Thursday, March 21, 2024

தராவீஹ் - 12 ஏன் இந்த அவசரம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு  


(இரண்டு நாட்களாக தொண்டைக் கட்டு ஏற்பட்டு அதனால் தராவீஹ் தொழ வைப்பதற்கும் பயான் செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறேன். உலமாப் பெருமக்களின் துஆவை ஆதரவு வைக்கிறேன். விரைவாக குணம் கிடைக்க அனைவரும் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌  وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

 

மனிதனின் இயல்பு அவசரம்

وَكانَ الْإِنْسانُ عَجُولًا) " أَيْ طَبْعُهُ الْعَجَلَةُ، فَيُعَجِّلُ بِسُؤَالِ الشَّرِّ كَمَا يُعَجِّلُ بِسُؤَالِ الْخَيْرِ. وَقِيلَ: أَشَارَ بِهِ إِلَى آدَمَ عَلَيْهِ السَّلَامُ حِينَ نَهَضَ قبل أن يركب فِيهِ الرُّوحُ عَلَى الْكَمَالِ. قَالَ سَلْمَانُ: أَوَّلُ مَا خَلَقَ اللَّهُ تَعَالَى مِنْ آدَمَ رَأْسَهُ فَجَعَلَ يَنْظُرُ وَهُوَ يَخْلُقُ جَسَدَهُ، فَلَمَّا كَانَ عِنْدَ الْعَصْرِ بَقِيَتْ رِجْلَاهُ لَمْ يُنْفَخْ فِيهِمَا الرُّوحُ فَقَالَ: يَا رَبِّ عَجِّلْ قَبْلَ اللَّيْلِ، فَذَلِكَ قَوْلُهُ:" وَكانَ الْإِنْسانُ عَجُولًا". وَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَمَّا انْتَهَتِ النَّفْخَةُ إِلَى سُرَّتِهِ نَظَرَ إِلَى جَسَدِهِ فَذَهَبَ لِيَنْهَضَ فَلَمْ يَقْدِرْ، فَذَلِكَ قَوْلُهُ:" وَكانَ الْإِنْسانُ عَجُولًا". وَقَالَ ابْنُ مَسْعُودٍ: لَمَّا دَخَلَ الرُّوحُ فِي عَيْنَيْهِ نَظَرَ إِلَى ثِمَارِ الْجَنَّةِ، فَذَلِكَ حِينَ يَقُولُ:" خُلِقَ الْإِنْسانُ مِنْ عَجَلٍ

மனிதனின் இயல்பே அவசரப்படுவது தான். ஏனெனில் உலகத்தின் முதல் மனிதர் நம் பாவா ஆதம் அலை அவர்களிடம் இந்த அவசரம் இருந்தது.

ஸல்மான் ஃபாரிஸீ ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; முதன் முதலாக அவர்களின் தலையை அல்லாஹ் படைத்தான். அப்போது அவர்களுக்கு பார்வை வந்து விட்டது. எனவே அவர்கள் தன்னுடைய மற்ற உறுப்புக்களை அல்லாஹ் எப்படி படைக்கிறான் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அஸர் நேரம் வந்த போது அவர்களின் கால்களில் மட்டும் ரூஹ் ஊதப்பட வில்லை. அப்போது அவர்கள் இறைவா இரவு வரப்போகிறது. அதற்கு முன்பாக விரைவாக என்னை படைத்து விடு என்றார்கள்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அவர்களின் தொப்பில் வரை ரூஹ் ஊதப்பட்டிருந்தது.கால்களில் ஊதப்படுவதற்கு முன்பே அவர்கள் எழுந்திருக்க முயற்சித்தார்கள். அவர்களால் முடிய வில்லை.

நம் பாவா அவர்களிடம் இருந்த அந்த அவசரம் இன்றைக்கு நம்மிடம் எல்லா விஷயங்களிலும் இருக்கிறது. சாப்பிடுவதிலும் அவசரம், சிறுநீர் கழிப்பதிலும் அவசரம்,வாகனம் ஓட்டுவதிலும் அவசரம், வாழ்கின்ற வாழ்க்கையிலும் அவசரம். எடுக்கின்ற முடிவுகளில் அவசரம். எல்லாவற்றிலும் அவசரம்

இன்றைக்கு நடக்கிற அதிகமான பிரச்சனைகளும் குடும்பத் தகராறுகளும் குறிப்பாக கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படுகின்ற மனக்கசப்புக்களும் அதனால் நிகழ்கின்ற தலாக்குகள், இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் இந்த அவசரம் தான்.

