Sunday, December 14, 2025

உரையாடல் - முஸ்லிம்களின் இன்றைய நிலை

 

மாணவன்

 

1.       அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி

2.      இல்லம்மா ஹதீஸ பத்தி உனக்கு தெரியுமா

3.       . ஹதீஸ்னா என்ன மா

4.        சரி மா நீ ஹதீஸ் படிச்சிருக்கிறியா?

5. எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதுக்கு ஹதீஸ்ல இருந்து பதில் வேணும் சொல்லுவியா.

6.   என்னம்மா கேள்வி தானே கேக்குறேன்னு சொன்னேன். குண்ட தூக்கி போடறேன்னு சொல்ற

7.       சரிம்மா மத்தவங்க கத நமக்கு எதுக்கு. நீ பதில் சொல்லுவல்ல.

8.    நான் பணக்காரனா ஆகுறதுக்கு என்ன பன்னனும் ?

9.   இன்னைக்கு நிறைய பேரோட ஆசையே அதான. நிறைய காசு பணத்த சேக்குறதுக்கு என்ன வழின்னு தானே எல்லாரும் தேடிட்டு இருக்கோம். ஒரே நாளில் பில்கேட்ஸ் ஆவது எப்படினு யூடூப்ல ஒரு வீடியோ வரட்டும்... உடனே போய் பாப்போம். புள்ளைங்களுக்கு கூட, பணம் சம்பாதிக்கிற மாதிரியான படிப்ப தான கொடுக்குறோம். புள்ளைங்கள யாராவது IAS, IPS இப்டி அதிகாரம் கிடைக்கிற மாதிரி படிக்க வக்கிறோமா? இல்லயே. நமக்கு தெரிஞ்சதுலாம் சிவிலு இல்ல மெக்கானிக். நல்ல படிச்சு வேலைக்கு போகும் போது கூட IT கம்பெனில தான் வேலைக்கு சேருவோம். ஏன்னா இதுல தான் காசு சம்பாதிக்க முடியும். நம்மள்ள எத்தன பேரு கலைக்டரா இருக்காங்க. எத்தன பேரு அரசு அதிகாரத்துல இருக்காங்க. சொல்லு. நமக்கு தெரிஞ்சதுலாம் காசு துட்டு மணி. இன்னைக்கு எங்க பாத்தாலும் முஸ்லிம்கள் அநீதி இழைக்கப்படுறாங்க. சின்ன விஷயத்துக்கும் அலைக்கழிக்கப் படுறாங்க. புறந் தள்ளப்படுறாங்க. ஈசியா நம்மளோட வீட்ட இடிச்சிடுராங்க. பள்ளிவாசல இடிச்சிடுராங்க. மத்ரஸாவ காலி பன்னிடுராங்க. இஸ்லாமியர்கள ஈசியா கைது பன்னி வருஷக்கணக்கா ஜெயில்ல வச்சிடுராங்க.ஒவ்வொன்னுக்கும் ரோட்ல இறங்கி போராட வேண்டியதா இருக்கு.அப்டி போராடுனாலும் நீதி கிடைக்குதா... இல்ல. 32 வருசமா போராடிட்டு இருக்குறோம். பாபர் மசூதிக்கு நீதி கிடைச்சிச்சா... இல்ல. கோர்ட்ல இஸ்லாமியர்களுக்கு எதிரான வழக்குன்னா உடனே விசாரிச்சு அன்னைக்கே தீர்ப்ப சொல்றாங்க. போலிஸ்காரங்க, இஸ்லாமியர்கள கண்டா கண்டமேனிக்கு அடிக்கிறாங்க. புர்கா போட்டு போனா நிப்பாட்டி ஃபைன போடுறாங்க. அதேபோல இஸ்லாமியர்களுக்கு எதிரா ஒவ்வொரு சட்டத்தையும் அரசு கொண்டு வந்துட்டு இருக்கு. இப்டி நீதிமன்றம்,காவல் துறை, அரசு, எல்லாமே இஸ்லாமியர்களுக்கு எதிரா தான் இருக்கு. நம்மால எதாச்சும் செய்ய முடியுதா?  இதுக்குலாம் என்ன காரணம். நம்ம கிட்ட அதிகார பலம் இல்ல. அதிகார வலிம இல்ல. யாரையாவது பெரியவங்கள பாக்கும் போது கூட, நான் குடும்பத்தோட ஹஜ்ஜிக்கு போகனும் துஆ செய்யுங்க. என் புள்ள ஓதி பெரிய ஆலிமாகனும் துஆ செய்யுங்க. ஈமானோட மரணிக்கனும் துஆ செய்யுங்க. பாவம் செய்யாத தூய்மையான வாழ்க்க வாழனும் துஆ செய்யுங்க. இப்டி யாராவது கேக்குறோமா... பரக்கத்துக்காக துஆ செய்யுங்க அப்டின்னு தானே சொல்லுவோம். அப்டின்னா என்ன அர்த்தம்... பணம் தான் எல்லாருடைய குறிக்கோலா இருக்கு.நம்ம சமுதாயம் எப்ப தான் திருந்த போகுதோ தெரியல.

