Saturday, March 23, 2024

இஸ்லாத்தின் மிக முக்கியமான தூண்

 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் : 19:59)

وَقَدِ اخْتَلَفُوا فِي الْمُرَادِ بِإِضَاعَةِ الصَّلَاةِ هَاهُنَا، فَقَالَ قَائِلُونَ: الْمُرَادُ بِإِضَاعَتِهَا تَرْكُها بِالْكُلِّيَّةِ،

وَقَالَ الْأَوْزَاعِيُّ، عَنْ مُوسَى بْنِ سُلَيْمَانَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيمرة فِي قَوْلِهِ: ﴿فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلاةَ﴾ ، قَالَ: إِنَّمَا أَضَاعُوا الْمَوَاقِيتَ، وَلَوْ كَانَ تَرْكًا كَانَ كُفْرًا.

عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ قِيلَ لَهُ: إِنَّ اللَّهَ يُكْثِرُ ذِكْرَ الصَّلَاةِ فِي الْقُرْآنِ: ﴿الَّذِينَ هُمْ عَنْ صَلاتِهِمْ سَاهُونَ﴾ وَ ﴿عَلَى صَلاتِهِمْ دَائِمُونَ﴾ وَ ﴿عَلَى صَلاتِهِمْ يُحَافِظُونَ﴾ ؟ قَالَ ابْنُ مَسْعُودٍ: عَلَى مَوَاقِيتِهَا. قَالُوا: مَا كُنَّا نَرَى ذَلِكَ إِلَّا عَلَى التَّرْكِ؟ قَالَ: ذَاكَ(٤) الكفر.

இந்த வசனத்தில் தொழுகையை வீணடிக்கும் ஒரு சமூகம் வந்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். வீணடித்தல் என்பதற்கு தொழுகையை நேரம் தவறி தொழுதல் என்று இமாம்கள் விளக்கம் தருகிறார்கள். இப்னு மஸ்ஊத் ரலி அவர்களிடம் அல்லாஹ் குர்ஆனில் தொழுகையில் கவனக்குறைவாக இருப்பார்கள், தொழுகையில் நியமமாக இருப்பார்கள், தொழுகையில் பேணுதலாக இருப்பார்கள் என்று பல இடங்களில் கூறுகிறான். இதற்கு பொருள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நேரத்தைத் தான் குறிப்பிட்டார்கள். ஏனெனில் தொழுகையை விடுதல் என்பது இறை மறுப்பாகும் என்று கூறினார்கள்.

سيلقون غيا ، أي : خسارا يوم القيامة

واد في جهنم ، بعيد القعر ، خبيث الطعم

واد في جهنم من قيح ودم .

இந்த வசனத்தில் கய்யா என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. கய்யா என்றால் நஷ்டம் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள். வேறு சில இமாம்கள் நரகத்தில் மிகவும் ஆழமான சீளும் சலமும் நிறைந்த பள்ளத்தாக்கு என்று கூறுகிறார்கள்.

தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கே இந்த எச்சிரிக்கையெனில் தொழுகையை விடுபவர்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தொழுகை இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று.

ஒருவன் முஸ்லிம் என்பதற்கு அடையாளமே தொழுகை தான். தாடி வைப்பது, தொப்பி அணிவது, சுன்னத் செய்வது, இஸ்லாமியப் பெயர்களை வைப்பது, பிரியாணி செய்வது, இதுவெல்லாம் இன்று ஒருவர் முஸ்லிம் என்பதற்கு  வெளிப்படையாக சொல்லப்படுகிற காரணங்கள். ஆனால் தொழுகை தான் அதன் முதல் அடையாளம்.

 

حديث : " بين العبد وبين الشرك ترك الصلاة " ، والحديث الآخر : " العهد الذي بيننا وبينهم الصلاة ، فمن تركها فقد كفر

ولهذا ذهب من ذهب من السلف والخلف والأئمة كما هو المشهور عن الإمام أحمد ، وقول عن الشافعي إلى تكفير تارك الصلاة ، 

ஒரு மனிதனுக்கும் இணை வைப்பிற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவது என்று ஹதீஸில் வந்திருக்கிறது. எனவே தான் அதிகப்படியான இமாம்கள் தொழுகையை விட்டவனை காஃபிர் என்று கூறுகிறார்கள்.

தன்னை வணங்குவதற்குத்தான் மனிதனையும் ஜின்னையும் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் : 51:56)

ஆனால் ஏனோ இந்த சமூகம் வந்த நோக்கம் மறந்து இறைவன் நம்மைப் படைத்த நோக்கம் மறந்து தொழுகையில் மிக மிக கவனக்குறைவாக இருப்பதை பார்க்கிறோம்.