அவசரம் வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கலையும் பிரச்சனைகளையும் இழப்புக்களையும் கைசேதங்களையும் ஏற்படுத்தி விடும். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த இரண்டாவது போர்க்களமான உஹது போர்க்களம் தோல்வியில் முடிந்ததற்கு முக்கிய காரணமே இந்த அவசரம் தான்.உஹதுப் போர்க்களம் அன்றைக்கு மட்டுமல்ல இன்று வரை இஸ்லாமியர்களின் உள்ளத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய போர்க்களம். உஹது யுத்தத்தில் தான் அண்ணலம் பெருமான் அவர்கள் காயமடைந்தார்கள். அவர்களது பற்கள் ஷஹீதாக்கப்பட்டது. பத்ரு யுத்தத்தில் காபிர்களுக்கு ஏற்பட்ட அளவுக்கு நிகரான உயிர்சேதம் உஹது யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. 70 முஸ்லிம்கள் வரை ஷஹீதானார்கள்.நபி அவர்களுக்கு எல்லா வகையிலும் உருதுணையாக இருந்த ஹம்ஸா, முஸ்அப் (ரலி) போன்ற முக்கிய சஹாபாக்கள் ஷஹீதானார்கள்.பத்ரு போர்க்களத்தில் வெற்றி பெற்று உற்சாகத்திலும் உத்வேகத்திலும் இருந்த ஸஹாபாக்களின் உள்ளத்தில் இந்த உஹதின் தோல்வி மிகப்பெரும் காயத்தை ஏற்படுத்தியதோடு, அவர்கள் கொஞ்சம் தடுமாறுவதற்கும் காரணமாக அமைந்தது.அல்லாஹ்விற்காக போரிடுகிற நாம் எப்படி தோற்றுப் போனோம்? முஹம்மது நபி அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்பட்டது ? என்பது போன்ற கேள்விகள் அவர்களுடையை மனதை உலுக்கி எடுத்தது.இப்படி எண்ணற்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்திய உஹதின் தோல்விக்குக் காரணம் அவசரம்.

وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ‌ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰٮكُمْ مَّا تُحِبُّوْنَ‌ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ  ‌‌‌ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ‌ وَلَقَدْ عَفَا عَنْكُمْ‌ وَ اللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ‏

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:152)

أَنَّ النَّبِيَّ ﷺ أَقَامَهُمْ فِي مَوْضِعٍ، ثُمَّ قَالَ: "احْمُوا ظُهُورَنَا، فَإنْ رَأيْتُمُونَا نُقْتَلُ فَلا تَنْصُرُونَا وَإنْ رَأَيْتُمُونَا قَدْ غَنِمْنَا فَلا تُشْرِكُونَا. فَلَمَّا غَنِمَ النَّبِيُّ ﷺ وأباحُوا عَسْكَرَ الْمُشْرِكِينَ أَكَبَّتِ الرُّماة جَمِيعًا [وَدَخَلُوا](٢٠) فِي الْعَسْكَرِ يَنْهَبُونَ، وَلَقَدِ الْتَقَتْ صُفُوفُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ، فَهُم هَكَذَا -وَشَبَّكَ بَيْنَ يَدَيْهِ-وَانْتَشَبُوا، فَلَمَّا أَخَلَّ الرُّمَاةُ تِلْكَ الْخَلَّةِ الَّتِي كَانُوا فِيهَا، دَخَلَتِ الْخَيْلُ مِنْ ذَلِكَ الْمَوْضِعِ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ، فَضَرَبَ(٢١) بَعْضُهُمْ بَعْضًا وَالْتَبُسُوا، وقُتل من المسلمين ناس كَثِيرٌ،

நபி அவர்கள் சில அம்பு எறியும் வீரர்களை மலைக்கு மேல் நிறுத்தி இங்கேயே நிற்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.ஆனால் அவர்கள் வெற்றி அடைந்து விட்டோம் என்று எண்ணி அந்த இடத்திலிருந்து கீழே இறங்கியது தான், புறமுதுகிட்டு ஓடிய நிராகரிப்பாளர்கள் திரும்பி வந்து மறுதாக்குதல் தொடுக்கக் காரணமாக அமைந்தது, அதுவே தோல்விக்கும் காரணமாக இருந்தது.

