(நேற்று கொஞ்சம் வேலைப் பழுவினால் குறிப்புகள் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அனைத்து உலமாக்களும் உங்கள் மேலான துஆவில் அடியேனையும் இணைத்துக் கொள்ளுங்கள்.)
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ
مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே
ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான்
படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும்
பொருட்டு, உங்களைக் கிளை களாகவும்
கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர்.
நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 49:13)