 

நபி அவர்கள் மிகவும் அஞ்சிய இரு விஷயங்கள்

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: "إِنِّي أَخَافُ عَلَى أُمَّتِي اثْنَتَيْنِ: الْقُرْآنَ [وَاللَّبَنَ، أَمَّا اللَّبَنُ](٢٥) فَيَتَّبِعُونَ الرِّيفَ، وَيَتِّبِعُونَ الشَّهَوَاتِ وَيَتْرُكُونَ الصَّلَوَاتِ، وَأَمَّا الْقُرْآنُ فَيَتَعَلَّمُهُ الْمُنَافِقُونَ، فَيُجَادِلُونَ بِهِ الْمُؤْمِنِينَ المسند (٤/١٥٦) والمراد باللبن كما قال الحربي: "أظنه أراد يتباعدون عن الأمصار وعن صلاة الجماعة، ويطلبون مواضع اللبن في المراعي والبوادي”.

என் சமூகத்தில் இரண்டு விஷயங்களை மிகவும் அஞ்சுகிறேன். 1,  நயவஞ்சகர்கள் குர்ஆனைக் கற்றுக் கொண்டு அதைக் கொண்டு முஃமின்களிடம் தர்க்கம் செய்வார்கள். 2, தொழுகையை விட்டு விடுவார்கள்.

மறுமையில் அல்லாஹ் கேட்கும் முதல் கேள்வி தொழுகையைக் குறித்துத்தான்.

روى الترمذي وأبو داود عن أنس بن حكيم الضبي أنه أتى المدينة فلقي أبا هريرة فقال له : يا فتى ألا أحدثك حديثا لعل الله تعالى أن ينفعك به ؛ قلت : بلى . قال : إن أول ما يحاسب به الناس يوم القيامة من أعمالهم الصلاة فيقول الله تبارك وتعالى لملائكته وهو أعلم انظروا في صلاة عبدي أتمها أو نقصها فإن كانت تامة كتبت له تامة وإن كان انتقص منها شيئا قال انظروا هل لعبدي من تطوع فإن كان له تطوع قال أكملوا لعبدي فريضته من تطوعه ثم تؤخذ الأعمال على ذلك 

 

உமர் பின் கத்தாப்  (ரலி) அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ  அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான்.

 

தொழாத ஒருவனால் நாசமான ஊர்

مر عيسى عليه السلام على قرية كثيرة الأشجار والأنهار فأكرمه أهله فتعجب من حسن طاعتهم ثم مر عليها بعد ذلك بثلاث سنين فرأى الأشجار يابسة والأنهار ناشفة وهي خاوية على عروشها فتعجب من ذلك فأوحى الله إليه قد مر على القرية رجل تارك الصلاة فغسل وجهه من عينها فنشفت العين ويبست الأشجار وخربت القرية يا عيسى لما كان ترك الصلاة سببا لهدم الدين كان سببا لخراب الدنيا

ஈஸா நபி அலை அவர்கள் ஒரு ஊருக்கு சென்றார்கள். மிகவும் செழிப்பாகவும் பசுமையாகவும் இருந்தது. ஊர் மக்களும் அவர்களை நன்கு உபசரித்தார்கள். மீண்டும் அதே ஊருக்கு 3 வருடங்கள் கழித்து வந்த போது அந்த ஊர் பசுமை இழந்திருந்தது. ஆச்சரியப்பட்டு அல்லாஹ்விடம் கேட்ட போது தொழாத ஒரு மனிதன் அந்த ஊருக்கு வந்து தன் முகத்தைக் கழுவினான். அதனாலே அந்த ஊருக்கு இந்நிலை ஏற்பட்டது என்று கூறினான். (நுஜ்ஹதுல் மஜாலிஸ்)

தொழுகையை விடுவது நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் முஸீபத்தை ஏற்படுத்தும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே தான் நம் முன்னோர்கள் மற்ற் எல்லா விஷயங்களை விட தொழுகையில் அதிகம் கவனம் செலுத்தார்கள், அவர்களின் சிந்தனையும் எண்ணமும் தொழுகையாகவே இருந்தது.

தொழுகை குறித்த நபித்தோழர்களின் சிந்தனை

قُلْنا: يا رَسُولَ اللهِ، وَما لَبْثُهُ في الأرْضِ؟ قالَ: أَرْبَعُونَ يَوْمًا؛ يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسائِرُ أَيّامِهِ كَأَيّامِكُمْ قُلْنا: يا رَسُولَ اللهِ، فَذلكَ اليَوْمُ الذي كَسَنَةٍ، أَتَكْفِينا فيه صَلاةُ يَومٍ؟ قالَ: لا، اقْدُرُوا له قَدْرَهُ،

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு என்று நாங்கள் கேட்டோம்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாதுஅதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள் என்று விடையளித்தார்கள்.

தஜ்ஜாலைக் குறித்தும் அந்த சூழ்நிலையைக் குறித்தும் பெருமானார் பேசுகின்ற அந்த நேரத்தில் கூட ஸஹாபாக்கள் தொழுகையைப் பற்றியே சிந்தனை செய்தார்கள்.