அவசரமாக செயல்படுவதும் யோசிக்காமல் அவசரமாக முடிவெடுப்பதும் கசப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடும் என்பதற்கு உஹதுப் போர்க்களம் ஒரு சான்று.

யோசிக்காமல் அவசரமாக ஒரு விஷயத்தை செய்து விட்டால் பின்னால் வருந்துகின்ற நிலை ஏற்படும்.

وعن أُسامةَ بنِ زَيْدٍ رضي اللَّه عنهما قَالَ: بعثَنَا رسولُ اللَّه ﷺ إِلَى الحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ، فَصَبَّحْنا الْقَوْمَ عَلى مِياهِهمْ، وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلًا مِنهُمْ، فَلَمَّا غَشيناهُ قَالَ: لا إِلهَ إلَّا اللَّه، فَكَفَّ عَنْهُ الأَنْصارِيُّ، وَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ، فَلَمَّا قَدِمْنَا المَدينَةَ بلَغَ ذلِكَ النَّبِيَّ ﷺ فَقَالَ لِي: يَا أُسامةُ! أَقَتَلْتَهُ بَعْدَمَا قَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ؟! قلتُ: يَا رسولَ اللَّه إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا، فَقَالَ: أَقَتَلْتَهُ بَعْدَمَا قَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ؟! فَما زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذلِكَ الْيَوْمِ. متفقٌ عَلَيهِ

ஹள்ரத் உஸாமா ரலி அவர்கள் ஒரு போர்க்களத்தில் ஒரு எதிரியை நெருங்கி அவனைத் தாக்க முற்பட்ட போது அவர் கலிமா சொல்லி விட்டார். இருந்தாலும் உஸாமா ரலி அவர்கள் அவரை ஈட்டியால் குத்தினார்கள். அவர் மரணித்து விட்டார்கள்.நபிக்கு இந்த செய்தி கிடைத்த போது கலிமா சொன்ன பிறகு அவரை கொன்று விட்டாயா என்று கேட்டார்கள்.அதற்கு உஸாமா ரலி அவர்கள் தன்னைப் பாதுகாக்கத்தான் அவர் கலிமா சொன்னார் அதனால் தான் அவரைக் கொன்றேன் என்று கூறினார்கள். இருந்தாலும் நபி ஸல் அவர்கள் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஹள்ரத் உஸாமா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நபி ஸல் அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டது எனக்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது. எந்தளவு என்றால் அந்த நாளுக்கு முன்னால் நான் இஸ்லாத்திற்கே வராமல் இருந்திருக்க வேண்டுமே என்று நான் எண்ணும் அளவு அது சிரமத்தைக் கொடுத்தது. (சுருக்கமான தர்ஜுமா) (புகாரி : 6872)

வாழ்க்கையானாலும் வணக்கமானாலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவதோடு அவ்வாறு அவசரமாக செயல்படுபவர்களை வன்மையாக கண்டிக்கிறது.

وَيلٌ لِلأعْقابِ مِنَ النَّارِ

ஒழு செய்யும் போது கால்களை சரியாக கழுவாதவர்களுக்கு வேதனையுண்டு. (புகாரி : 60)

فصل فانك لم تصل

அவசரமாக தொழுத ஒருவரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் நீ தொழ வில்லை. எனவே திரும்பத் தொழு என்று கூறினார்கள். (திர்மிதி : 302)

 

أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعْ رَأَسَهُ قَبلَ الإِمَامِ أنْ يَجْعَلَ اللهُ صُورَتَهُ صورَةَ حَمارٍ؟

தொழுகையில் இமாமுக்கு முன்பு தன் தலையை உயர்த்துபவன், தன் தலையை அல்லாஹ் கழுதையின் தலையாக மாற்றுவதை பயந்து கொள்ள வேண்டாமா ? (புகாரி : 691)

ஆக உழுவானாலும் தொழுகையானாலும் எந்தக் காரியமானாலும் நிதானமாக செய்ய வேண்டும்.அதில் தான் நன்மையும் இருக்கிறது, பலனும் இருக்கிறது. அதைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது மட்டுமல்ல அவ்வாறு நிதானமாக செய்யப்படுகின்ற காரியங்களைத் தான் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.அதில் அவசரம் காட்டுவதினாலோ அரைகுறையாக செய்வதினாலோ அதன் பலன்களை இழப்பதோடு அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.

