Wednesday, March 20, 2024

பொறாமைத் தீ



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ ‌ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ‏

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (அல்குர்ஆன் : 12:3)

لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ‌ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)

குர்ஆனில் அழகிய வரலாறு என்று அல்லாஹ்வே குறிப்பிடுகின்ற யூசுஃப் அலை அவர்களின் சிறு பிராயம் முதல் மரணம் வரை அவர்களின் முழு வரலாறையும் சுமந்திருக்கிற யூசுஃப் என்ற அத்தியாயம் ஓதப்பட்டது.

وَسُميّت أحسن القصص؟ لأنه ليس في القرآن قصةٌ تتضمن من العبر والحكم والنكت ما تتضمن هذه القصة، وقيل: لامتداد الأوقات بين مبتدئها ومنتهاها، وقيل: لحسن محاورة يوسفَ وإخوتهِ، وصبرِه على أذاهم، وإِغْضَائِهِ عن ذكر ما تعاطوه عند اللقاء، وكرمِه في العفو.

وقيل: لأن فيها ذكرَ الأنبياء والصالحين، والملائكةِ والشياطين، والإنسِ والجن، والأنعامِ والطير، وسِيرِ الملوكِ والمماليك، والتجار، والعلماءِ والجهال، والرجالِ، والنساءِ ومكرِهن وحِيَلِهن، وفيها أيضًا ذكرُ التوحيدِ والفقهِ والسِّيَر، وتعبيرِ الرؤيا والسياسة، والمعاشرةِ وتدبيرِ المعاش، فصارت أحسنَ القصص؛ لما فيها من المعاني والفوائد التي تصلح للدين والدنيا.

அழகிய வரலாறு என்று கூறப்பட்டதற்கான காரணங்கள்

1, இந்த வரலாற்றில் இருப்பதைப் போன்று படிப்பினைகளும் பாடங்களும் வரலாற்று துணுக்குகளும் குர்ஆனில் கூறப்பட்டிருக்கிற வேறு எந்த வரலாற்றிலும் இல்லை.

2,  அவர்களின் வாழ்வின் தொடக்கம் முதல் மரணம் வரை முழுமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

3,  யூசுப் நபி அவர்களின் பொறுமை, அவர்களின் மன்னிக்கும் குணம், அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தூரநோக்கு சிந்தனையுடன் கூடிய அழகிய ஆட்சி முறை, இப்படி அவர்களின் குணங்களால் அது அழகிய வரலாறு.

4, அவர்களின் வரலாற்றைக் கூறுகின்ற இந்த அத்தியாயத்தில் நபிமார்கள், நல்லோர்கள், வானவர்கள், ஷைத்தான்கள், மனித இனம், ஜின் இனம், மிருகங்கள், பறவைகள், அரசர்கள், வியாபாரிகள், மார்க்க அறிஞர்கள், மடையர்கள், ஆண்கள், பெண்கள், அவர்களின் சூழ்ச்சிகள், ஓரிறைக் கொள்கை, மார்க்க விளக்கங்கள், வரலாறுகள், கனவு மற்றும் அதனுடைய தாத்பரியங்கள், ஆட்சி முறைகள், வாழ்வியல் ஒழுங்குகள், என ஈருலகத்தின் ஒட்டுமொத்த விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. எனவே அது அழகிய வரலாறு.

5, மனிதர்களிலேயே மிகவும் சங்கையானவர் என்று யூசுஃப் நபி அலை அவர்கள் குறித்து நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். காரணம் அவர்கள் ஒரு நபி.அவர்களின் தந்தை யஃகூப் அலை அவர்கள் ஒரு நபி. அவர்களின் தந்தை இஸ்ஹாக் அலை அவர்கள் ஒரு நபி. அவர்களின் தந்தை இப்ராஹீம் அலை அவர்கள் ஒரு நபி.

