بِهَا عَنِ الطَّرِيقِ،

இந்த வசனத்திற்கு இரண்டு வகை பொருள் தரப்படுகிறது.

1.       பயணத்தில் பாதை மாறி சென்று விட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பாதையைக் காட்டினான்.

அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்த போது மக்காவில் அவ்வாறு நடந்தது. இன்னொரு கருத்தின் படி அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுடன் சிரியாவிற்கு சென்ற நேரத்தில் அங்கு நடந்தது.

 

2.       அல்லாஹ் அவர்களுக்கு நுபுவ்வத்தை வழங்கி, வேதத்தைக் கொடுத்து எல்லா கல்வி ஞானங்களையும் வழங்கினான்.

وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا‌  مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰـكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِىْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا‌  وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ‏

(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன் : 42:52)

இந்த வசனத்தில் நீங்கள் வேதம் என்றால் என்ன ? ஈமான் என்றால் என்ன? என்று அறியாமல் இருந்தீர்கள். நாம் உங்களுக்கு குர்ஆனைக் கொடுத்து அதன் மூலம் அனைத்தையும் தெளிவுபடுத்தினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆனின் மூலம் முக்காலத்தின் அறிவையும் அல்லாஹ் கொடுத்தான்

عن الحارث، قال: دخلت المسجد، فإذا أناس يخوضون في أحاديث، فدخلت على علي، فقلت: ألا ترى أن أناسا يخوضون في الأحاديث في المسجد؟ فقال: قد فعلوها؟ قلت: نعم، قال: أما إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ستكون فتن قلت: وما المخرج منها؟ قال: " كتاب الله، كتاب الله فيه نبأ ما قبلكم، وخبر ما بعدكم، وحكم ما بينكم

ஹாரிஸ் ரஹ் அவர்கள் அலி ரலி அவர்களிடம் வந்து மக்களில் சிலர் மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு ஹதீஸைக் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.அப்படியா செய்கிறார்கள் என்று கேட்டு மஸ்ஜிதுக்கு வந்த அலி ரலி அவர்கள் சொன்னார்கள் ; வரும் காலத்தில் குழப்பங்கள் தோன்றும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள். அதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு, ஏனெனில் அதில் உங்களுக்கு முன் சென்ற காலத்தின் செய்திகளும் உங்களுக்குப் பின்னால் நடக்கயிருக்கும் செய்திகளும் உங்களுக்கிடையில் நடக்கும் விவகாரங்களுக்கான தீர்வும் இருக்கிறது என்றார்கள்.

நபிப் பட்டம் பெறுவதற்கு முன்னால் நபியவர்களுக்கு நுபுவ்வத்தின் ஞானம் இல்லாமலிருந்தது. நபித்துவம் பெற்றதற்கு பிறகு ஞானம் கிடைத்தது.

இதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை ;

 وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

மேலும்உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அல்குர்ஆன் : 93 ; 11) என்ற வசனத்தின் வழியே உணர்த்துகிறான்.

இந்த மூன்று விஷயங்களில் முதல் இரண்டு நிஃமத்துகளை அல்லாஹ் கூறிப்பிடும் போது, அதை நிஃமத் என்று குறிப்பிட வில்லை.ஆனால் நபித்துவத்தின் ஞானத்தைப் பற்றி கூறும் போது அல்லாஹ் அதை நிஃமத் என்பதாக குறிப்பிடுகிறான்.எனவே கல்வி ஞானம் வழங்கப்படுவதைத்தான் அல்லாஹ் நிஃமத்தாக கருதுகிறான் என்பது புரிகிறது.

குர்ஆனில் அல்லாஹ் நபி ஸல் அவர்களிடம் அதிகமாக கேட்கும் படி சொன்னது கல்வியைத் தான்.

قل رب زدني علما

இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து என்று சொல்லுங்கள்.

ஒருவருக்கு பணம் பதவி அந்தஸ்து ஆட்சி அதிகாரம் குழந்தைகள் என எல்லாம் இருக்கிறது. ஆனால் கல்வி இல்லை. இன்னொருவருக்கு எதுவும் இல்லை. ஆனால் கல்வி இருக்கிறது. இதில் 2 வது நபரே சிறந்தவர். எனவே கல்வி தான் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த அல்லாஹ்வின் வெகுமதி.

وروي عن مصعب بن الزبير قال لابنه: "يا بني! تعلم العلم فإنه إن يك لك مال كان لك العلم جمالاَ، وإن لم يكن لك مال كان لك العلم مالا"،

முஸ்அப் பின் ஜுபைர் ரஹ் அவர்கள் தன் மகனாருக்கு சொன்னார்கள் ; எனதருமை மகனே! நீ கல்வியைக் கற்றுக் கொள். உனக்கு செல்வம் இருந்தால் அந்த கல்வி உனக்கு அழகு சேர்க்கும். உனக்கு செல்வம் இல்லையென்றால் அந்த கல்வியே பெரும் சொத்தாக மாறும்.

