Monday, August 24, 2020

கவலைகளை நீக்கும் ஸலவாத்

 

 

قال أُبيُّ بنُ كعبٍ فقلتُ يا رسولَ اللهِ إنِّي أُكثِرُ الصَّلاةَ فكم أجعلُ لك من صلاتي قال ما شئتَ قال قلتُ الرُّبعَ قال ما شئتَ وإن زدتَ فهو خيرٌ لك قال فقلتُ فثُلثَيْن قال ما شئتَ فإن زدتَ فهو خيرٌ لك قلتُ النِّصفَ قال ما شئتَ وإن زدتَ فهو خيرٌ لك قال أجعلُ لك صلاتي كلَّها قال إذًا يُكفَى همُّك ويُغفرُ لك ذنبُك

உங்கள் மீது நான் அதிகம் ஸலவாத் ஓதுகிறேன்.என் நேரங்கள் முழுவதையும் உங்கள் மீது ஸலவாத் ஓதுவதற்காக ஆக்கிக் கொள்கிறேன்

கஹ்ஃப் சூரா

 

 

من قرأ سورةَ الكهفِ كانت له نورًا يومَ القيامةِ من مقامِه إلى مكةَ ومن قرأ عشرَ آياتٍ من آخرِها ثم خرج الدجالُ لم يضرُّه

 

எவர் கஹ்ஃப் சூராவை ஓதுகிறாரோ மறுமை நாளில் அவர் இருக்கும் இடத்திலிருந்து மக்கா வரை ஒளியால் நிரப்பப்படும்.

ஒழுவுடன் உறங்குவது

 

 

من بات طاهرًا بات في شِعارِه مَلَكٌ فلَمْ يستيقِظْ إلَّا قال المَلَكُ : اللَّهمَّ اغفِرْ لعبدِك فلانٍ فإنَّه بات طاهرًا

ஒருவர் ஒழு செய்து விட்டு உறங்கினால் அவருடன் ஒரு வானவரும் உறங்குகிறார்.

Saturday, August 22, 2020

தூக்கத்தில் திடுக்கிட்டால்

 


اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَحْضُرُوْنَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி மின் கழபிஹி வ இகாபிஹி வ ஷர்ரி இபாதிஹி வ மின் ஹமஜாத்திஷ் ஷயாதீனி வ அய் யஹ்ளுரூன்.

காய்ச்சல் நீங்க

 

 

بسم الله الكبير اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ عَرَقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

பிஸ்மில்லாஹில் கபீர். அவூது பில்லாஹில் அளீம் மின் ஷர்ரி அரகின் நஆரின் வ மின் ஷர்ரி ஹர்ரின்னார்.

உடல் வலி நீங்க

 

 

اَعُوْذُ بِعزة اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا اَجِدُ وَاُحَاذِرُ

அவூது பி இஸ்ஸதில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு

வாகனம் வாங்கினால் ஓதும் துஆ

 


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا جَبِلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا جَبِلْتَهَا عَلَيْهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி.

காணாமல் போன பொருள் கிடைக்க

 

 

لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அரஃபா நோன்பு

  

صِيَامُ يَومِ عَرَفَةَ، أَحْتَسِبُ علَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتي بَعْدَهُ

அரஃபா நோன்பு அது, கடந்த வருடம் மற்றும் அடுத்த வருட பாவங்களை மன்னித்து விடும் என்று  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க

 


مَا شَاءَاللهُ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ

மாஷா அல்லாஹு லா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்ட

 

 

உங்களது வீடுகளை மண்ணரைகளாக ஆக்கி விடாதீர்கள்.எந்த வீட்டில் பகரா அத்தியாயம் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்.

வீட்டில் ஏழ்மை நீங்க

 

 

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4

பொருள்

நபியே நீங்கள் கூறுவீர்களாக! அல்லாஹ் ஒருவனே! அவன் எவரிடத்திலும் தேவையற்றவன்.அவன் யாரையும் பெற்றெடுக் கவும் இல்லை.யாராலும் பெற்றெடுக்கப்படவும் இல்லை.