10.என்ன பன்றது நம்ம பெற்றோர்கள் அப்டித்தான நம்மள வளக்குறாங்க.எந்த பெற்றோர்களாவது புள்ளைங்களுக்கு மார்க்கத்த சொல்லிக் கொடுக்குறாங்களா குர்ஆன் ஓத சொல்லிக் கொடுக்குறாங்க. ஒழுக்கத்த சொல்லிக் கொடுக்குறாங்களா யாரோட எப்டி நடந்துக்கனும்னு சொல்லிக் கொடுக்குறாங்களா காசு எப்டி சம்பாதிக்கனுன்னு தான சொல்லிக் கொடுக்குறாங்க. அப்ப நமக்கும் அந்த சிந்தனை தான இருக்கும்.

11 சரிம்மா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.

1 2 எல்லாரும் உலகத்துல அதுக்கு பதில் தேடிட்டு இருக்காங்க. நான் ஹதீஸ்ல பதில் தேடுறேன்.

13 கரைக்டா சொன்னம்மா இன்னைக்கு நம்ம ஆளுங்க யூடியூப்ல பாட்டு வந்தா பாப்பாங்க. காமெடி வந்தா பாப்பாங்க.சினிமா சீன் வந்தா பாப்பாங்க. யாராவது ஆம்பள பொம்பல டேன்ஸ் ஆடி ரீல்ஸ் போட்டா பாப்பாங்க. பயானு மார்க்க சட்டம் இஸ்லாமிய வரலாறு இப்டி வீடியோ வந்தா SKIP பன்னிட்டு போயிடுவாங்க. வார வாரம் நம்ம பள்ளிவாசல்ல பெண்கள் பயான் நடக்குது எத்தன பேர் வராங்க. ஜும்ஆ பயானுக்கு கூட எத்தன பேரு கரைக்டான டைமுக்கு வராங்க. இப்டி  இருந்தா நம்ம சமுதாயத்துக்கு எப்டி மார்க்கம் தெரியும்.எப்டி இஸ்லாம் தெரியும் எப்டி நபியோட வாழ்க்க தெரியும். அல்லாஹ் தான் நம்ம சமுதாயத்த பாதுகாக்கனும். நல்ல புத்திய கொடுக்கனும். சரிம்மா நான் வர்ரேன்.

 

14.  அட போம்மா நம்ம ஆளுங்கள பத்தி பேசி பேசியே டயர்டா ஆயிடுச்சி. நான் அப்றமா கேட்டுக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.  

 

 

மாணவி

 

1.       வ அலைக்குமுஸ் ஸலாம் அண்ணே என்ன விஷயம் ?

2.       தெரியும்ணே சொல்லுங்க.

3.   நபி ஸல் அவங்களோட சொல்,செயல்,அங்கீகாரம் இந்த மூனுக்கும் தான் ஹதீஸுன்னு சொல்வாங்க.

4.       ஏதோ கொஞ்சம் கொஞ்சம் படிச்சிருக்கேன் ணே

5.  ஏண்ணே ஹதீஸ் தெரியுமான்னு கேட்டீங்க. தெரியுன்னு சொன்னேன். அதுக்காக பெரிய குண்ட தூக்கி போடுறீங்களே

6.   ஆமாண்ணே இன்னைக்கு நிறைய பேருக்கு அலர்ஜியே இதான. எல்லாம் வாய் கிழிய பேசுவாங்க. ஆனா எதாச்சும் கேள்வி கேட்டா ஓடிப் போயிடுவாங்க.  

7. கேளுண்ணே. எங்க மத்ரஸாவுல நிறைய ஹதீஸ் சொல்லிக் கொடுத்துருக்காங்க. தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.

8.       என்னண்ணே மொத கேள்வியே பயங்கரமா இருக்கு.

9.      இவ்ளோ பேசுறீங்களே... நீங்களே பணத்த பத்தி தான கேள்வி கேக்க வந்துருக்கீங்க.

