அஸ்ஸலாமு
அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே இஸ்லாம்
ஓர் உயர்ந்த மார்க்கம்.மனிதன் உயர்ந்தவனாக,சிறந்தவனாகத் திகழ உன்னதமான
பண்பாடுகளையும்,நாகரீகங்களையும் கற்றுத்தரும் இஸ்லாம், தீய செய்களை தவிர்ந்து
கொள்ளும்படியும் அவனை எச்சரிக்கிறது.
Friday, August 29, 2014
நன் நட்பு
அஸ்ஸலாமு
அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பல்வேறு
உறவுகளைப் பெறுகிறான். ஒரே மனிதன் தந்தை,மகன், கணவன், அண்ணன்,மாமா என்று பல உறவுப்
பெயர்களைத் தாங்கி நிற்பதைப்
பார்க்கிறோம்.
தாயின் காலடியில் சுவனம்
வீடு என்பது மண்ணாலும்,கற்களாலும் ஆனது.அதுபோல் குடும்பம்
என்பது அன்பாலும்,பாசத்தாலும் ஆனது.ஆனால் இன்று அந்தப் பாசப் பிணைப்பு கொஞ்சம்
கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருப்பதை சமூக நிகழ்வுகள்
நிரூபிக்கின்றன.அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினரிடம் பெற்றோர் அன்பு,
பெற்றோர் கவனிப்பு எல்லாம் குறைந்து, பெற்றோரை அவமதிப்பது இன்றைய நூதன நாகரீகமாக
மாறிப்போனது.
சந்தேகம்
அஸ்ஸலாமு
அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! மனித வாழ்வின் அனைத்துக் கோணங்களிலும் தூரநோக்கு சிந்தனையுடன் தன் கருத்துக்களைப் பதிவு செய்த இஸ்லாம்,குடும்ப வாழ்வு
பிணங்காமல், சீர்குலையாமல் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் வழிகாட்டுதல்களை
வழங்கியுள்ளது.
உதவி
உலகில் கொடுப்பவன், வாங்குபவன் என மனிதனை இருவகையாகப்
பிரிக்கலாம். இதில் வாங்குபவனை விட கொடுப்பவனே சிறந்தவன். பிறருக்கு உதவி புரிபவனே
சிறந்த மனிதன், சுவனம் செல்லத்தகுதி யானவன் என்பது இஸ்லாத்தின் பார்வை.கொடுக்கும்
உயர்ந்த கரம்,வாங்கும் தாழ்ந்த கரத்தை விட உயர்வானது என்பது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உலகிற்குக் கூறிய அழகு வார்த்தை.
நபித்தோழர்கள்
குழுமி இருக்கும் சபை ஒன்றில், இன்று உங்களில் இறுதிச்
சடங்கில் கலந்து கொண்டவர் யாரும் இருக்கின்றீர்களா? என்ற நபி {ஸல்} அவர்களின் கேள்விக்கு அபூபக்கர் சித்தீக் {ரலி} என்ற தோழரிடமிருந்து ஆம்,இன்று
நான் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளேன் என்று பதில் வருகிறது. இன்று
உங்களில் நோன்பு வைத்தவர் யாரும் இருக்கின்றீர்களா? என்ற நபிகளாரின் இரண்டாவது கேள்விக்கும் அபூபக்கர் சித்தீக்
{ரலி} அவர்கள் ஆம்
என்றுரைத்தார்கள். இன்று உங்களில் பசித்தவருக்கு உணவளித்தவர் யாரும்
இருக்கின்றீர் களா? என்ற நபியின் அடுத்த கேள்விக்கும் அதே நபித்தோழரிடமிருந்து ஆம்
என்றே பதில் வந்தது.
அப்போது, இம்மூன்று
செயல்களும் யாரிடம் ஒன்றிணைந்து விட்டதோ அவர் சுவனம் புகுவார் என்று
வாக்களித்தார்கள் உத்தம தூதர் முஹம்மது நபி {ஸல்} அவர்கள்.
உலகில் நான்
யாருக்கும் கொடுக்க மாட்டேன்,நான் யாருக்கும் உதவ மாட்டேன் என்று சொல்பவன்
உண்மையில் அவன் மனிதன் அல்ல, பிணத்தைப் போன்றவன். யாருக்கும் உதவ முடியாத,
எல்லோருடைய உதவியையும் எதிர் பார்ப்பது பிணம் தானே.
எனவே நம்மால்
முடிந்தளவு பொருளால்,கல்வியால்,உணவால் பிறருக்கு உதவி செய்யும் உயர்ந்த குணத்தை
நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும்.
அகிலத்தில்
அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து சிருஷ்டி களும் எதாவது வகையில் பிறருக்கு
உதவி புரியும் நிலையில் இருப்பதை நாம் பூமியில் காணும் காட்சிகள் நமக்கு
உணர்த்துகிறது.
தனக்கு ஏற்படும்
காயங்களைக் கூட பாராமல் தன் எஜமானனை பாதுகாப்பாக பல மைல் தூரம் சுமந்து செல்லும்
குதிரை,
நாம் போடுகின்ற
ஒரு சில பிஸ்கட்களுக்காக காலம் முழுக்க நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாய்,
எதுவும் தரா
விட்டாலும் கிடைக்கிற காகிதத்தை திண்று கொண்டு நம் பொதிகளை சுமக்கும் கழுதை,
தன் மேல்
சிறுநீர் கழிப்பவனுக்கும் இளநீரைப் பரிசாக வழங்கும் தென்னை மரம்,
தன் மேல் கல்
எறிபவனுக்கும் சுவையான பழங்களை தந்துதவம் மாமரம்,
கடலின் உப்பு
நீரை உள்வாங்கிக் கொண்டு நமக்காக மதுரமான நீரை வாரி வழங்கும் மேகம்
இதுவெல்லாம்,
பிறருக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை நமக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த
ஆசிரியர்களாகத் திகழ்கிறது.
இஸ்லாத்தில்
சிறந்த காரியம் எது? என்ற நபித்தோழர் ஒருவரின்
வினாவிற்கு இஸ்லாத்தில் போற்றத்தகுந்த பல்வேறு செயல்கள் இருக்க, பசித்தவருக்கு
உணவளித்து அவருக்கு உதவுவதே இஸ்லாத்தில்
சிறந்த காரியம் என்ற முஹம்மது நபி {ஸல்} அவர்களின் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அந்த உயர்ந்த
பண்பைப் பெற்றுத் திகழ அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
Monday, August 18, 2014
மிஃராஜ் தரும் படிப்பினை
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தமிழ் எழுத்துக்களில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்து விட்டது.சில இடங்களில் முன்ன பின்ன மாறியிருக்கும். வாசிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.என்னால் முடிந்த வரை எல்லாவற்றிற்கும் அரபி வாசகங்களை சேர்த்திருக்கிறேன்.அதை வைத்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
புனிதமான
மாதத்தில் புனிதமான இரவில் புனிதம் நிறைந்த கண்மனி நாயகம் [ஸல்] அவர்களுக்கு
அல்லாஹ் வழங்கிய பேரற்புதத்தை குறித்து
பேசுவதற்கும்,கேட்பதற்கும்,அலசுவதற்கும்,ஆராய்வதற்கும் இந்நிகழ்வில் புதைந்து
கிடக்கிற பாடங்களையும்,படிப்பினைகளையும் பார்த்து நமது ஈமானை புதுப்பித்துக்
கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இந்நிகழ்வை நமக்கு அமைத்துத்
தந்திருக்கிறான்.
Sunday, August 17, 2014
Subscribe to:
Posts (Atom)