பயம் நீங்க

 


اَللهُ اَللهُ رَبِّيْ لَا شَرِيْكَ لَهُ

அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா ஷரீக்க லஹு

கோபம் நீங்க

 


اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الَّرجِيْمِ

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

சிரமமான நேரத்தில்

 


يَاحَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ

யா ஹய்யு யா கய்யூமு பிரஹ்மத்திக அஸ்தகீசு

மலை போன்ற கடன்கள் நீங்க

 

اَللّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

அல்லாஹும்மக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வ அக்னினீ பிஃபள்லிக அம்மன் ஸிவாக

ரமலானில் அதிகம் செய்ய வேண்டிய 4 காரியங்கள்

 

 

واستكثِروا فيه من أربعِ خصالٍ : خَصلتَينِ تُرضون بهما ربَّكم، وخَصلتَينِ لا غنى لكم عنهما، فأما الخصلتانِ اللتان تُرضون بهما ربكم فشهادةُ أن لا إله إلا اللهُ وتستغفرونهُ، وأما اللتان لا غنى لكم عنهما فتسألونَ اللهَ الجنةَ وتعوذون بهِ من النارِ

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ;

ரமலானில் நான்கு காரியங்களை அதிகமாக செய்து கொள்ளுங்கள்.அதில் இரண்டு அல்லாஹ்வை திருப்திப் படுத்தும். இன்னொரு இரண்டை விட்டும் நீங்கள் தேவையற்று இருக்க முடியாது.

செல்வம் பெருக

 

 

لَااِلهَ اِلَّا اللهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِيْنُ

லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்

சிறு குற்றங்களை அழிக்க

 

 

لَااِلهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

ஃபர்ளான தொழுகை முடிந்த பிறகு

 

 

اَللّهُمَّ اَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَاذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ

அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம். வமின்கஸ் ஸலாம். தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.

கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்புப் பெற

 


ஃபலக் மற்றும் நாஸ் இந்த இரு சூராக்களையும் அதிகம் ஓதி வருகிற போது கண் திருஷ்டியிலிருந்து பாதுப்புப் பெறலாம்.

Thursday, August 20, 2020

ஹிஜ்ரி தொடக்கம்

 

                          

அல்லாஹ்வின் கிருபையால் ஹிஜ்ரி 1444 ஐ நிறைவு செய்து விட்டு 1445 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறோம்.இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை அடைந் திருக்கிறோம்.இந்த முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட மகத்தான மாதம்.பல்வேறு சிறப்புக் களையும் உயர்வுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிற மாதம்.

Wednesday, August 19, 2020

சூரத்துல் இக்லாஸ்

 


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ  اللَّهُ الصَّمَدُ  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

குல் ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித். வலம் யூலத்.வலம் யகுல்லஹு குஃபுவன் அஹத்.

தடையின்றி சுவனத்தில் நுழைய

 

 

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

 "அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ் வலா நவ்ம். லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாஃபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃவு இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபைன அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).

ரஜபிலும் ஷஃபானிலும் ஓத வேண்டிய துஆ

 

 

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமலான

நபியின் அன்பைப் பெற

 

اَللّهُمَّ اَعِنِّىْ عَلى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வ ஹுஸ்னி இபாததிக.

ஆபத்துக்களை விட்டு பாதுகாப்புப் பெற

 

 

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ كُلِّهَا مِنْ شَرِّ مَا خَلَقَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி குல்லிஹா மின் ஷர்ரி மா கலக.

நரக விடுதலை பெற

 

 

اَللّهُمَّ اَجِرْنِيْ مِنَ النَّارِ

அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்.

மிகச்சிறந்த தஸ்பீஹ்

 

 

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.

நம் தொழுகைகள் முழுமை பெற

 

 

استغفرالله العظيم استغفرالله العظيم استغفرالله العظيم

من كل ذنب وخطيئة واتوب اليه واسأله التوبة

அஸ்தக்ஃபிருல்லாஹல் அளீம் மின் குல்லி தன்பின் வகதீஅத்தின் வஅதூபு இலைஹி வஅஸ்அலுஹுத் தவ்பா.

