பரபரப்பும் பரிதவிப்பும் நிறைந்த இன்றைய உலகில் அனைவருமே எதிர்பார்க்கின்ற விஷயங்களில் ஒன்று அமைதி. குடும்பத்திலும் தனி மனித வாழ்விலும் ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும் ஏன் உலகம் முழுக்க அமைதி ஏற்பட வேண்டும் என்பது தான் அனைவருடைய கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் அது வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது நிஜத்தில் எங்கும் அமைதியை பார்க்க முடியவில்லை.