கல்வியை பற்றி இஸ்லாம் உயர்த்திப் பேசியளவுக்கு வேறு எந்த மதமும் பேசியதில்லை. வணக்கவழிபாடுகளை விட கல்வியே உயர்த்தது என இஸ்லாம் கூறுகிறது.

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكَ إِذَا تَعَلَّمْتَ بَابًا مِنَ الْعِلْمِ كَانَ خَيْرًا لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ تَطَوُّعًا مُتَقَبَّلَةٍ، وَإِذَا عَلَّمْتَ النَّاسَ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ بِهِ فَهُوَ خَيْرٌ لَكَ مِنْ أَلْفِ رَكْعَةٍ تُصَلِّيهَا تَطَوُّعًا مُتَقَبَّلَةٍ

கல்வியில் ஒரு பாடத்தை நீ கற்றுக்கொண்டால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயிரம் ரக்கஅத் நஃபில் தொழுவதை விட சிறப்பானது.அவ்வாறு நீ கற்றதை பிறருக்கு கற்றுக்கொடுத்தால் அதுவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயிரம் ரக்கஅத் நஃபில் தொழுவதை விட சிறப்பானது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.  (தர்கீப்)

கல்வி என்பது மனிதன் எந்த நிலையில் இருக்கிறானோ அந்த நிலையிலிருந்து அவனை அடுத்த நிலைக்கு உயர்வுபடுத்தும்.

قال الخليفة الأموي عبدالملك بن مروان يوصي بنيه

يَا بَنِيَّ تعلّموا العلم فإن كُنتم سادة فُقتُم،

وَإِن كُنْتُم وَسَطًا سُدْتُمْ،

وَإِنْ كُنْتُمْ سُوقَةً عِشْتُمْ

உமைய்யா ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வான் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறினார்: எனதருமைப் புதல்வர்களே! கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்,

நீங்கள் தலைவர்களாயிருந்தால் உயர்வடைவீர்கள்,

நடுத்தர வர்க்கத்தினராக இருந்தால் தலைவர்களாவீர்கள்,

குடிமக்களாக இருந்தால் பிழைத்துக் கொள்வீர்கள்."

 

கல்வி மற்றும் கல்வியாளர்களின் மரியாதை

قدم هارون الرّشيد المدينة، وكان قد بلغه أن مالك بن أنس عنده «الموطأ» يقرؤه على النّاس، فوجّه إليه البرمكيّ فقال: أقرئه السلام وقل له: يحمل إليّ الكتاب ويقرؤه عليّ، فأتاه البرمكيّ فقال: أقرئه السلام، وقل له: إن العلم يؤتى ولا يأتي، فأتاه البرمكيّ فأخبره، وكان عنده أبو يوسف القاضي، فقال: يا أمير المؤمنين، يبلغ أهل العراق أنك وجّهت إلى مالك في أمر فخالفك، اعزم عليه، فبينما هو كذلك، إذ دخل مالك، فسلّم وجلس، فقال له الرّشيد: يا ابن أبي عامر أبعث إليك وتخالفني؟ فقال: يا أمير المؤمنين، أخبرني الزّهري، عن خارجة بن زيد، عن أبيه قال: كنت أكتب الوحي بين يدي رسول الله- صلى الله عليه وسلّم- لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِينَ 4: 95 [النساء: 95] وابن أمّ مكتوم عند النّبيّ- صلّى الله عليه وسلّم- فقال: يا رسول الله انى رجل ضرير، وقد انزل الله عليك فى فضل الجهاد ما قد علمت، فقال النبي صلى الله عليه وآله وسلم: «لا ادرى» وقلمي رطب ما جف، ثم وقع فخذ النبي صلى الله عليه وآله وسلم على فخذي، ثم أغمي على النبي صلى الله عليه وآله وسلم ثم جلس النبي صلى الله عليه وآله وسلم فقال يا زيد اكتب غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء:

ويا أمير المؤمنين حرف واحد بعث فيه جبريل والملائكة- عليهم السلام- من مسيرة خمسين ألف عام، ألا ينبغي لي أن أعزّه وأجلّه، وإن الله تعالى رفعك وجعلك في هذا الموضع بعملك، فلا تكن أنت أول من يضيع عزّ العلم فيضيع الله عزّك، فقام الرّشيد يمشي مع مالك إلى منزله ليسمع منه «الموطأ

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் 92 ஆண்டு கால பரிசுத்தமான வாழ்வுக்கு சொந்தக்காரர். ரவ்லாவில் 70 ஆண்டுகள் தீன்கல்வி போதித்தவர்.14 இஸ்லாமிய கலீபாக்கள் காலத்தில் வாழ்ந்த மாமேதை. குறிப்பாக மாமன்னர் ஹாரூன் ரஷீத் காலத்தில் வாழ்கிறார்.