பாவங்கள் மன்னிக்கப்பட

 

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ    

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்

அல்லாஹ்வின் திருப்தியைப் பெற

 

 

رَضِيْتُ بِاللٰهِ رَبًّا وَّبِالْإِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

ரளீத்து பில்லாஹி ரப்பவ் வபில் இஸ்லாமி தீனவ் வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நபிய்யா.

கவலை மற்றும் கடன்கள் நீங்க

 


اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِوَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி, வஅவூது பிக மினல் அஜ்ஸி வல் கஸலி, வஅவூது பிக மினல் ஜுப்னி வல் புஹ்லி, வஅவூது பிக மின் கலபதித்தைனி வ கஹ்ரிர் ரிஜால்.

4 ம் கலிமாவினால் கிடைக்கும் நன்மைகள்

 

                                        لا إله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து பியதிஹில் கைரு யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

ஹிஜ்ரத் தரும் பாடம்

 

ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஹிஜ்ரிப் புத்தாண்டு என்றவுடன் சட்டென்று நம் அனைவரின் நினைவிலும் சிந்தனையிலும் உதிப்பது நபி அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களும் தன் சொந்த நாட்டை விட்டு, தன் சொந்த ஊரை விட்டு, தான் வாழ்ந்த வீட்டை விட்டு, தன் குடும்பத்தை விட்டு, தன் சொத்துக்களை விட்டு, தன் சொந்த பந்தங்களை விட்டு அல்லாஹ்வின் கட்டளை என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் பொருத்தம் என்ற ஒரே இலக்கை முன்னிறுத்தி மதீனா நோக்கி இடம் பெயர்ந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஹிஜ்ரத் பயணம் தான். அந்த ஹிஜ்ரத் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இஸ்லாமிய வருடக்கணக்கு தொடங்கியது,இன்று 1442 ஐத் தொட்டிருக்கிறோம்.

ஹிஜ்ரத் ஏன்

 

அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்திக்க இருக்கிறோம்.நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய தேதிக்குறிப்பும் இஸ்லாமிய காலண்டரும் உருவாக்கப்பட வில்லை. அதற்கான தேவையும் ஏற்பட வில்லை. ஹள்ரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ரொம்ப தூரம் விரிவடைந்து உலகத்தின் பல நாடுகளிலும் இஸ்லாமியக்காற்று வீச ஆரம்பித்த போது தான் இஸ்லாமிய காலண்டருக்கான தேவையும் அவசியமும் ஏற்படுகிறது.அன்றைக்கு பக்கத்து மாகானங்களில், பக்கத்து நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஸஹாபாக்களும் அதை வலியுறுத்தினார்கள். அதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட ஹழ்ர்த உமர் ரலி அவர்கள் அதை ஆமோதித்தார்கள்.எதிலிருந்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்ற பிரச்சனை வந்த போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.அந்த நேரத்தில் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்று சொன்னதோடு அதற்கு ஒரு காரணத்தையும் குறிப்பிட்டார்கள்.

Tuesday, August 18, 2020

சுத்தம் சுகாதாரம்

 


நம் மார்க்கம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அதன் அவசியத்தை கூறியதோடு மட்டுமின்றி அதை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Sunday, August 16, 2020

துஆவின் வலிமை

 

    (குடியுரிமைப் பிரச்சனை நிலவும் நேரத்தில் பேசிய ஜும்ஆ உரை)

இப்பொழுது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலைகள் நமக்கு நன்றாக தெரியும். குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு  நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் பூர்வீகமாக வசித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு  இனிவரும் நாட்களில் நாட்டை விட்டு துறத்தப்படுகின்ற அல்லது அகதிகளாக ஆக்கப்படுகின்றன மிக மோசமான ஆபத்தான ஒரு சூழலை நோக்கி நம்நாடு போய்க்கொண்டிருக்கிறது.அல்லாஹ் அந்த ஆபத்தான சூழ்நிலை வராமல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பானாக.