வாழ்க்கைல எந்தக் காரியத்தை செய்தாலும் நின்று நிதானமாக அமைதியாக சற்று யோசித்து செய்யலாமா வேண்டாமா அது நன்மையா தீமையா நமக்கு அது தேவையா தேவை இல்லையா என்று தீர்க்கமாக முடிவு செய்து அதுக்குப் பிறகு செய்ய வேண்டும்.

நாம் செய்வது உலகத்தின் காரியங்களாக மறுமையின் காரியங்களாக இருந்தாலும் நிதானம் தேவை, பொறுமை தேவை.நிதானம் தான் வெற்றிக்கான அடையாளம். அவசரத்தோடு செய்கின்ற பல காரியங்கள் தோல்வில போய் தான் முடியும்.

அவசரம் என்றைக்குமே ஆபத்தில் போய் தான் முடியும்.

عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ عَادَ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ ؟ قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ سُبْحَانَ اللَّهِ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ أَفَلَا قُلْتَ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ . رواه مسلم

நபிகள் நாயகம் அவர்கள் தனது நண்பரொருவர் நோயுற்றிருப்பதாக செய்தி அறிந்து, அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்ற அவர்கள், ''நண்பரே! நீங்கள் ஏதும் பிரார்த்தனை புரிந்தீர்களா? யென அவரிடம் கேட்டார்கள். ''யா அல்லாஹ்! மறுமையில் நீ எனக்கு வேதனை தரவிருந்தால் அவற்றை இவ்வுலகத்திலேயே எனக்கு சேர்த்துத் தந்திடுவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்ததாக அவர் பதிலளித்தார். அதைச் செவியுற்ற பெருமானார் அவர்கள்,  உங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. நீங்கள், இரட்சகா! எனக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லதைத் தந்தருள்வாயாக! என துஆச் செய்திருக்க வேண்டாமா?'' என கூறினார்கள். (முஸ்லிம் ; 2688)

அவசரத்தனத்தால் சுவர்க்கத்தை இழந்தவர்களும் உண்டு. இதற்கு அண்ணல் நபிகள் அவர்கள் காலத்தில் நடந்த ஒரு போர்க்களத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தை தாங்க முடியாமல் தற்காலை செய்து கொண்ட அந்த மனிதரை உதாரணமாக கூறலாம்.

எனவே எதிலும் அவசரம் கூடாது. அல்லாஹ் அந்த அவசர குணத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக!

 2022 ஷைத்தானின் சகோதரர்கள்

2023அழைப்புப் பணி

வாஹிதிகள் பேரவை பெற்றோரைப் பேணுவோம்

  

8 comments:

  1. அல்லாஹ் தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் தந்து கல்வி அறிவை செழிப்பாகக்கிவைப்பானாக!
    ஆமீன்.

    ReplyDelete
  2. அல்லாஹ் தங்களுக்கு ஏற்பட்ட நோயை வெகுவிரைவில் குணமாக்கி, இது போன்ற என்னற்ற சேவைகளை செய்வதற்கு தவ்ஃபீக் செய்வானாக.......

    ReplyDelete
  3. ரமளான் முடியும் வரை தண்ணீரில் சீரகம் போட்டு கொதிக்க வைத்து இளம் சுட்டியிலே அருந்தி வாருங்கள்.

    ReplyDelete
  4. மிக விரைவில் குணம் பெற அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  5. தொண்டை யில் விக்ஸ் தடவுங்கள்

    ReplyDelete
  6. لا بأس طهور إن شاء الله...
    கவலைப் படாதீர்கள். விரைவில் உங்களுக்கு பரிபூரண சுகத்தையும், முன்பைவிட அதிகமாக தீன் பணி செய்யும் ஆற்றலையும் தருவான். இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  7. لا بأس طهور ان شاء

    ReplyDelete