سُئِلَ رَسولُ اللَّهِ صَلّى اللهُ عليه وسلَّمَ أيُّ النّاسِ أكْرَمُ؟ قالَ: أكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أتْقاهُمْ قالوا: ليسَ عن هذا نَسْأَلُكَ قالَ: فأكْرَمُ النّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ، قالوا: ليسَ عن هذا نَسْأَلُكَ، قالَ: فَعَنْ معادِنِ العَرَبِ تَسْأَلُونِي قالوا: نَعَمْ، قالَ: فَخِيارُكُمْ في الجاهِلِيَّةِ خِيارُكُمْ في الإسْلامِ إذا فقِهُوا.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள் ‘நாங்கள் தங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் சுரங்கங்கள் (எனப்படும் அரபுகளின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள். புகாரி 4689)

யூசுஃப் சூரா சிறு பிராயத்தில் அவர்கள் கண்ட கனவிலிருந்து தொடங்குகிறது. அந்த ஒரு செய்தியை மட்டும் இன்றைக்கு நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

யூசுஃப் அலை அவர்கள் தன் சிறு பிராயத்தில் கனவு கண்டதாக சொன்ன போது அதை வெளியே சொல்லாமல் மறைத்து விடு என்று அவர்களின் தந்தை அறிவுறுத்தினார்கள்.

قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا  اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏

“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 12:5)

பொதுவாக கனவுகள் என்பது மறைக்கப்பட வேண்டும்.

سَمِعْتُ أبا سَلَمَةَ يقولُ: لقَدْ كُنْتُ أرى الرُّؤْيا فَتُمْرِضُنِي، حتّى سَمِعْتُ أبا قَتادَةَ يقولُ: وأَنا كُنْتُ لَأَرى الرُّؤْيا تُمْرِضُنِي، حتّى سَمِعْتُ النَّبيَّ ﷺ يقولُ: الرُّؤْيا الحَسَنَةُ مِنَ اللَّهِ، فَإِذا رَأى أحَدُكُمْ ما يُحِبُّ فلا يُحَدِّثْ به إلّا مَن يُحِبُّ، وإذا رَأى ما يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ باللَّهِ مِن شَرِّها، ومِنْ شَرِّ الشَّيْطانِ، ولْيَتْفِلْ ثَلاثًا، ولا يُحَدِّثْ بها أحَدًا؛ فإنَّها لَنْ تَضُرَّهُ.

அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், ‘நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம்.

மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது’ என்று கூறியதைக் கேட்டேன். (புகாரி ; 7044)

رُؤيا المؤمنِ جزءٌ مِن ستَّةٍ وأربعينَ جزءًا مِن النُّبوَّةِ والرُّؤيا على رِجْلِ طائرٍ ما لَمْ يُعبَرْ عليه فإذا عُبِرَتْ وقَعَتْ ) قال : وأحسَبُه قال : ( لا يقُصُّها إلَّا على وادٍّ أو ذي رأيٍ

ஒரு முஃமினின் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு அங்கங்களில் ஒரு அங்கமாகும். ஒரு கனவிற்கு விளக்கம் சொல்லப்படாத வரை அது பறவையின் காலின் மீது இருக்கும். விளக்கம் சொல்லப்பட்டு விட்டால் அது நிகழ்ந்து விடும்.கனவைக் கண்டவர் அதை பிரியத்திற்குரியவர் அல்லது விளக்கமுடையவரைத் தவிர சொல்ல வேண்டாம். இப்னு (ஹிப்பான் ; 6050)

قال النووي: قوله صلى الله عليه وسلم في الرؤية المكروهة: ولا يحدث بها أحدا فسببه أنه ربما فسره تفسيرا مكروها على ظاهر صورتها، وكان ذلك محتملا فوقعت بتقدير الله تعالى

விருப்பமில்லாததைக் கண்டால் அதை சொல்லக்கூடாது என்று சொல்லப்பட்டதற்குக் காரணம் ; அந்த கனவிற்கான நேரடியான பொருளை அதாவது விரும்பாத ஒரு செய்தியை விளக்கமாக சொல்லி விட்டால் அது கண்டவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். அப்படியே நடந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். அந்த எண்ணத்தினால் சமயத்தில் அது நடந்து விடும் என அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு முக்கியமான காரணம் அதில் நல்ல செய்தி எதுவும் இருந்தால் அதைக் கேட்டு பிடிக்காதவர்களுக்கு பொறாமையும் அதன் மூலம் சில எதிர் பாராத ஆபத்துக்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. யூசுஃப் அலை அவர்களிடம் கனவை அவர்களின் தந்தை மறைக்கச் சொன்னதற்கான காரணம் அது தான்.

 

பொறாமையின் விளைவுகள்

داء الحسد أول جريمة وقعت في السماء، حسد إبليس آدم عليه السلام لسجود الملائكة له بدلًا عنه، وأوَّل جريمة كانت في الأرض بسبب الحسد؛ حيث قتل قابيل أخاه هابيل، والحسد تمنِّي زوال النعمة من الآخرين، وقد يصل الحسد بالبعض إلى السعي لزوال النعمة بشتى الوسائل من (قتل، أو إفساد، أو تفريق بين متاحبين، أو بعمل سحر، أو نميمة، أو تشويه سمعة وغيرها)، وقد قيل: ما خلا جسد من حسد، ولكن الكريم يُخفيه، واللئيم يُبديه، فالمؤمن قد يقع في قلبه حسد للآخرين، ولكن خوفه من الله يمنعه من ذلك،

வானலோகத்தில் ஏற்பட்ட முதல் குற்றத்திற்குக் காரணம் பொறாமை தான். ஆதம் அலை அவர்களுக்கு மலக்குமார்களை ஸுஜூது செய்யும்படி அல்லாஹ் சொன்ன போது தனக்கு கிடைக்காத ஒரு அந்தஸ்து உயர்வும் ஆதம் நபிக்கு கிடைத்து விட்டது என்று அவர்கள் மீது இப்லீஸ் பொறாமை கொண்டான். அதுவே அவனை சுஜூது செய்ய விடாமல் தடுத்தது. பூமியிலும் முதல் குற்றமும் பொறாமையினால் தான் ஏற்பட்டது. தனக்கு விருப்பமான ஒரு பெண் தனக்கு கிடைக்க வில்லை என்பதால் தன் சகோதரன் மீது பொறாமை கொண்டு காபில் ஹாபிலை கொலை செய்தான்.

பிறரிடம் இருக்கக்கூடிய ஒரு நிஃமத் நீங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு பெயர் தான் பொறாமை. அது சமயங்களில் சில வன்முறை சம்பவங்களுக்கும் இட்டுச் சென்று விடும். அதற்கு உதாரணம் தான் காபிலுடைய வரலாறு.

சில மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் ;

எந்த மனிதனும் பொறாமையிலிருந்து நீங்கி இருக்க முடியாது. நல்லவன் அதை தனக்குள் மறைத்துக் கொள்வான். கெட்டவன் அதை வெளிப்படுத்தி விடுவான். ஒரு முஃமினிடத்திலும் பொறாமை என்பது ஏற்படும். ஆனால் இறைவனுடைய அச்சத்தினால் அதன் மூலம் விளைவுகள் ஏற்படாமல் அவன் தன்னை பாதுகாத்துக் கொள்வான்.

 

அபூஜஹ்ல் ஈமான் கொள்வதற்கு தடையாக இருந்த பொறாமை உணர்வு

إذ قال: "يا خالي، هل كنتم تتهمون محمدا بالكذب قبل أن يقول ما قال؟ فقال: يابن أختي، والله! لقد كان محمد -صلى الله عليه وسلم- فينا وهو شاب يدعى الأمين، فما جربنا عليه كذبا قط. قال: يا خال، فما لكم لا تتبعونه؟ قال: يابن أختي، تنازعنا نحن وبنو هاشم الشرف، فأطعموا وأطعمنا، وسقوا وسقينا، وأجاروا وأجرنا، حتى إذا تجاثينا(1) على الركب كنا كفرسي رهان(2)، قالوا: منا نبي. فمتى ندرك مثل هذه؟!