Friday, August 14, 2020

கொரோனாவும் இறைச் செய்தியும்

 

            (ஐந்து மாதங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)

உலகத்தில் அல்லாஹ் எண்ணற்ற படைப்புக்களை படைத்திருக்கிறான். அந்த படைப்புக்கள் தான் அல்லாஹ்வின் வல்லமையையும் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் இருக்கிறான் என்ற உணர்வை நமக்குத் தருவது அல்லாஹ்வின் அற்புதமான படைப்புக்கள் தான்.

Thursday, August 13, 2020

படைத்தவனிடம் ஆரோக்கியத்தைக் கேட்போம்

 

இன்று உலகத்தில் நமக்கு நிறைய செல்வங்கள் உண்டு.நமக்கு அறிவைப் புகட்டுகின்ற கல்விச்செலவம், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பொருட்செல்வம், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி அமைக்கின்ற இளமைச் செல்வம், நமக்கு ஈருலகிலும் பெருமை சேர்க்கிற குழந்தைச் செல்வம், இப்படி நம் வாழ்வில் நிறைய செல்வங்கள் உண்டு.ஆனால் இந்த அனைத்து செல்வங்களிலும் ஆக உயர்ந்த, மிகவும் மேலான, ஈடுஇணையற்ற செல்வம் உடல் ஆரோக்கியம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். நோய்நொடியில்லாத சுகமான வாழ்க்கை தான் நாம் பெற்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம்.

Monday, August 3, 2020

திருமணத்தில் பரக்கத் வேண்டுமா ?



                    (இரு வருடங்களுக்கு முன்பு பேசியது)

பரவலாக எல்லா ஊர்களிலும் எல்லா பகுதிகளிலும் திருமண விஷேசங்கள் நடந்து கொண்டிருக்கிற இவ்வேளையில் திருமணம் குறித்த மார்க்கத்தின் ஒரு சில வழிகாட்டுதலை அறிந்து கொள்ள வேண்டும்.

Thursday, July 30, 2020

ஹஜ்ஜின் படிப்பினை




அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான, மற்ற மாதங்களில் இல்லாத தனிச்சிறப்பையும் மகத்துவத்தையும் உள்ளடக்கிய மாதமான  துல்ஹஜ் மாத்ததை நாம் அடைந்திருக்கிறோம்.

ஹஜ் இறுதிக் கடமையல்ல



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதமான துல்கஅதா மாதத்தில் அமர்ந்திருக்கிறோம்.

Tuesday, July 28, 2020

மாட்டிறைச்சியின் பயன்கள்




(கடந்த வருட ஜும்ஆவில் பேசியது)

அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய மாதங்களில் புனித மாதங்கள் என்றும் கண்ணியம் பொருந்திய மாதங்கள் என்றும் கூறப்படுகிற நான்கு மாதங்களில் ஒன்றான துல்கஅதா நிறைவு பெற்று துல்ஹஜ் பிறந்திருக்கிற தருணம் இது.

Monday, July 27, 2020

நம் ஆசைகள் எப்படி இருக்க வேண்டும்



உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஆசைகளும் எதிர் பார்ப்புக்களும் உண்டு. ஆனால்  அவைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒரு நோயாளி ஆரோக்கியத்தை ஆசைப்படுவான். ஒரு ஏழை செல்வத்தை ஆசைப்படுவான்.ஒரு செல்வந்தன் செல்வாக்கை ஆசைப்படுவான். மக்களிடம் செல்வாக்கைப் பெற்ற ஒருவன் பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்படுவான். இப்படி மனித உள்ளங்களில் இருக்கிற ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பல வடிவங்கள் இருக்கிறது. பல தோற்றங்கள் இருக்கிறது.

Thursday, July 2, 2020

நான் ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்





அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம்.உலகம் முழுக்க அத்தனை இடங்களிலும் தன் உள்ளத்தில் உன்னத நபியின் பிரியத்தை தாங்கியிருக்கிற ஒவ்வொருவரும் அந்த பிரியத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்களது பிறப்பை நினைத்து மகிழ்வுறும் வகையில் இந்த மாதத்தில்

இஸ்லாத்தின் பார்வையில் நிவ் இயர்





உலகம் 2021 ம் வருடத்தை நிறைவு செய்து 2022 ல் அடியெடுத்து வைக்க இருக்கிறது.  ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கிற கூத்துக்களையெல்லாம் நாம் பார்த்திருப்போம். அல்லது அறிந்திருப்போம்.

Tuesday, June 30, 2020

நபியின் மகத்தான குடும்பம்





இஸ்லாமிய மாதங்களின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். شهر الله  அல்லாஹுடைய மாதம் என்று மாநபி    அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மாதம் இந்த முஹர்ரம் மாதம். வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களையும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் நமக்கு நினைவுபடுத்துவதைப் போல வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதம் அண்ணல் நபி    அவர்களின் குடும்பமான அஹ்லு பைத்துகளை நமக்கு நினைவுபடுத்தும்.

Monday, June 29, 2020

ரமலான் இறுதியில் மூன்று கவலை




அல்லாஹ்வின் மகத்தான அருளால் அருள் நிறைந்த ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களை செய்து அந்த மாதத்தை நிறைவு செய்யும் தருணத்தில் நாம் இருக்கிறோம்.இந்த மாதத்தில் நாம் வைத்த நோன்புகள், நாம் தொழுத தராவீஹ் தொழுகைகள், நாம் செய்த தானதர்மங்கள், கடமையான ஜகாத்துகள் உட்பட நாம் செய்த அத்தனை நற்கருமங்களையும் வல்லோன் அல்லாஹ் கபூல் செய்வதோடு அதற்கு ஈருலகத்திலும் சிறந்த பகரத்தை தருவானாக.

மனத்தூய்மை



அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் :
ان الذين امنوا وعملو الصلحات كانت لهم جنات الفردوس نزلا
நிச்சயமாக ஈமான் கொண்டு நல் அமல்களைச் செய்தவர்களுக்கு தங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் எனும் தோட்டங்கள் இருக்கிறது” (அல்குர்ஆன் : 18 ; 107)

ரமலானும் துஆவும்




இது ரமழான் மாதம். ரமழானில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்களும் பாக்கியமானவை, ஒவ்வொரு நேரங்களும் பாக்கியமானவை,  ஒவ்வொரு தருணங்களும் பாக்கியமானவை.

குடியுரிமை சட்டத்தைப் பற்றி பயம் வேண்டாம்



நாட்டிலே தற்போது அச்சுறுத்தலான சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்கின்ற சூழ்நிலைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்தி விட்டார்கள். அந்த சட்டத்தை நிலை நிறுத்துவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஒன்றன்பின் ஒன்றாக அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பரக்கத் என்றால் என்ன ?



                                       

நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.

அல்லாஹ்வின் அன்பை அல்லாஹ்விடம் அன்பைக் கேட்போம்




அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம் என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியங்கள் 5 ; ஹஜ்




இஸ்லாத்தின் பார்வையில் ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் விரைவாக செய்ய வேண்டிய அடுத்து மிக முக்கியமான இறுதிக் கடமையான ஹஜ்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 4 ; திருமணம்



வாழ்க்கையில் அவசரமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப்படுத்திய வலியுறுத்திய விஷயங்களை நாம் பார்த்து வருகிறோம். அதில் ஒன்று திருமண வயதை அடைந்த பெண்ணை மணமுடித்து வைப்பது,ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஜோடி அமைந்து விட்டால் அந்தப் பெண்ணை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 3 ; விருந்தோம்பல்



வாழ்க்கையில்  எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அது உலகம் சார்ந்த காரியமாக இருந்தாலும் மறுமையை நோக்கமாகக் கொண்ட காரியமாக இருந்தாலும் அதிலே நின்று நிதானமாக அமைதியாக பக்குவமாக பொறுமையாக யோசித்து, செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு செய்து அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அந்த நிதானமும் பொறுமையும் தான் அந்த காரியத்தில் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய காரியம் 2 ; கடனை அடைப்பது.



இஸ்லாம் எதிலும் அவசரம் கூடாது, எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்ன அதே நேரத்தில் ஒரு சில காரியங்களை துரிதமாகச் செய்ய வேண்டும், சற்றும் தாமதிக்காமல் அதை தள்ளிப் போடாமல்  விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.அதில் ஒன்று கடனாளிகள் குறித்தது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 1 ; தொழுகை



வாழ்க்கை என்பது அவசரத்திற்குரியதல்ல, பதட்டத்திற்குரியதல்ல. அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மைப் பொறுத்த வரை எதிலும் நிதானம் தேவை, பொறுமை தேவை,சிந்தனை தேவை.இஸ்லாம் நமக்கு இதைத்தான் பயிற்றுவித்திருக்கிறது,பழக்கப்படுத்தியும் இருக்கிறது.

அவசரம் கூடாது



நாம் வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு குறிக்கோல் இருக்கும். ஒரு இலக்கு இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் குறிக்கோல் இல்லாமல் எந்த காரியத்தையும் நாம் செய்வதில்லை. எந்தக் காரியத்திலும் நாம் இறங்குவதில்லை.அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தக் குறிக்கோலும் இல்லாமல் இறங்குபவர்கள் நிச்சயம் புத்திசாலியாக இருக்க முடியாது.எனவே ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பயணம் தான் நம் வாழ்க்கை.

Sunday, June 28, 2020

அல்லாஹ்வின் பாதுகாப்பில் மூன்று



நாம் 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலத்தில் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.எல்லா வகையான முன்னேற்றங்களையும் சந்தித்திருக்கிறோம்.ஒரு பக்கம் எல்லா வகையான வளர்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் சந்தித்திருந்தாலும் இன்னொரு பக்கம் பல வகையான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் அன்பு கிடைத்து விட்டால் ......



உலகில் வாழும் அனைத்துப் படைப்பினங்களுக்கும்  அன்பும் இரக்கமும் இருக்கிறது. மனிதர்கள் முதல் பறவைகள்,மிருகங்கள்,சிறு எறும்பு வரை அனைத்துப் படைப்புகளும் தங்களுக்குள் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும் ஜீவன்களாகத்தான் இருக்கிறது.

அருள் நபி நாதர்



      
அண்ணல் நபி அவர்கள் அகிலத்தில் அவதரித்த மாதத்தில் அமர்ந் திருக்கிறோம்.வருடம் முழுக்க நபியைப் பற்றி பேசப்படுகிறது.நபியின் வாழ்க்கை அலசப்படுகிறது.நபியின் வரலாறுகள் குறித்து ஆராயப் படுகிறது.

அரஃபா & பெருநாள்



அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில்,  அதிலும் குறிப்பாக அரஃபாவுடைய தினத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம். நமக்கு இன்ஷா அல்லாஹ் நாளை தியாகத்திருநாளாக, நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய,

அய்யாமுத் தஷ்ரீக்



அல்லாஹ்வின் பெரும் கிருபையால் தியாகத்திருநாளை சந்தித்து தியாகத்தின் அடையாளமான குர்பானிகளைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் அமர்ந்திருக்கிறோம்.

மூன்று விதமான அநீதங்கள்




இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

அதிகாலைப் பொழுதின் மகிமை


   
இஸ்லாம் நம் வாழ்வில் பரக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகளை கற்றுத் தந்திருக்கிறது. எந்த பரக்கத்தை நபி அவர்கள் விரும்பினார்களோ,எந்த பரக்கத் வேண்டுமென்று அனைத்து நபிமார்களும் ஆசைப்பட்டார்களோ,எந்த பரக்கத்தைப் பெற்றதினால் ஸஹாபாக்கள் வளமாகவும் செழிப்பாகவும் நிறைவாகவும் வாழ்ந்தார்களோ அந்த பரக்கத்தை நாம் பெற வேண்டு மென்றால் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் அதிகாலையில் எழுதல்.