ஒரு தடவை மன்னர் ஹாரூன் ரஷீத் மதீனா வருகிறார்.வந்த இடத்தில் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் முஅத்தா எனும் ஒரு அற்புதமான ஹதீஸ் நூல் ஒன்றை தொகுத்து,அதை அவர்களே மக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் எனவும் கேள்விப்பட்டார்கள். தன் பணியாள் பர்முகியை அனுப்பி, இமாம் அவர்களுக்கு ஸலாம் கூறி தாங்கள் இராக் வந்து அரசருக்கு அந்த ஹதீஸ் நூலை கற்றுத்தர வேண்டும் என்பது அரசரின் வேண்டுகோள் என்று சொல்லியனுப்பினார்கள்.

அதற்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள், மன்னருக்கு என் ஸலாமை சொல்லுங்கள். மேலும் கல்வியை நீங்கள் தேடி வர வேண்டும்.அது உங்களைத் தேடி வராது என்பதையும் தெரிவித்து விடுங்கள் என்று தைரியமாக சொல்லி அனுப்பினார்கள்.

அப்போது அந்த சபையில் இருந்த அபூயூஸுப் காழி அவர்கள் மன்னர் அவர்களே! இமாம் மாலிகிடம் நீங்கள் வேண்டியதையும்,இமாம் அவர்கள் உங்களுக்கு அனுப்பிய பதிலையும் இராக்வாசிகள் கேள்விப்பட்டால் சரியாக இருக்காது.எனவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொன்ன போது- அச்சபைக்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள் வருகை தருகிறார்கள்.

அப்போது இமாம் அவர்களை நோக்கி மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள், என் உத்தரவுக்கு நீங்கள் ஏன் மாறு செய்தீர்? என வினவிய போது மாலிக் ரஹ் கூறினார்கள் ;  நபித்தோழர் ஜைத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நான் நபி ஸல் அவர்களிடம் வஹி எழுதிக் கொண்டிருந்தேன்.அப்போது

- لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِينَ:

இந்த தீனுக்காக போரில் கலந்து கொள்பவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் நன்மையில் சமமாகி விடமாட்டார்கள்) என்ற அந்நிஸா அத்தியாயத்தின் 95 வது வசனம் இறங்கியது.அந்நேரம் பார்வை தெரியாத ஸஹாபியான இப்னு உம்மு மக்தூம் ரலி அங்கிருந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பார்வை தெரியாதவன்.என் போன்றோரின் நிலை என்ன என வினவினார். அதற்கு பூமான் நபி ஸல் அவர்கள் பணிவாக அது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இறைச்செய்தியை என் பேனா எழுதி முடித்து விட்டது என்று கூறினார்கள்.சிரிது நேரத்தில் நபி ஸல் அவர்கள் மயக்க நிலைக்கு சென்று விட்டார்கள்.அதாவது வஹி வருகிறது.என்னை அழைத்து 

غَيْرُ أُولِي الضَّرَرِ

(நோயாளிகளை தவிர) என்ற ஒரு எழுத்தை அதில் சேர்த்து எழுதச் சொன்னார்கள். 

அமீருல் முஃமினீன் அவர்களே! ஒரு எழுத்துக்காக அதன் கண்ணியம் கருதி ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை,மற்றும் பல வானவர்களையும் 500 ஆண்டின் தொலைவிலிருந்து அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

அப்படிப்பட்ட அல்லாஹ்வின் கல்விக்கு நான் மரியாதை செய்ய வேண்டாமா?   அல்லாஹ் உங்களின் உயர்வான செயலால் உங்களை இந்நிலையில் வைத்துள்ளான்.கல்வியின் கண்ணியத்தைக் கெடுத்தால் அல்லாஹ் உங்களின் கண்ணியத்தை கெடுத்து இந்த இடத்தை விட்டும்  இறக்கி விடுவான் என்றார்கள்.அதைக்கேட்ட இமாம் அவர்களின் இல்லம் தேடி வந்து முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மாமன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் கற்றதாக வரலாறு.

கடந்து செல்லும் மேகத்தை பார்த்து, நீ எங்கு மழையை சுமந்துகொண்டு கொட்டினாலும் அது என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவே இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு விசாலமான ஆட்சியை பெற்ற மன்னர் ஹாரூன் ரஷீத் அத்தகைய ஆட்சியை பெற கல்வியின் மீது அவருக்கு இருந்த மரியாதயே காரணம் என்பதை நாம் விளங்க வேண்டும்.

எனவே கல்வியையும் கல்வியாளர்களையும் மதிப்போம்.

2022 மரண சிந்தனை

2023 இஸ்லாம் கூறும் வாரிசுரிமைச் சட்டம்

வாஹிதிகள் பேரவை அமானிதம்

No comments:

Post a Comment