கடைசி பத்தில் குறிப்புகள் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் நாளை ரமலான் மாதத்தின் கடைசி பகுதியை அடைய இருக்கிறோம். இந்த பகுதியில் புனிதம் நிறைந்த லைலத்துர் கத்ர் இரவு இடம்பெற்றிருக்கிறது.
கடைசி பத்தில் குறிப்புகள் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் நாளை ரமலான் மாதத்தின் கடைசி பகுதியை அடைய இருக்கிறோம். இந்த பகுதியில் புனிதம் நிறைந்த லைலத்துர் கத்ர் இரவு இடம்பெற்றிருக்கிறது.
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.
(அல்குர்ஆன் : 38:35)
وَهُمْ
يَصْطَرِخُوْنَ فِيْهَا رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ
الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ
تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ
نَّصِيْرٍ
அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்). (அல்குர்ஆன் : 35:37)
இன்று பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தினமாக இருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்க்களம் பத்ர். இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கும் உலகம் முழுக்க பரவி விரவுவதற்கும் காரணமான ஒரு போர்க்களம். பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் அந்த போர்க்களத்தின் வழியாக ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கினான். அவற்றில் சிலதை நாம் இன்றைக்கு சிந்திக்கலாம்.
وَاِنِّىْ
مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ
ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்.) (அல்குர்ஆன் : 27:35)
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ
اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ
اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் : 24:30)
فَمَنْ
ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
ஆகவே, எவர்களுடைய
நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.(அல்குர்ஆன் : 23:102)
وَمَنْ
خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ
جَهَـنَّمَ خٰلِدُوْنَ
எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள் (அல்குர்ஆன் : 23:103)
اِذْهَبَاۤ
اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى
நீங்கள்
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். (அல்குர்ஆன் : 20:43)
فَقُوْلَا
لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்.) (அல்குர்ஆன் : 20:44)
وَ اَوْفُوْا
بِعَهْدِ اللّٰهِ اِذَا عَاهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَيْمَانَ بَعْدَ
تَوْكِيْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلًا اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا تَفْعَلُوْنَ
நீங்கள்
அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை
சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச்
சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை
நன்கறிவான். (அல்குர்ஆன் : 16:91)
இஸ்லாம் நமக்கு நற்குணங்களையும்
பண்பாடுகளும் கற்றுத் தந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம் தான் ஒரு முஸ்லிம் என்பதனை
தனது பண்பாடுகள், நற்குணங்கள் மூலம் சமூகத்திற்குத்
தெரியப்படுத்த முயற்சிக்க வேண்டும், அந்தவகையில் இஸ்லாம் நமக்கு
கற்றுத்தரும் ஈமானிய அடிப்படைப் பண்புகளில் ஒன்று வாக்குறுதிகளையும்
ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுதல்.
ஈமானிய பண்புகளில் ஒன்று ஒப்பந்தத்தை
நிறைவேற்றுவது
وعن أنس بن
مالك قال "لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له
அமானிதத்தை நிறைவேற்றும் பண்பில்லாதவருக்கு ஈமான் இல்லை. ஒப்பந்தத்தை
நிறைவேற்றும் பண்பில்லாதவருக்கு மார்க்கம் இல்லை. (தப்ரானி)
பெருமானாரைப் பற்றி அபூசுஃப்யான் ரலி
அவர்கள்
قال: فهَلْ
يغدِرُ؟ قال: قُلْتُ: لا، ونحنُ منه في مدَّةٍ - أو قال: هُدنةٍ - لا ندري ما هو
صانعٌ فيها ما أمكَنني مِن كلمةٍ أُدخِلُ فيها شيئًا غيرَ هذه
அபூ ஸுஃப்யான்
மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதை பிய்யாவில் ஒப்பந்தம்
செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக
ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும்
போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், கேட்ட
கேள்விக்கு அபூ சுபயான் அவர்கள் பதில் சொன்ன அந்த நீண்ட ஹதீஸில் இப்படி ஒரு
கேள்வியும் இடம் பெற்று இருந்தது.
மன்னர்: அவர்
மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்:
இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர்
செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை
கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு
வாய்ப்பு கிடைக்கவில்லை.)(ஸஹீஹ்
இப்னு ஹிப்பான் ; 6555)
இந்த பண்பை நபி ஸல் அவர்கள் நிர்பந்தமான நெருக்கடியான எல்லா
காலகட்டங்களில் பாதுகாத்து வந்தார்கள்.
حذيفة بن
اليمان، قال: "ما منعني أن أشهد بدرًا إلا أني خرجت أنا وأبي حسيل، قال:
فأخذنا كفار قريش، قالوا: إنكم تريدون محمدًا، فقلنا: ما نريده، ما نريد إلا
المدينة، فأخذوا منا عهد الله وميثاقه لننصرفن إلى المدينة، ولا نقاتل معه، فأتينا
رسول الله صلى الله عليه وسلم، فأخبرناه الخبر، فقال: ((انصرفا، نفي لهم بعهدهم،
ونستعين الله عليهم))"؛ رواه مسلم في صحيحه.
ஹுதைஃபா பின்
அல்யமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நான் பத்ருப்
போரில் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நானும் என்
தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது
குறைஷிக் காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து
எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று
கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை
மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பி விட
வேண்டும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து
(குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம்
வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள்
இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது
வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று
சொன்னார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்)
கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத்
திகழ்ந்தவர்கள் உத்தம நபிகளாரும் அவர்கள் உருவாக்கிய அருமைத் தோழர்களுமே என்பதனையே
மேலுள்ள செய்தி எமக்கு அறியப்படுத்துகின்றது,
ஹுதைபியாவின் போது அபூஜந்தல் ரலி அவர்கள்
أسلم أبو جندل
العاص بن سهيل بن عمرو بن عبد شمس بن عبد ود بن نصر بن حسل بن عامر بن لؤي بن غالب
القرشي[1][2] في مكة قديمًا،[2][3] إلا أن أباه حبسه وقيّده وعذّبه ومنعه من
الهجرة مع المسلمين إلى يثرب.[1][2][
وبينما الكتاب يكتب إذ
جاء أبو جَنْدَل بن سهيل يَرْسُفُ في قيوده، قد خرج من أسفل مكة حتى رمي بنفسه بين
ظهور المسلمين، فقال سهيل : هذا أول ما أقاضيك عليه على أن ترده فقال النبي صلى
الله عليه وسلم : ( إنا لم نقض الكتاب بعد ) .
فقال : فوالله إذا لا
أقاضيك على شيء أبداً . فقال النبي صلى الله عليه وسلم : ( فأجزه لي ) . قال : ما
أنا بمجيزه لك . قال : ( بلى فافعل ) ، قال : ما أنا بفاعل . وقد ضرب سهيل أبا
جندل في وجهه، وأخذ بتلابيبه وجره ؛ ليرده إلى المشركين، وجعل أبو جندل يصرخ بأعلى
صوته : يا معشر المسلمين، أأرد إلى المشركين يفتنوني في ديني ؟ فقال رسول الله صلى
الله عليه وسلم : ( يا أبا جندل، اصبر واحتسب، فإن الله جاعل لك ولمن معك من
المستضعفين فرجاً ومخرجا، إنا قد عقدنا بيننا وبين القوم صلحاً، وأعطيناهم على
ذلك، وأعطونا عهد الله فلا نغدر بهم ) .
அபூஜந்தல் ரலி
அவர்கள் மக்காவில் முன்பே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா
வந்து விட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களுடைய தந்தை சுஹைல் அவர்களை
தடுத்து காலில் விலங்கிட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி வீட்டில் அடைத்து
வைத்திருந்தார்.
ஹுதைபிய்யாவின் ஒப்பந்தம்
எழுதிக் கொண்டிருக்கும் போது ஒப்பந்தம் எழுதுவதற்கு வந்த சுஹைல் பின் அம்ரின் மகன்
அபூ ஜந்தல் (ரழி) மக்காவின் கீழ்புறமாக வெளியேறி கையில் விலங்குகளுடன்
முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து விழுந்தார். அவரைப் பார்த்த சுஹைல் “இது நான்
உம்மிடம் நிறைவேற்றக் கோரும் முதல் விஷயமாகும். இவனை நீ திருப்பி அனுப்பி விட
வேண்டும்” என்று கூறினார். நபியவர்கள் “நாம் இன்னும் இப்பத்திரத்தை எழுதி முடிக்க வில்லையே”
என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நீர் அப்படி
செய்ய வில்லை என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எவ்விஷயத்திலும் உம்மிடம்
உடன்படிக்கை செய்து கொள்ள மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு
நபியவர்கள், “இக்கோரிக்கையை நீ எனக்கு நிறைவேற்றிக் கொடு”
என்று கூறினார்கள். ஆனால், அவன் “நான் ஒருக்காலும் நிறைவேற்றித்
தர மாட்டேன்” என்று முரண்டு பிடித்தார். நபியவர்கள் “இல்லை நீ எனக்கு நிறைவேற்றியே
ஆக வேண்டும்” என்று கூறினார்கள். ஆனால், அவர் “அது
என்னால் முடியாது” என்று முற்றிலுமாக மறுத்து விட்டார். பிறகு அபூ ஜந்தலின்
முகத்தில் அறைந்து அவரது கழுத்தைப் பிடித்து இணைவைப்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க
சுஹைல் இழுத்துச் சென்றார்.
முஸ்லிம்களை
விட்டு பிரியும் போது அபூஜந்தல் மிக உரத்தக் குரலில் “முஸ்லிம்களே! நான்
இணைவைப்பவர்களிடமா திரும்ப கொண்டு போகப்படுகிறேன்? எனது
மார்க்கத்தில் என்னை அவர்கள் சோதிக்கின்றனரே!” என்று கதறினார். “அபூ ஜந்தலே!
சகித்துக் கொள். நன்மையை நாடிக்கொள். உனக்கும் உன்னுடன் இருக்கும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும் மகிழ்ச்சியையும் நிச்சயமாக அல்லாஹ்
தருவான். நாங்கள் இக்கூட்டத்தினருடன் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை
நிறைவேற்றுவது எங்கள் மீது கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த
உடன்படிக்கையைச் செய்திருக்கிறார்கள். எனவே, நாங்கள்
மோசடி செய்ய முடியாது” என்று நபியவர்கள் கூறினார்கள். (அர்ரஹீகுல்
மக்தூம்)
நபியவர்களின் மரணத்திற்குப் பிறகும்
அவர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது
أنَّ
النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ أرسَلَ العَلاءَ بنَ الحَضْرميِّ إلى المُنذرِ
بنِ ساوَى عامِلِ الفُرسِ على البَحرينِ يَدْعوه إلى الإسلامِ فأسْلَمَ، وصالَحَ
مَجوسَ تلك البلادِ على الجِزيةِ، وتلك المرَّةُ التي وَعَدَ فيها النَّبيُّ صلَّى
اللهُ عليه وسلَّمَ جابرًا بسَهْمٍ مِن جِزيةِ البَحرينِ، لمْ يأْتِ المالُ ولم
يَصِلْ إلى المدينةِ إلَّا بعْدَ أنْ ماتَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ
وقُبِضَت رُوحُه، وتَولَّى الخلافةَ بعْدَه أبو بَكرٍ الصِّدِّيقُ رَضيَ اللهُ
عنه، فلمَّا جاءَ مالُ البَحرينِ أمَرَ أبو بَكرٍ رَضيَ اللهُ عنه مُناديًا -قيل:
إنَّهُ بِلالٌ- فنادَى: مَن كانَ لهُ عِندَ رَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ
دَينٌ أو وَعْدٌ بمالٍ، فلْيَأتِنا كيْ نُوفِيَهِ حَقَّه، وقدْ أمَرَ أبو بَكرٍ
بذلك لعِلمِه بما كان يَفعَلُه النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ مِن الوُعودِ
أو الاستدانةِ لقَضاءِ حَوائجِ النَّاسِ حتَّى يَصِلَ مالُ الجِزيةِ أو الفَيءِ.
لو قد جاءنا
مالُ البحرينِ لقد أعطيتُك هكَذا وهكذا وهكذا ، وقال بِيدَيهِ جميعًا ، فما قَدِمَ
مالُ من البحرينِ حتى قُبضَ النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ ، فلما قَدِمَ مالٌ
من البحرينِ ، قال أبو بكرٍ : مَن كان له على رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ
وسلَّمَ دَيْنٌ أو عِدَةٌ ، فليأتِنا ، قال جابرٌ : فأتيتُ أبا بكرٍ ، فقلتُ :
إنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وَعَدَني إذا قَدِمَ مالٌ من البحرينِ
أعطيتُك هكَذا وهكذا وهكذا ، قال : فَحَثَى لِيَ أبو بكرٍ حَثْيةً ، ثم قال لي :
عُدَّها ، فإذا هي خمسمائةٍ ، قال : خذْ مثلَها مرتينِ ، وزاد فيه ابنُ المنكدرِ :
ثم أتيتُ أبا بكرٍ بعدَ ذلكَ ، فردَّني ، فسألتهُ فردَّني ، فقلتُ في الثالثةِ :
سألتُكَ مرتينِ فلم تُعطِني ؟ فقال : إنك لم تأتني مرةً إلا وأنا أُريدُ أنْ
أُعطيَك ، وأيُّ داءٍ أدوأُ من البُخلِ
الراوي : جابر
بن عبدالله
ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்)
அவர்கள் வபாத்தான போது அபூபக்கர் (ரழி) அவர்களிடம் அலா இப்னு ஹழ்ரமீ (ரழி)
அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்கர் (ரழி), “யாருக்காவது
நபியவர்கள் கடன் பாக்கி தரவேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து
யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின்
உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)” என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான்,
“எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும்
தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். –
“இப்படிக் கூறும் போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர் (ரலி)
அவர்கள் மூன்று முறை விரித்துக் காட்டினார்கள்” என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு
அலீ (ரஹ்) கூறினார்கள் , அபூபக்கர் (ரழி) என் கையில் (முதலில்
பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி
வைத்தார்கள். (ஸஹீஹுல் புஹாரி)
நபிகள் நாயகம்
ஸல் அவர்கள் ஹயாத்தாக இருக்கும் பஹ்ரைனிலிருந்து பொருளாதாரம் வந்தால் உனக்கு
இவ்வளவு தருகிறேன் என்று ஜாபிர் ரலி அவர்களிடம் கூறியிருந்தார்கள். அது
வருவதற்குள் நபி ஸல் அவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை
ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் நிறைவேற்றினார்கள்.
நபியவர்கள் மரணித்தாலும்
அவர்கள் உயிரோடிருக்கின்ற வேளையில் கொடுத்த வாக்குறுதிகள் கூட அவர்களது
மரணத்தோடு மரணித்து விடக் கூடாது என்பதில் நபித்தோழர்கள் மிகவும் கவனமாக இருந்து
அவர்களது மரணத்துக்குப் பின்னரும் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்தனர்,
இதுவே அவர்கள் உருவாக்கிய தோழர்களின் உயர்ந்த பண்பாகும்.
அல்லாஹ் இந்த பண்பை நம் அனைவருக்கும் கொடுத்தருள்புரிவானாக!
கடந்த கால பதிவுகள்
2023 அழைப்புப் பணி
2024 ஏன் இந்த அவசரம்
வாஹிதிகள் பேரவை பெற்றோரைப் பேணுவோம்
يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ
وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ
(எனினும், அதில்) அவன் நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லாக் காரியங்களும் தவறாது நடைபெறும்.) (அல்குர்ஆன் : 13:39)
عن ابن عباس
قال: قال أبو بكر: يا رسولَ اللهِ، أَراكَ قد شِبْتَ، قال: «شَيَّبَتْني هُودٌ،
والواقعةُ، والمُرسَلاتُ، و﴿عَمَّ يَتَساءَلُونَ﴾، و﴿إِذا الشَّمْسُ كُوِّرَتْ﴾
அபூபக்கர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்களுக்கு (விரைவாக) நரை ஏற்பட்டு விட்டதே என்று கேட்டார்கள். ஹூத்,வாகிஆ,முர்ஸலாத்,நபஃ, தக்வீர். இந்த அத்தியாயங்கள் எனக்கு நரையை ஏற்படுத்தி விட்டன என்றார்கள். (திர்மிதி ; 3297)
وَاَوْحَيْنَاۤ
اِلَىٰ مُوْسٰى وَاَخِيْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوْتًا
وَّاجْعَلُوْا بُيُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ
(ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹீ அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் : 10:87)
وَاَعِدُّوْا
لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ
تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ
لَا تَعْلَمُوْنَهُمُ اَللّٰهُ يَعْلَمُهُمْ وَمَا تُـنْفِقُوْا مِنْ
شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ
அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 8:60)
يٰبَنِىْۤ
اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ
يَذَّكَّرُوْنَ
ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (அல்குர்ஆன் : 7:26)
وَمَا مِنْ
دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ
اَمْثَالُـكُمْ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ ثُمَّ اِلٰى
رَبِّهِمْ يُحْشَرُوْنَ
பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன் : 6:38)
لَا يُحِبُّ
اللّٰهُ الْجَــهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ
اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا
அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான். (அல்குர்ஆன் : 4:148)
குர்ஆனின் நான்காவது அத்தியாயமான நிஸா சூரா இன்று தொடங்கி அதன் வசனங்கள் ஓதப்பட்டது. குர்ஆனில் உள்ள முக்கியமான சூராக்களில் இதுவும் ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சூரா இது.ஏனெனில் இந்த அத்தியாயத்தில் குடும்ப அமைப்பு, கணவன் மனைவி உறவு சீராக இருப்பதற்கான அறிவுரைகள், உறவை சேர்ந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வசனங்கள், வாரிசுரிமை சட்டங்களை விரிவாக பேசும் வசனங்கள், இஸ்லாத்தின் அடிப்படைக் கூறுகளை கூறும் வசனங்கள், ஜகாத்தை குறித்த வசனங்கள், பிறருடைய உரிமைகளையும் கடமைகளையும் உணர்வுகளையும் பேண வேண்டும் என்பதை உணர்த்தும் வசனங்கள்.இவ்வாறு சமூக மக்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளை இந்த அத்தியாயம் சுமந்திருக்கின்றது.
اَلَمْ تَرَ
اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ
اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ
مُّعْرِضُوْنَ
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள். (அல்குர்ஆன் : 3:23)
هُنَّ لِبَاسٌ
لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு அணையாகவும் இருக்கின்றீர்கள். (பகரா 187)
ذٰ لِكَ
الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
இதுதான்
வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக்
காட்டும். (அல்குர்ஆன் : 2:2)
الَّذِيْنَ
يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ
يُنْفِقُوْنَۙ
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 2:3)