 

அபூஜஹ்லிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்காவது எப்பொழுதாவது பொய் புகன்றார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கவன் சிறு வயது முதலே "முஹம்மதை நான் நன்கு அறிவேன். அவர் ஒருபொழுதும் நேர்மை பிறழ்ந்து நடக்க வில்லை. நெறி தவறி பொய் சொன்னதில்லை. எப்பொழுதும் பொய் சொல்லாத மெய் நபி (ஸல்) அவர்கள் இப்பொழுது எப்படி தன்னை இறைவனின் தூதர் என்று பொய் சொல்வார்கள்? என்று கேட்கப்பட்டது. இப்பொழுதும் அவர் பொய் பேசவில்லை. அவர் தன்னை இறைதூதர் என்று இயம்புவதும் பொய்யில்லை. முற்றிலும் அவர் உண்மையானவர். உண்மையை உணர்ந்த நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்ளாது போனதற்கு காரணம் என்ன? அதற்கவன், எங்கள் குடும்பத்திற்கும் முஹம்மதின் பனூஹாசிம் குடும்பத்திற்கும் போட்டி பொறாமை தொடர்ந்து நிலவுகிறது. அவர்கள் ஒரு நல்லதை செய்தால் அவர்களுக்குப் போட்டியாக நாங்களும் நல்லது செய்வோம். அவர்களை விட நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற போட்டி பொறாமை எங்களிடம் உண்டு. அப்படிப்பட்ட நாங்கள் தாழ்ந்து போகும் அளவில் ஹாஷிம் குடும்பத்திலிருந்து முஹம்மது இறைத்தூதராக வந்ததை எங்களால் பொறுத்து கொள்ள முடியாது என்று கூறினான்.

அபூஜஹ்லும் அவனைப் பின்பற்றியோரும் அழிய இந்த பொறாமையே காரணம்.

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (அல்குர்ஆன் : 4:54)

 

யூதர்களுக்கும் பெருமானார் மீது பொறாமை இருந்தது.

جاء في تفسير القرطبي في قوله تعالى: (أم يحسدون الناس على ماآتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما). قال في قوله (أم يحسدون......) قال هم اليهود والناس يعني النبي صلى الله عليه وسلم.

இந்த வசனத்தில் பொறாமை கொண்டவர்கள் யூதர்கள். அவர்கள் பெருமானார் அவர்கள் மீது பொறாமை கொண்டார்கள். எனவே தான் அவர்கள் குர்ஆனை ஏற்க மறுத்தார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)

وعن إبن عباس ومجاهد وغيرهما قالوا (حسدوا محمد صلى الله عليه وسلم على النبوة وحسدوا أصحابه على الإيمان به ولا زالت آثار حسدهم تظهر يوما بعد يوم).

நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய நபித்துவத்தின் மீது அவர்கள் பொறாமை கொண்டார்கள். அவர்களைப் பின்பற்றி அவர்களின் தோழர்களாக இருப்பதால் நபித்தோழர்களின் மீதும் அவர்களுக்கு பொறாமை இருந்தது. அந்த பொறாமை ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

உஸ்மான் ரலி அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதற்கு காரணம் பொறாமை

لقد قُتل عثمان رضي الله عنه حسدا،، قال أبو قتادة ما قتلوا عثمان الاحسدا أي حسدوه على الخلافة فأحبوا أن يزيلوها عنه.

உஸ்மான் ரலி அவர்களை கயவர்கள் கொல்வதற்கு அவர்களுடைய கிலாஃபத்தின் மீது அவர்களுக்கு இருந்த பொறாமையே காரணம் என அபூகதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

பொறாமையினால் ஏற்பட்ட அழிவு

ومما يروى عن الحسد والحاسدين قال ابن عبد الله: (كان رجل يخشى بعض الملوك فيقوم بحذاء الملك ويقول: أحسن الى المحسن باحسانه فإن المسئ سيكفيه إساءته.كان يردد هذا دائما حين يعمل على حذاء الملك، فحسده رجل على ذلك المقام والكلام فسعى به الى الملك وقال: ان هذا الذي يقوم بحذائك ويقول ما يقول زعم ان الملك تخرج من فمه رائحة كريهة، فقال له الملك: وكيف يصح ذلك عندي، كيف اثبت عليه ذلك عندي؟ قال: فادعوه اليكَ. فإنه إذا دنا منكَ وضع يده على أنفه لئلا يشم رائحة البخط ـ الرائحة الكريهةـ فقال الملك: انصرف حتي أنظر.فخرج الرجل من عند الملك ودعا ذلك الرجل الذي يقوم بحذاء الملك، فدعاه الى منزله فأطعمه طعاما فيه ثوم فخرج الرجل من عنده وقام بحذاء الملك فقال كعادته أحسن الى المحسن باحسانه فإن المسئ سيكفيه إساءته فقال له الملك ادن مني، فدنا منه ووضع يده على فيه مخافة أن يشم الملك منه رائحة الثوم، فقال الملك في نفسه ما أرى فلانا الا صدق، قال وكان الملك لا يكتب بخطه الا بجائزة أو صلة، فكتب الرجل كتابا بخطه الى عامل من عماله كتب فيه، إذا اتاك حامل الرسالة هذه فاذبحه واسلكه واحش جلده تبنا وابعث به اليَّ، فأخذ الرجل الكتاب وخرج وهو لا يدري ما الذي كتب في الكتاب فلقيه الرجل الذي سعى به واطعمه الثوم، فقال ماهذا الكتاب، قال خطَّا الملك لي صلةً، فقال الحاسد هبه لي فقال له: هو لك، فأخذه ومضى به الى العامل، وقال العامل له: أتدري ماذا في الكتاب؟ قال: هبه لي. قال في الكتاب اني اذبحك وأسلخك، فقال ان الكتاب ليس لي، بل هو لفلان أعطاه اياه وانا اخذته منه، فالله الله في امري حتى تراجع الملك.قال العامل: ليس لكتاب الملك مراجعة. فذبحه وسلخه وملأ جلده تبناً وبعث به الى الملك.ثم عاد الرجل كعادته الى الملك وقال مثل قوله: أحسن الى المحسن باحسانه فإن المسئ سيكفيه إساءته، فعجب الملك وقال: مافعل الكتاب؟ قال: لقيني فلان فاستوهبه مني فوهبته.قال له الملك: إنه ذكر لي انك تزعم أني صاحب رائحة كريهة قال: ما قلت ذلك.قال له الملك: اذا لماذا وضعت يدك على فيك حين دنوت مني.قال: لانه اطعمني طعاما فيه ثوم فكرهت ان تشمه.قال: صدقت.ارجع الى مكانك، فقد كفا المسئ إساءته (ولا يحيق المكر السئ الا بأهله) فاطر

