Sunday, December 14, 2025

உரையாடல் - வரதட்சணை

மாணவன் - 1

 

1 ; ஹலோ சார் உங்கப் பெயர் என்ன?                                                                  

2 ; உங்க பிறப்பு வளர்ப்ப பத்தி சொல்ல முடியுமா சார்?                                

3 ; நீங்க எந்த மதம் சார்?                                                                                             

4 ; இப்ப நீங்க இருக்குறது ?  

                                                                                     

5 ; உங்களுக்கு உடன் பிறந்தவங்க எத்தன பேர் சார்?                                    

6 ; சார் நீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க போல?                                     

7 ; உங்க தொழில் என்ன சார்?                                                                                  

8 ; உங்களோட எதிர்கால லட்சியம் என்ன சார்?                                              

9 ; உங்க லட்சியம் எதுவும் நிறைவேறி இருக்குதா சார்?                              

10 ; இந்த உயர்ந்த லட்சியத்த நிறைவேத்துறதுக்கு உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் உண்டா சார்?                                                                    

11 ; என்னங்க சொல்றீங்க ஆச்சர்யமா இருக்குது.உங்க லட்சியமே பெண்கள அழிக்கிறதுன்னு தான் சொல்றீங்க----- பின்ன அந்த பெண்களே எப்டி உங்களுக்கு ஆதரவு கொடுப்பாங்க பெண்களே எப்டி சார் பெண்கள அழிக்கிறதுக்கு ஹெல்ப் பன்னுவாங்க.ஒன்னும் புரியலயே?            

12 ; ஏன் சார் உங்களுக்கு மவ்த்லாம்  கிடையாதா?                                                    

                                               

 

மாணவன் - 2

 

1 ; என் பெயர் வரதட்சன.சீதனம் என்றும் செல்லமா அழைப்பாங்க

2 ; தாராளமா, நான் பிறந்தது இந்தியால பேராசப் புடிச்ச மனிதர்கள் வீட்ல. அங்கு பிறந்த எனக்கு இப்ப உலகம் பூரா செல்வாக்கு இருக்கு.                   

3 ; நான் ஒரு பிராமண மதத்தச் சார்ந்தவன்.                                         

4 ; பிராமணர்கள் இப்ப கொஞ்சம் சொஞ்சமாக என்ன ஒதுக்க ஆரம்பிச்சாட்டாங்க. அதனால மத்த இடங்கள்ள இருப்பேன்.குறிப்பா முஸ்லிம்களோட வீட்ல என்ன அதிகமா பார்க்கலாம்.

5 ; வட்டி, கடன்,லஞ்சம்,லாட்டரி,சூதாட்டம்னு பல பேர் இருக்காங்க.      

6 ; இது என்ன மடத்தனமான கேள்வி. இந்த நாட்ல வேறு யாருக்கு மகிழ்ச்சி இருக்குதோ இல்லயோ எனக்கு ஆக மகிழ்ச்சி

7 ; ஆகா இந்த கேள்வியத்தான் நான் ரொம்ப நேரமா எதிர்பாத்தேன். என்னோட தொழில் வேற ஒன்னும் இல்ல.ஆண்களுக்கு பணத்தாசய ஏற்படுத்துறது,பெண்கள கண்ணீர் வடிக்க வைக்கிறது,அவங்கள தற்கொலை செய்ய வைக்கிறது,அவங்கள தவறான வழியில தள்ளுறது, பெண்ணப்பெத்தவங்கள வட்டி வாங்க வைக்கிறது,பிச்ச எடுக்க வைக்கிறது,கடைசில அவங்கள நடுத்தெருவுக்கு கொண்டு வர்ரது,பெண் குழந்தைகளப்பிறக்க விடாம கருவலேயே அவங்களுக்கு சமாதி கட்டுறது அவ்ளோ தான்.                                                    

8 ; பெண் சமூகத்த வேறோடு அழிக்கிறது.                                                          

9 ; ஊம் நிறையவே நிறைவேறி இருக்குது.அண்ணல் நபியும்,அருமை ஸஹாபாக்களும், நல்லோர்களும் இருந்த காலம் வர நான் மதிப்பில்லாம இருந்தேன். ஆனா அந்த நல்லவங்களாம் போன பிறகு நிலம தலைகீழா மாறிடுச்சி. நான் ரொம்ப முன்னேறி இருக்கிறேன். நிறைய பெண்கள் என்னோட மோதிப்பாத்துட்டு கடைசில காணாம போயிட்டாங்க. இன்னும் சில பேர்  திருமண வாழ்க்கையத் தொலைச் சிட்டாங்க.இன்னும் சில பேர் என் காரணமா ஆடு மாடுகளப்போல அறுக்கப்படுறாங்க, எரிக்கப் படுறாங்க,கணவனால சித்தரவத செய்யப் படுறாங்க, நீங்க தான் தினமும் பேப்பர்ல பாத்திருப்பீங்களே.அந்த மாதிரி செய்தி இல்லாம ஒருநாளும் பேப்பர் பாக்க முடியாதே.அத வச்சே என் உயர்ந்த லட்சியம் எந்த அளவு நிறைவேறி இருக்குதுன்னு புரிஞ்சிக் கலாமே.         

10 ; நிறைய இருக்காங்களே----- இந்த உலகத்துல இருக்குற தாய்மாருங்க தான் எனக்கு உதவியாளர்கள், ஆதரவாளர்கள் எல்லாமே.

11 ; கல்யான வயசுல இருக்குற இளம் பெண்கள் தான் எனக்கு எதிரிங்க. அதனால அவங்கள அழிக்கனும்னு நினக்கிறேன்.அதே ஒரு பொண்ணு கல்யானம் ஆகி ஒரு ஆம்பல புள்ளய பெத்துட்டா எனக்கு நண்பர்களா ஆயிட்றாங்க.ஏன் இன்னும் புரியலயா இன்னைக்கு  வரதட்சன கொடுமைக்கு அடிப்பட காரணமே இந்த மாப்பிள்ளையைப் பெத்த தாய்மாருங்க தானே.  

12 ; சின்ன வயசு பொண்ணா இருக்குற வரைக்கும் வரசட்சன ஒரு வன் கொடுமைன்னும், பெரிய தாயான பிறகு வரதட்சன ஒரு கட்டாய கடமைன்னும் சொல்லி இரட்ட வேடம் ஆடக்கூடிய இந்த பெண்கள் இருக்குற வரைக்கும் எனக்கு என்னைக்கும் அழிவே கிடையாது. ஆஆஆஆஆ--      

 

  

No comments:

Post a Comment