 

கடைசி நேரத்திலும் உமர் ரலி அவர்களின் தொழுகை குறித்த சிந்தனை

يخرج أمير المؤمنين عمر بن الخطاب من بيته ليصلي بالناس صلاة الفجر .. يدخل المسجد .. تقام الصلاة .. يتقدم عمر و يسوي الصفوف .. يكبر فما هو إلا أن كبر حتى تقدم إليه المجرم أبو لؤلؤة المجوسي فيطعنه عدة طعنات بسكين ذات حدين

أما الصحابة الذين خلف عمر فذهلوا وسقط في أيديهم أمام هذا المنظر المؤلم

وأما من كان في خلف الصفوف في آخر المسجد فلم يدروا ما الخبر .. فما إن فقدوا صوت عمر رفعوا أصواتهم : سبحان الله .. سبحان الله . ولكن لا مجيب

يتناول عمر يد عبد الرحمن بن عوف فيقدمه فيصلي بالناس

يحمل الفاروق إلى بيته .. فيغشى عليه حتى يسفر الصبح . اجتمع الصحابة عند رأسه فأرادوا أن يفزعوه بشيء ليفيق من غشيته . نظروا فتذكروا أن قلب عمر معلق بالصلاة . فقال بعضهم : إنكم لن تفزعوه بشيء مثل الصلاة إن كانت به حياة . فصاحوا عند رأسه : الصلاة يا أمير المؤمنين ، الصلاة . فانتبه من غشيته وقال : الصلاة والله . ثم قال لا بن عباس : أصلى الناس . قال : نعم . قال عمر : لاحظ في الإسلام لمن ترك الصلاة . ثم دعا بالماء فتوضأ و صلى وإن جرحه لينزف دماً

உமர் ரலி அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் உணர்வற்றிருக்கிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லை மயக்கமுற்றிருக்கிறார்களா என்று தெரிய வில்லை. நபித்தோழர்கள் யோசித்தார்கள். உமர் ரலி அவர்களின் உள்ளம் முழுக்க தொழுகை குறித்த சிந்தனை தான் மிகைத்திருக்கும். எனவே அஸ்ஸலாத் தொழுகை என்று சப்தமிட்டார்கள். உடனே அவர்கள் மயக்கம் தெளிந்தார்கள்.மக்கள் தொழுது விட்டார்களா என்று கேட்டார்கள். தொழாதவனுக்கு இஸ்லாத்தில் எவ்வித பங்கும் இல்லை என்று கூறினார்கள். பின்பு ஒழு செய்ய தண்ணீர் எடுத்து வரச் சொல்லி ஒழு செய்து அவர்களும் தொழுதார்கள். அவர்களின் உடம்பிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.

 

தொழுகையில் நம் முன்னோர்களின் கவனம்

وكان الربيع بن خثيم يقاد إلى الصلاة وبه الفالج فقيل لـه : قد رخص لك . قال : إني أسمع " حي على الصلاة " فإن استطعتم أن تأتوها فأتوها ولو حبواً .

ரபீஃ பின் கைஸம் ரஹ் அவர்களுக்கு வாதம் ஏற்பட்டு உடலின் ஒரு பகுதி செயல்பட வில்லை. அந்நிலையிலும் ஆட்களின் உதவியோடு தொழுக்கு வருவார்கள். உங்களுக்கு சலுகை இருக்கிறதே நீங்கள் வீட்டில் தொழுது கொள்ளலாமே என்று கேட்டால் ஹய்ய அலஸ் ஸலாத் என்ற வார்த்தையைக் கேட்ட பிறகு நான் எப்படி வீட்டில் தொழ முடியும் என்று கேட்பார்கள்.

• وسمع عامر بن عبدالله بن الزبير المؤذن وهو يجود لنفسه فقال : خذوا بيدي فقيل : إنك عليل . قال : أسمع داعي الله فلا أجيبه . فأخذوا بيده فدخل مع الإمام في المغرب فركع ركعة ثم مات

ஆமிர் பின் அப்தில்லாஹ் ரஹ் அவர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் பாங்கு சப்தத்தைக் கேட்டார்கள். என்னை தொழுகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்கள். இந்நிலையிலும் நீங்கள் செல்ல வேண்டுமா என்று கேட்ட போது அல்லாஹ்வின் அழைப்பை காதால் கேட்ட பிறகு எப்படி பதிலளிக்காமல் இருப்பது என்று கூறி தொழுகையில் கலந்து கொண்டார்கள். ஒரு ரக்கஅத் தொழுத நிலையில் அவர்களின் ரூஹ் பிரிந்தது.

2022 மாமறை கூறும் மர்யம் அலை அவர்கள் 

2023 நூலைப் போல் சேலை

வாஹிதிகள் பேரவை நம்பிக்கையுடன் கேட்போம்


2 comments:

  1. உங்களுடைய பல்வேறு குறிப்புகளின் வழியாக நிறைய பயனடைந்திருக்கிறேன்


    புதிய கோணம் தேவையான ஆயத்து தேவையான ஹதீஸ் வரலாற்று நிகழ்வுகள் என அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள் அல்லாஹ் உங்களுடைய கல்வியில் பரக்கத் செய்வானாக

    ReplyDelete