அரசர் ஒருவருக்கு அவருடைய பணியாளர்களில் ஒருவர் மிக நெருக்கமாக இருந்தார். அது அரசபையில் இருந்த இன்னொருவருக்கு அவர் மீது பொறாமையை ஏற்படுத்தியது. அரசருடனான அந்த நெருக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்றெண்ணி அவர் ஒரு திட்டம் தீட்டினார். அவர் சென்ற பிறகு அரசரிடத்தில் சென்று அவரை உங்களுக்கு அருகில் நீங்கள் வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் அவர் உங்கள் மீது கெட்ட எண்ணம் கொண்டிருக்கிறார். உங்கள் வாயிலிருந்து துர்வாடை வீசுவதாக அவர் கருதுகிறார். சொல்லிக் கொண்டிருக்கிறார். வேண்டுமென்றால் நாளை அவர் வரும் போது உங்களுக்கு அருகில் வரச் சொல்லுங்கள். அவர் தன் கையை தன் மூக்கின் மீது வைத்து மறைத்துக் கொள்வார் என்று அரசரிடத்தில் சொன்னார். சரி பார்க்கலாம் என்று அரசன் கூறி விட்டான். மறுநாள் காலை அந்த மனிதரை இவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து பூண்டை சமைத்துக் கொடுத்து அவருக்கு உணவு பரிமாறினார். பூண்டு சாப்பிட்டால் வாயில் இருந்து துர்வாடை வீசும். உணவு சாப்பிட்டு விட்டு அரசவைக்கு சென்றார். அரசர் அவரை பரிசோதிப்பதற்கு அவரை தன் அருகில் வரச் சொன்னார். ஆனால் தன் வாயிலிருந்து அந்த பூண்டின் வாடை அரசருக்கு இடையூறை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தன் வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டார். அதைப் பார்த்த அரசர் அவர் சொன்னது சரி தான் என்று விளங்கிக் கொண்டு, அவர் மீது கோபம் கொண்டு அவருக்கு தண்டனை கொடுக்க எண்ணி, அவரிடத்திலே ஒரு கடிதத்தை கொடுத்து இந்த கடிதத்தை இன்ன அதிகாரியிடத்தில் கொண்டு போய் ஒப்படைத்து விடு என்று அனுப்பினார். அந்த கடிதத்தில், இதைக் கொண்டு வருபவரைக் கொலை செய்து அவரின் தோலை உரித்து அதை அரசருக்கு அனுப்ப வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். இடையில் அவரின் மீது பொறாமை கொண்ட அந்த மனிதர் வழியை மறித்து கையில் என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்டார். அரசர் இந்த கடிதத்தைக் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார் என்று சொன்ன போது, இல்லை அதை என்னிடத்தில் கொடுத்து விடு. நான் போய் கொடுக்கிறேன் என்று அதன் மூலம் பரிசுகள் கிடைக்கும் என்று கருதி அந்தக் கடிதத்தை அவர் எடுத்து சென்றார். கடிதத்தை பெற்றுக் கொண்ட அந்த அதிகாரி இதில் என்ன இருக்கிறது என்று உனக்கு தெரியுமா என்று கேட்டார். இதில் உன்னைக் கொன்று உன் தோலை உரிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்ன போது அவர் அதிர்ச்சியடைந்து இந்தக் கடிதத்தை என்னிடத்தில் அரசர் தர வில்லை வேறொரு நபரிடத்தில் கொடுத்தார். அதை நான் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறினார். ஆனால் அந்த அதிகாரி அவர் பொய் சொல்கிறார் என்று கருதி அவரைக் கொன்று விட்டார். மறுநாள் அரசருக்கு நெருக்கமாக இருந்த அந்த மனிதர் அரசவைக்கு வந்த பொழுது அரசர் ஆச்சரியப்பட்டு கடிதம் என்ன ஆனது என்று கேட்டார். அப்பொழுது அவர் அந்த விவரத்தை சொன்ன போது தான் அந்த மனிதரின் பொறாமை உணர்வும் அவரிடத்தில் இருந்து அந்த கெட்ட எண்ணமும் அரசருக்கு புரிந்தது. (பதாயிவுஸ் ஸுலுக் ஃபீ தபாயிஇல் மலிக்)

2022 அழகிய வரலாறு

2023 வான்மறை கூறும் வரலாறுகள்

வாஹிதிகள் பேரவை தீமையை அழிக்கும் நல்லறங்கள்

No comments:

Post a Comment