10 ஆமாண்ணே சரியா சொன்னீங்க

11ஆக, மொத்தத்துல அத கேக்காம விட மாட்டீங்க அப்டித்தான

12 நல்ல விஷயம் ணே. இன்னைக்குலா யாரு ஹதீஸ படிக்கிறாங்க. ஹதீஸ்ல இருந்து விளக்கத்த தேடுறாங்க. HOW TO BECOME RICH பணக்காரனா ஆகுறது எப்டின்னு கூகுல்ல சர்ச் பன்னுவாங்க. WHAT A WAY TO HAPPINESS மகிழ்ச்சி கிடைக்க என்ன வழின்னு கூகுல்ல சர்ச் பன்னுவாங்க. WHAT A WAY TO UNITY ஒற்றுமைக்கு என்ன வழின்னு கூகுல்ல சர்ச் பன்னுவாங்க. HOT TO RAISE A CHILD குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் அப்டின்னு கூகுல்ல சர்ச் பன்னுவாங்க. ஏன்னா இன்னைக்கு நமக்கு எல்லாத்துக்கும் வழிகாட்டி கூகுல் தான். அல்லாஹ் நபி ஸல் அவர்களை சிறந்த வழிகாட்டியா முன்மாதிரியா தந்திருக்கான். யாராவது நபி ஸல் அவங்க வாழ்க்கைய படிக்கிறோமா? FACE BOOK INSTAGRAME ல கண்டதையும் வீடியோ எடுத்து போடுறாங்க. அவங்களலாம் FALLOW பன்றோம். ஆனா நபி ஸல் அவங்கள FALLOW பன்றோமா? உலகத்துல கண்டவனுடைய சுன்னத்தலா பின்பன்றோம். நபி ஸல் அவங்களோட உயர்வான சுன்னத்த பின்பற்றோமா? நபி ஸல் அவங்க எதையாச்சும் விட்டு வச்சாங்களா? பணக்காரனா ஆகுறது எப்டின்னு சொல்லிக் கொடுத்தாங்க. மகிழச்சிக்கு என்ன வழின்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஒற்றுமைக்கு என்ன வழின்னு சொல்லிக் கொடுத்தாங்க. குழந்தைய எப்டி வளர்த்து உருவாக்கனுனு சொல்லிக் கொடுத்தாங்க. மனைவிட்ட எப்படி நடக்கனும், கணவன்ட எப்படி நடக்கனும், பிள்ளைகள்ட எப்படி நடக்கனும், பெற்றோர்கள்ட எப்டி நடக்கனும், அண்டை வீட்டார்ட எப்படி நடக்கனும், பிராணிகள்ட எப்படி நடக்கனும். இப்படி ஒன்னு விடாம எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டாங்க. நபி ஸல் அவங்களோட வாழ்க்கைல எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்குது. எல்லா சந்தேகங்களுக்கும் விடை இருக்குது. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்குது. ஆனா அவங்களோட வாழ்க்கைய நாம படிக்கிறதும் இல்ல. சொன்னா கேக்குறதும் இல்ல. அவங்கள FALLOW பன்றதும் இல்ல.

اليوم اكملت لكم دينكم

இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நாம் பரிபூரணப்படுத்தி விட்டாம்னு அல்லாஹ் குர்ஆன்ல சொல்றான். பரிபூரணம் பெற்ற மார்க்கத்துல இருந்துகிட்டு நாம எங்கங்கயோ போயிட்டு இருக்கோம். யார் யாரையோ பின்பற்றோம். இஸ்லாம் உண்மையான மார்க்கம். இஸ்லாத்துல எல்லாம் இருக்குதுனு சொல்லி இன்னைக்கி உலகமே இஸ்லாத்த நோக்கி வந்துட்டிருக்கு. ஆனா நாம இஸ்லாத்துல இருந்து கிட்டே இஸ்லாத்த முழுசா பின்பற்றாம இருந்துகிட்டிருக்கோம். அல்லாஹ் தான் பாதுகாக்கனும்.

13 என்னண்ணே பணக்காரனா ஆகுறது எப்டின்னு கேள்வி கேட்டீங்க. பதில கேக்காமயே போறீங்க.

14 வ அலைக்குமுஸ் ஸலாம். பாவம் அவரே டயர்டா ஆயிட்டாரு. அந்தளவுக்கு நம்ம சமுதாயம் ரொம்ப மோசமா இருக்கு. அன்பான உறவுகளே சொந்தங்களே பணக்காரனா ஆகுறது எப்டினு நீங்க தெரிஞ்சிக்கனுமா காத்திருங்க. கவனமா கேளுங்க. இன்ஷா அல்லாஹ் அடுத்து வர்ரவங்க உங்களுக்கு பதில் சொல்வாங்க. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment