உலக மக்களை சீர்திருத்த அவர்களை நலவழிப்படுத்த நன்மைகள்
எது தீமைகள் எது என்று சொல்லி அவர்களை பன்படுத்த எதை எப்படி செய்ய வேண்டும் யாரிடத்தில்
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தி அவர்களை பக்குவப்படுத்த உன்னத
மறையான அல்குர்ஆன் ஷரீஃபை எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் மாநபி ஸல் அவர்களின் மூலமாக
நமக்கு வழங்கியிருக்கிறான்.குர்ஆன் ஷரீஃபை நம் கையில் கொடுத்து அந்த அல்குர்ஆன்
ஷரீஃபிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதை எவ்வாறு அனுக வேண்டும்
என்பதையும் நமக்கு தெளிவுபடுத்தி விட்டான். அல்குர்ஆன் அருளப்பட்ட நபி ஸல்
அவர்களும் அதை தெளிவுபடுத்தியிருக் கிறார்கள்.